ullal

Friday, May 26, 2006

விருத்தாச்சலம் (டூப்) எம்.எல்.ஏ பிரேமலதா பேட்டி

Mrs.விஜயகாந்த் தின் குமுதம் பேட்டியிலிருந்துசில துளிகள் (நினைவிலிருந்து எழுதப்பட்டது)

துளி 1
விருத்தாச்சலத்தில் தெரு விளக்குகள் கூட இல்லாமல்இருக்கிறது. கார் ஹெட்லட் வெளிச்சத்தில் பிரச்சாரம் பண்ணிணோம். முந்திரி ஏற்றுமதி செய்ய நிறுவனம் இல்லை.நிலங்களை NLCக்கு எழுதி கொடுத்துவிட்டு இளைஞர்கள் வேலை இல்லாம்ல இருக்கிறார்கள்.

துளி 2 நாங்க சம்பாதிச்சதை சொத்தாக மாற்ற எண்ணியிருந்தா சென்னையில பாதிய (அம்மாடியோஓஒஓஓஓஓஓஓஓஓவ்)வாங்கியிருக்கலாம்.

(இப்ப தெரியுது ஏன் விருத்தாச்சலத்தில வெளக்கு இல்லன்னு.)

துளி 3
பொறியியல் கல்லூரியை விற்கவில்லை. மாணவர்கள் படிப்பு விஷயத்துல கை வெக்க மாட்டோம்.வேறு ஒருசொத்து கைவிட்டுப்போச்சு.

(அக்காவின் கல்விச் சேவை வாழ்க)

சிவப்பில் இருப்பது சொந்த கமென் ட்

Wednesday, May 24, 2006

மிஷன் 'பொதுஜனம்'

கிருத்துவர்களுக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீடு தேவையா?

தமிழக அரசு கவர்னர் உரை (அ) தேர்தல் அறிக்கையிலிருந்து
http://www.tn.gov.in/tnassembly/Governors_address_May2006_2.htm

46. Necessary Legislation for providing reservation for Christian and Muslim religious minorities in all educational institutions 'and' employment opportunities will be introduced.

இங்கிருந்து http://www.hindu.com/2006/05/22/stories/2006052202261100.htm
எடுத்த 1999-2000 - இல் NOSS புள்ளி விவர கணிப்பு.
























அனேகமாக தமிழ்நாட்டிலும் இது போன்ற நிலைதான் இருக்குமென்று நினைக்கிறேன்.

கல்வியில் பின்தங்கிய SC/ST, Muslim, OBC க்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது ஏன் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது.அதிலும் பயனடைபவர்களைப்பற்றி விபரங்கள் வெளிப்படையாக எங்காவது இருக்கிறதா?

Over represented group இல் வரும் கிருத்துவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு என்று யாருக்காவது புரிகிறதா? மற்ற over represented குழுக்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை ? தமிழ்நாட்டில் கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் கிருத்துவர்கள் பின்தங்கியுள்ளனரா? அல்லது இதற்கு வேறு (மதச்சார்பற்ற) அடிப்படை இருக்கிறதா? தமிழ்நாட்டுக்கும் ஒரு sting operation செய்யவேண்டும். மிஷன் பொதுஜனம் என்று பேர் வைக்கலாம்.

இங்கு ஓட்டு வங்கி அரசியல் நடப்பதாக சிலர் குற்றம் சாட்டியதை நம்பாமல் இருக்க முடியவில்லை. சரியான புள்ளி விபரமும் இல்லை.புள்ளி விபரங்களை 'யாருமே' விரும்பவும் இல்லை. திருதராஷ்டிரர் போல பொதுஜனம் இருக்கிறது.

Jaihind.

Saturday, May 20, 2006

இட ஒதுக்கீடு

பத்ரியின் (http://thoughtsintamil.blogspot.com ) பதிவிற்கு பின்னூட்டமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.


//புள்ளியியல் ஆதாரம் யாராவது திரட்டியுள்ளனரா என்று அறிய ஆவலாக இருக்கிறேன். //

இதைத்தான் நானும் தேடிகிட்டிருக்கேன். எந்த புள்ளி விவரமும் இல்லாமல்யார் பயன் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. அரசியல்வாதிகளின் கூச்சல்தான் நிறைய கேட்கிறது.

சென்ற வருடம் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெற்றவர்களின் பொருளாதார நிலை என்ன என்ற விபரம் எங்கே கிடைக்கும்? கீற்றுவில் ஒரு கட்டுரை கிராமத்து மாணவர்களுக்குஇட ஒதுக்கீட்டில் 20% தான் கிடைக்கிறாது.. 80 % ஒதுக்கீட்டையும் நகரத்து eliteபள்ளி மாணவர்களே பெறுகிறார்கள் என்று கூறுகிறது. அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த சொல்லி ஒருவரும் போராடுவது இல்லை. அரசியல்வாதிகள்இது பற்றி பேசுவதே கிடையாது.

2. creamy layer வேண்டும் என்பது சரி. இதில் உள்ள பிரச்சினைகள் இரண்டு.வருடா வருடம் inflation க்கு ஏற்றாற்போல் உயர்த்தாவிட்டால் சீக்கிரம் குடிசைவாழ் மக்கள் கூட creamy layerக்கு வந்து விடுவார்கள்.
வேலைக்கு போகிறாவர்கள் சம்பள certificate கொடுக்கலாம். சிறுதொழில் செய்பவர்களின்வருமானத்தை இந்தியாவில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். பெரும்பாலோர்வருமான வரி செலுத்துவதில்லை. மளிகை கடை department store வைத்திருப்பவரும் பொட்டிக்கடை வைத்திருப்பவரும் பொட்டிக்கடை வருமானத்தை claim பண்ணலாம்.

இ஢ரண்டாவது தலைமுறையில் இடஒதுக்கீடு கோருபவர்கள் இன்னும்இட ஒதுக்கீடே அனுபவிக்காத முதல் தலைமுறையிடம் போட்டியிடுகிறார்கள்.இதில் ஜெயிப்பவர்கள் யாராக இருக்கும் ?
பிற்படுத்தப்பட்டவர்கள் இதை சீரியசான பிரச்சினையாக எடுக்க வேண்டும்.

3பிரபு ராஜதுரை எழுதியது//மருத்துவ, பொறியியல் படிப்புகளில் மேற்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு ஏன் கூடாது என்பதற்கு, யாரோ ஒருவருடைய வலைப்பதிவில் விவாதத்திற்குறிய ஒரு காரணம் படித்தேன். //

இதற்கு காரணம் சமூகத்தின் அடுத்த தலைமுறை leadership அனைத்துபிரிவுகளில் இருந்து வரவேண்டும் என்பதுதான். இதனால்தான் IIM இல் அனவருக்கும் பிரதினிதித்துவம் வேண்டும். இவர்கள் அடுத்ததலைமுறை நிறுவனங்களின் தலைவராக வரும்போது இவர்கள்சார்ந்த சமூகம் பலனடைவார்கள் என்று சொல்கிறார்கள். இதைUS supreme court judgementஇலிருந்து எடுத்து சொல்கிறேன்.

(உடனே IIMக்கும் US supreme courtக்கும் என்ன சம்மந்தம்என்று பின்னூட்டம் இட வேண்டாம்)

4. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
வெளிநாடுகளில் recruitment போது அனைத்து பிரிவினரும் கலந்து இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். promotionஇல்லெந்த வேறுபாடும்கடைபிடிப்பதில்லை. நிர்வாகத்தினர் ஒரே பிரிவாக இல்லாமல் அனைவரும்கலந்து இருக்குமாறு செய்கிரார்கள்.

பாலா எழுதியது//5. சலுகை என்று வந்து விட்டாலே, அது இன்னொருவரின் உரிமையில் இருந்து பறிக்கப்பட்டதுதான் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். //

இதற்கு ஒரு 'மாதிரியான' பதில் சொல்ல முடியும். அதை தவிர்க்கிறேன்.
வேறு மாதிரி சொல்லவேண்டுமென்றால் Bill clinton பாணியில் சொன்னால் you try to help more people than it hurts. இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்காகசெய்யப்படுவது. இப்பொழுது பின்தங்கியவர்கள் அதிகம் இருப்பதால்தீவீரவாதம் , நக்ஸலிசம் பெருகுகிறது என்பதை புரிந்துகொள்ளமுயற்சி செய்யுங்கள். ஜனநாயக அமைப்பில் பகவ்த் கீதையைகாண்பித்து யாரையும் அடக்க முடியாது.

6. மண்டல் பரிந்துரையை 50 வருடங்களுக்கு மேல் ஊர போட்டுவிட்டுஇப்பொழுது புள்ளிவிபரம் பழசாகிவிட்டது மீண்டும் A B c D யிலிருந்துஆரம்பிக்கலாம் என்று ஸ்வாமிநாதன்கள் எழுதலாம். அதற்குள்இன்னொரு ஐம்பது வருடங்களும் ஆகலாம். இந்த விளையாட்டைவிரும்பும் மூடில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
(ரவி ஸ்ரீனிவாஸின் பதிவு பார்க்கவும்)

7. இந்த முன்னேறிய, பிற்படுத்தப்பட்ட லிஸ்டுகள் update செய்கிறார்கள்என்றே நினைக்கிறேன்.

8. சமீபத்தில் நடந்த ஒரு கூத்தையும் எழுதவேண்டும். thatstamil.comஇல் ஒரு செய்தி வந்தது. ஒரு வேளாள மாநாடு நடந்தது. இப்பொழுதுஓரளவு வேளாளர்களின் உட்பிரிவுகளுக்கிடையே திருமணங்கள்நடப்பதால் முன்னேறிய வேளாளர்களும் பிற்படுத்தப்பட்ட வேளாளர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே பிரிவாக பிற்படுத்தப்பட்டவர்களாகிவிடலாம் என்று யோசனை வைத்தார்கள். இதில் முன்னின்று கூட்டம் போட்டவர்கள் vice chancellor, நீதிபதிகளாக இருந்துரிடையர் ஆனவர்கள். இப்படி செய்தால் அதனால் யார் பலனடைவார்கள்யார் ஏமாறுவார்கள் என்று guess பண்ணுவது சுலபம்.

இந்த முன்னேறிய வேளாளர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் நம்பினால் அவர்களின் கதி அவ்வளவுதான்.

9. எனக்குத் தெரிந்து கிராம பகுதியில் 90 சதவிகிதத்துற்கும் மேல்மதிப்பெண்கள் இருந்து தனியார் கல்லூரியில் சேர பணம் இல்லாமல்அரசாங்க ஒதுக்கீடும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள்இருக்கிறார்கள். லோன் வாங்கும் தைரியம் அனைவருக்கும் இருக்காது.

Wednesday, May 17, 2006

மொழிப் பிரச்சினை

இடம் - சென்னை மாநகரம்

நம்ம ஹீரோ அறிவழகன் பள்ளிக்கூட ஹோம் ஒர்க் எழுதி கொண்டிருக்கிறார்.

தாத்தா டிவியில் MTV பார்த்து கொண்டிருக்கிறார்.

அறிவு - தாத்தா, டிவி சவுண்டை குறைங்க. நான் எப்படி படிக்கறது?

தாத்தா - ஏண்டா உள்ள போய் படிக்கக்கூடாதா? ஹால்ல தான் படிக்கணுமா?ஆமா என்ன பாடம் படிக்கறே?

அறிவு - ஆங் கணக்கு போடறேன்.

தாத்தா - டே என்னதான் படிச்சாலும் நம்ம தாய்மொழி தெரியாம இருக்ககூடாதுடா. தமிழ் ஹோம் ஒர்க் எழுது.உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குனு அந்த காலத்திலேயே போராட்டமெல்லாம் பண்ணியிருக்கோம்.

அறிவு - சரி தாத்தா.

அறிவின் அப்பா - ஆமா இவங்க பண்ணின போராட்டத்தாலே நான் இந்தி படிக்க முடியாம குஜராத்தில போய் திண்டாடினது போதாதா? தமிழ் மட்டும் படிச்சா போதாதுடா. வட நாட்டுல வேல பாக்கணுமுன்னா இந்தி படிக்கணும். இந்தி புஸ்தகத்த எடுத்துட்டு வா.

அறிவு - சரிப்பா, இதோ வந்துட்டேன்.

அறிவின் அம்மா - எதுக்கு இந்தி? இந்திக்காரனே சோம் பப்டி விக்கறானாம். ஏண்டா, இந்தியும் தமிழும் படிச்சா அமெரிக்கா போகமுடியுமா? மொதல்ல இங்க்லீசு ஒழுங்கா படி.

பக்கத்து வீட்டு மாமி- இப்பவெல்லாம் இன்க்லீசுகாராளே பேங்களூரிலே வேலதேடறாங்களாம். இதுல்லாம் லாயக்கு படாது. கன்னடம் படிச்சீன்னா வேலை இடத்துல பேசறதுக்கு வசதியா இருக்குமில்லே.

அறிவின் அண்ணன் - எல்லாம் சரி. அடுத்த சூப்பர் பவர் சீனாவாமாம். இந்தியா கூட சீனாவோட சமாதானம் ஆயிடுச்சு. மாண்டரின் படிச்சா வேலை கெடைக்கும்.ஜப்பான்காரன் இங்க்லீசா படிச்சான்?

அறிவு புஸ்தகத்தை தூக்கி கடாசிவிட்டு பம்பரம் எடுத்துக்கொண்டு ஓடுகிறான்.

தாத்தா - எங்கடா போற, படிக்கலியா?

அறிவு - நீங்க சொல்றதெ எல்லாம் கேட்டா, பைத்தியந்தான் புடிக்கும். ஏற்கெனவே புஸ்தகத்த சொமந்து முதுகு ஒடியுது ! யாராவது எங்க யோசனைய கேக்கறிங்களா?

அம்மா- அப்ப படிச்சு பெரிய ஆளாக வேணாமா ?

அறிவு - நீங்க எல்லாம் பெரிய ஆளாயிட்டிங்களா ? நான் குழந்தைகளுக்காக கு.மு.க (குழந்தைகள் முன்னேற்ற கழகம்)ன்னு கட்சி ஆரம்பிச்சு ஆட்சிய புடிக்க போறேன். இதுக்கு ஒரு மண்ணும் படிக்கவேணாம். யாரும் அங்க ரெகமந்டேசன் நு வந்துறாதீங்க சொல்லிட்டேன்.

அப்பா - அப்ப உங்க ஆட்சியில என்ன மொழி படிப்பீங்க.?

அறிவு - எங்க ஆட்சில எல்லா குழந்தைகளும் Sign Language (சைகை மொழி) தான் படிக்கணும்.

எந்த ஊருக்கு போனாலும் பிரச்சினையே இருக்காது பாரு.

ஏற்கெனவே எம்ஜிஆர் கூட சைகை மொழி யை ஆட்சி மொழியாக்கியிருக்காரு.

தாத்தா - உங்க கொள்கை என்ன?

அறிவு - வேறென்ன, பெரியவர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான்.

Thursday, May 04, 2006

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (மீள்பதிவு)

இடம் - கூட்டணி திருடாலயம்
பங்கேற்போர் - தமிழ்நாட்டு திருடர்கள்

அலிபாபா கருணாநிதி கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்.

2/3 திருடன் ராமதாசு - என்ன தலைவரே வருத்தமா இருக்கீங்க?

அலிபாபா- புதுசா வந்திருக்க திருடன நினைச்சுதான் உக்காந்திருக்கேன்.

கால் திருடன் வாசன் - இதுல வருத்தப்பட என்ன இருக்கு?

அலிபாபா- நீ கால் திருடன். காம்ராஜர் ஆட்சிய கொண்டு வருவோம்னு சொல்லிஊர ஏமாத்தறே. நான் அண்ணா, பெரியார் பேர சொல்லி ஏமாத்தறேன்.பாக்தாத் திருடி எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் பேர் சொல்லி ஏமாத்தறா.

2/3 திருடன் ராமதாசு - அதனால என்ன?

அலிபாபா- புதுத் திருடன் பெரியார், அண்ணா, காமராஜ், எம்ஜிஆர் இத்தன பேரும்போட்டிருக்கானே. நம்மள விட பெரிய திருடனா இருப்பான் போல இருக்கு.

2/3 திருடன் ராமதாசு - என்கிட்டே உடுங்க . நான் பாத்துக்கறேன். சூப்பர் திருடன்களையேஓரம் கட்டியிருக்கேன்.

கால் திருடன் வாசன் - அவன் சிரிப்பு திருடன் பா. இவன் அப்படி இல்ல. நாம எகத்தாள திருடன்னா இவன் ஜகதல திருடனா இருப்பான் போல இருக்கு.

(வாயில் பிளாஸ்டருடன் இருக்கும் ஊமை திருடன் இளங்கோ ஏதோ
சொல்லமுயற்சிக்கிறார்- பாம்பூ)

அலிபாபா - என்னப்பா

இளங்கோ - பாம்பறியும் பாமிபின்கால்.
காலே அரைக்கால் திருடன் திருமா- பம்பரம் உட்டே ஆட்சிய பிடிச்சிடுவாங்க போலஇருக்கு.

முக்கா திருடன் வைகோ - என்கிட்டே பம்பரம் சின்னம் விட்டுக் கொடுக்க சொல்லிகேட்டாரு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதுனால இப்போ தொப்பிள் சின்னத்துக்குமுயற்சி பண்றாரு.

அப்ரன்டிஸ் திருடன் ச்டாலின் - அப்பா !

அலிபாபா - மவனே!

அப்ரன்டிஸ் திருடன் ச்டாலின் - பாத்ரூம் போகணும்பா.

அலிபாபா - இதுக்கெல்லாம் நான் வரணுமா? நீயே போகக்கூடாதா? நீ என்னிக்குஅலிபாபா ஆகிறது?

முக்கா திருடன் வைகோ - எனக்கு தான் அதிக பாதிப்பு. பிரபாகரனுக்கு அவங்க ஊர்லகூட இத்தனை ஆதரவாளர்கள் இருப்பாங்களோ என்னமோ. என் ஆளுங்கள இவன் கொண்டு போயிடுவான் போல இருக்கு. (கண்ணீர் விடுகிறார்)

அலிபாபா - எனக்கு பெரிய பாதிப்பு இல்ல. மதுரை பக்கம் நாங்க எப்பவுமேஜெயிச்சது கெடெயாது.

காலே அரைக்கால் திருடன் திருமா- எனக்கும் பாதிப்பு இல்ல. நாங்க எந்த பக்கமும் ஜெயிச்சது கெடையாது.

பாக்தாத் திருடி - எங்க ஏரியால கை வைக்கறானே!! தேவரே, நீதான் காப்பாத்தணும்.

உ.பி.திருடி - அக்கா, என்ன விட ஆடம்பரமா நகை போடுவான் போலருக்கு. கிரீடம்என்ன, அரண்மணை என்ன? எப்படியோ இவரால, நாமே எளிமையா தெரியறோம்.

பாக்தாத் திருடி - ஏண்டீ சசீ, ஒருவேளை இந்தியால மன்னராட்சி அறிவிச்சுட்டாங்களோ?

காலே அரைக்கால் திருடன் திருமா- அறிவிக்காட்டி என்ன, ஏற்கெனவே அப்படிதானேஇருக்கு!

முக்கா திருடன் வைகோ - கொஞ்சமும் ஜனநாயக வேஷம் போடாம அசல் ராஜா மாதிரியேநடக்கிறாரே! ஆபாசத் திருடனா இருப்பான் போல இருக்கு.
காலே அரைக்கால் திருடன் திருமா- தஞ்சாவூர் விவசாயிகள் எல்லாம் பிரியாணிசாப்பிடறாங்க இல்லையா! அதை கொண்டாடறாங்க போல.

அப்ரன்டிஸ் திருடன் ச்டாலின் -அப்பா, நான் அலிபாபா ஆகற நாளே வராது போலதெரியுது.

அலிபாபா - ஆமாம் மகனே, நீ வெறும் சென்னை கார்ப்பரேசன் திருடந்தான் .

கால் திருடன் வாசன் - தொண்ணூறு சதவிகிதம் ஆதரவு இருக்குங்கறான்.

காலே அரைக்கால் திருடன் திருமா- ஓட்டு போடறதே 60 சதவிகிதம்தான். இதுல ஒன்ற கோடி தேவர்கள் பாக்தாத் திருடிக்கு ஆதரவு.

முக்கா திருடன் வைகோ - நம்மள விட நல்லா புருடா விடறான்.

காலே அரைக்கால் திருடன் திருமா- மக்களும் மாற்றம் வேணும்ணு தாமகவுக்கு வாய்ப்பு குடுத்தாங்க.

கால் திருடன் வாசன் - நாங்கதான் வாய்ப்ப தூக்கி போட்டுட்டு ஜால்ராவோட டெல்லிபோய்ட்டோ ம்.

கால் திருடன் வாசன் - காவி திருடங்க இவன ஆதரிப்பாங்களோ? எக்கச்சக்க இலவசவிளம்பரம் குடுக்கறாங்களே!

பாக்தாத் திருடி - பேசாம நாம எல்லாரும் கூட்டு சேந்து புது திருடன விரட்டிடலாம்.

அலிபாபா- நல்ல யோசனை. செயற்குழு கூட்டி அறிவிச்சுடலாம்.

மீடியா ஆதிக்கம் பற்றி கருணாநிதி

குமுதம் பேட்டியிலிருந்து -

குமுதம் - பல நாடுகளில் பல மானிநங்களில் பல நிறுவனங்கள் இப்படி குறைந்த விலைக்குச் செய்தித் தாள்களை விற்றிருந்தாலும், அவற்றின் பின்னனியில் அரசியல்கட்சியோ அரசியல் தலைவர்களோ இருந்ததில்லை. மீடியா முழுவதும் ஒருவர் பிடியில் இருப்பது நல்லதா?


கருணாநிதி - ஒருவர் பிடியில் இருப்பதும் நல்லதல்ல. அதே சமயம் ஒரு சில ஆதிக்கக்காரர்களின் பிடியில் இருப்பதும் நல்லதல்ல. மிக முக்கியமாக பத்திரிகா தர்மத்தைப் பற்றிக் கவலைப்படாது ஆளுங்கட்சிக்கு ஆலவட்டம் சுற்றுகின்ற சிலரது பிடியில் இருப்பதும் நல்லதல்ல.


மொழிபெயர்ப்பு - எவனும் (நீயே) ஒழுங்கு இல்ல. என்ன மட்டும் ஏன் கேட்கறே?