ullal

Wednesday, January 25, 2006

கருத்து கணிப்புகளும், கிளி ஜோசியமும்

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு - பிஜெபி கூட்டணி - 242-252
NDTV இந்தியன் எக்ஸ்பிரஸ் - பிஜெபி கூட்டணி - 287-300
ஸ்டார் நியுஸ் - பிஜெபி கூட்டணி - 267-279
ஆஜ் தக் டிவி - பிஜெபி கூட்டணி - 282

இத்தனை புள்ளி விவரமும் தவறாக இருக்க சாத்தியம் இல்லை. கருத்துக் கணிப்பு சரியாக நடத்தப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அல்லது தங்கள் விருப்பத்தை புள்ளி விவரமாக வெளியிட்டுள்ளார்கள் என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை லயோலா கல்லூரி சரியாக கணித்திருந்தது.
மீண்டும் இந்த விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது.

வலைப்பதிவிலும்இப்பொழுது கருத்து கணிப்பு நடக்கிறது. என்னால முடிஞ்சது நாலு கள்ள ஓட்டு போட்டாச்சு.

(http://www.indolink.com/displayArticleS.php?id=032604071231http://www.rediff.com/election/2004/may/04poll.htmhttp://www.prdomain.com/articles_journalists/pr_opinion.htm )

Monday, January 23, 2006

தமிழக அரசு டேக் ஓவர்?

அராஜகம் செய்யும் நிறுவனங்களை அம்மா டேக் ஓவர் செய்வதாகக் கேள்வி.உலகம் பூராவும் கோகோ கோலேவையும், மைக்ரொசாப்டைப் பற்றியும்ஏகப்பட்ட கம்ப்ளெயின் ட். ஒரு அவசரச் சட்டம் போட்டு இவற்றையும்அம்மா டேக் ஓவர் செய்ய வேண்டும். இந்த உலக மயமாக்கல் நேரத்தில்இப்படி செய்தால், எந்த நிறுவனமும் முதலீடு செய்ய தமிழகத்துக்கு பக்கத்திலேயே வராது.

இப்பொழுது ஜெயாடிவியையும், சன் டிவியையும் தனித்தனியா பாத்துகூட்டி கழிச்சு உணமை செய்தியை தெரிந்துக்கொள்கிறோம். இது அரசாங்கமொனாபலி (bali)யாக மாறினால் ஆளுங்கட்சி தரும் செய்தியைதான் பார்க்க முடியும்.முன்னொரு காலத்தில் ஹிந்தி செய்தியும், சீரியலும் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்ததூர்தர்ஷன் நினைவுக்கு வருது.
அப்புறம் விதவிதமான சேனல்களில் ஹால் வரும் அனைத்து ஆபாசத்துக்கும்,அபத்தங்களுக்கும் தமிழக அரசின் கோபுர முத்திரை கிடைக்குமா என்றுஒரு சின்ன சந்தேகம்.

கேயார், பாரதிராஜா, அபிராமி ராமநாதன், விஜய டி. ராஜேந்தர் இவர்களின்நிறுவனங்களும், வீடுகளும் எதிர்காலத்தில் யாராவது டேக் ஓவர் செய்தால்ஆதரிப்பார்களா? இது ரெண்டாவது சந்தேகம்.
கூட்டணி கட்சிகளின் மேடையில் கம்யூனிசம் பேசும் கருணாநிதிக்கு இந்த டேக் ஓவரில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? தனியார் சொத்துக்களைநேசனலைஸ் செய்வது அவருக்கு புதுசல்ல என்று நினைக்கிறேன். முன்னெப்போதோடிவிஎஸ் நிறுவனத்தில் ஒரு யூனிட்டை அரசாங்க மயமாக்கியதாக எப்பொழுதோ தினமலரில் படித்த ஞாபகம். திட்டவட்டமாக தெரியவில்லை.

இரண்டு கட்சிகளின் அராஜகத்தையும் சந்தித்த தெருவோர கேபிள் ஆபரேட்டர்கள் தற்போது குழப்பத்தில் இருப்பதாகதான் அறிகிறேன். யாரும் பட்டாசு கொளுத்தியதாக தெரியவில்லை.

Thursday, January 12, 2006

திருவாதிரை என்ற ஆணாதிக்கப் பண்டிகை

சிறு வயதில் இந்த பண்டிகை பிடிக்கும். அம்மா செய்து வைக்கும் திருவாதிரைக் களி, வடை பாயசம் சாப்பிடலாம். அப்புறம் ஒரு கயிறு கட்டிவிட்டு, அப்பா காலில் விழுந்தால் ஒரு ரூபாய் கிடைக்கும்.

என் கணவர் வீட்டில் இந்த பண்டிகையின்போது பெண்கள் கணவருக்காக மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்து அப்புறம் தெம்பு இருந்தால் அவர்களே சமைத்து பூசை செய்து நோன்பு நோப்பார்கள்.

அமெரிக்கா வந்துவிட்டதால் இந்த கொடுமையிலிருந்து விடுதலை. மேலும் இதுஎம் உடல் நிலைக்கு ஒத்து வராது.

சிதம்பரம் என்றாலே ஆணாதிக்கம்தான். ஒரு பத்து வருடத்துக்கு ஒரு முறையாவது கணவன்மார்கள் தங்கள் மனைவிக்காக விரதம் இருக்கக் கூடாதா?

அப்படி ஏதாவது பண்டிகை இருக்கிறதா?

தமிழ் கம்பைலர்

'வெற்று முதன்மை' function காணவும்.

நல்ல முயற்சிதான்.

இது போன்ற முயற்சிக்கு உண்மையிலேயே மார்க்கெட் இருக்கா?

http://www.infitt.org/ti2003/papers/15_ganesh.pdf#search='swaram%20a%20language%20for%20programming%20in%20tamil'

Wednesday, January 11, 2006

சம்ஸ்கிருதம் படித்தால் IT வேலை கிடைக்குமா

சமீபத்தில் சம்ஸ்கிருத கல்லூரியில் ஒரு விழாவில் வீரசண்முகமணி என்ற கலெக்டர் பேசியது, "சம்ஸ்கிருதம் படித்தால் வேலை கிடைக்காது என்று நினைக்காதீர்கள். சம்ஸ்கிருதம் கம்ப்யூட்டருக்கு நெருக்கமான மொழி"(Sanskrit is computer friendly language.) என்று பேசியதாக ஆங்கில அறிவுஜீவி பத்திரிகை 'ஹிண்டு ' செய்தி வெளியிட்டிருந்தது. (தற்போது கைவசம் link இல்லை.)
இந்த உண்மை தெரியாமல் இவ்வளாவு வருசம் இந்த துறையில் குப்பைகொட்டியிருக்கோம் என்று நினைத்தால் வெட்கமாக உள்ளது.

சமீபத்தில் இந்தியா வந்த பில் கேட்ஸ் இந்தியர்கள் சம்ஸ்கிருத அறிவால் எங்கே விண்டோ ஸை காலி பண்ணிவிடுவார்களோ என்று உளவறிந்துவிட்டு போனார். இவர் ஓய்வு நேரத்தில் ஜார்ஜ் ஹார்ட்டிடம் சம்ச்கிருதம் படிப்பதாகக் கேள்வி.

அப்புறம் நாசா ராக்கெட்ல கூட சம்ச்கிருத ப்ரோகிராம் தான் என்று டெல்லி கணேஷ் மாநாட்டில் பேசியிருக்கிறார்.

niit கூட சம்ஸ்கிருத certification பாடத்தை தங்கள் நிறுவனத்தில் சேர்க்கப்போகிறதாம்.சம்ஸ்கிருதம் தெரிந்த பொறியியலாளர்களுக்கு ஆரம்ப சம்பளம் 100000 டாலர்கள் என்று dice.com சொல்லுகிறது.

Monday, January 09, 2006

ஸ்ரீ ராம பிரான் சொன்ன தலாக்

எனக்கு தெரிந்த ஒரு பெண். ஒரிஜினல் பெயர் வெளியிட வேண்டாம் என்று ரேகா என்று குறிப்பிடுகிறேன். இவளுக்கு திடுமணம் ஆகி கொஞ்ச காலம்எல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஒரு குழந்தையும் உண்டானது. கணவன் கொஞ்சம் சந்தேகக் கேஸ். இந்த சந்தேகம் ரொம்ப பெரிசாகி சண்டை வந்து கடைசியில் அவளை விலக்கி வைத்துவிட்டான்.

ரேகாவுக்கு பிறந்த வீட்டிலும் ஆதரவு இல்லை. வயிற்றில் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறி, சில நல்லவர்களின் உதவியோடு வீட்டுவேலை செய்து, குழந்தையைப் பெற்று ஆளாக்கியும் விட்டாள். குழந்தைக்கு பத்து வயதாகிறது. இப்பொழுது அவள் கணவன் குழந்தையைச் சென்று ஸ்கூலில் பார்த்து பேசுகிறான். குழந்தையை அவன் அழைத்துச் செல்வதற்கு வழக்கு போட்டிருக்கிறான்.

இவ்வளவு நாளாக அவள் அந்த குழந்தையை எப்படிபெற்று வளர்த்தாள் என்று சிறிதும் கவலைப்படாத இந்த ஆள் திடீரென்றுகுழந்தையை பிரித்து செல்ல முயற்சி செய்கிறான். இந்து திருமணச்சட்டப்படி இது சாத்தியமே. இப்பவும் அவன் ரேகாவை மீண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவளும் அதை விரும்பவில்லை.
இவ்வளவு நாளாக கச்டப்பட்டு வளர்த்த மகனையும் இழக்க விரும்பாமல் ,வழக்கை சந்திக்க பொருள் செலவையும் செய்து இவள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை.

இந்த நிலையில் அவள் என்ன செய்யலாம்?ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

(இது ராமாயண சீதையின் கதை . இந்த பழைய பதிவு புதிய பெயருடன் மறுபதிவு செய்யப்படுகிறது )