ullal

Thursday, March 22, 2007

கோக் சாப்பிட்டா பல்லு போயிடும்

போயிடுமாம்

http://news.yahoo.com/s/livescience/20070322/sc_livescience/acidsinpopularsodaserodetoothenamel

அம்பானியிசமும் மக்கள் நன்மையும்

பொய்:அம்பானி கடைகளில் ப்ரெஷ்ஷாக காய்கறிகள் கிடைக்கும்.மற்ற கடைகளில் இப்படி கிடைக்காது.

உண்மை:மற்ற கடைகளில் ப்ரெச் காய்கறிகள் விற்பது ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை. நான் சென்ற முறை இந்தியா வந்திருந்தபோதுபெரியார் மாவட்ட குக்கிராமத்தில் மளிகைக்கடையில் freezerவைத்து காய்கறிகள் வியாபாரம் செய்வதை கண்டேன்.கடை உரிமையாளர் வெளியே போக வேண்டியிருந்ததால் நானும் ஒரு நாள் இந்த கடையில் வியாபாரம் செய்தேன்.

கொஞ்சம் ஐஸ் இருந்தால் போதும் கோழி மீன் கூட ப்ரெஷ்ஷாக விற்கலாம்.(அமெரிக்காவில் கிடைக்கும் ஐசில் வைத்த கோழியை விட இந்தியாவில்அப்பொழுதே அன்று வெட்டிய கோழி அதிக சுவை உள்ளது ).வெஜிடேரியன் வலைப்பதிவாளர்களே, உங்கள் அசைவ நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் சில ஊர்களில் குளிர்பதன கிடங்குகள் கட்டப் போவதாகஅறிவித்தார்.( செய்தாரா தெரியவில்லை.) இவ்வளவு பெரிய கோயம்பேடு மார்கெட்டில் குளிர்பதன வசதி ஏன் செய்யவில்லை? இதை செய்வதும் பெரியபிரச்சினை இல்லை.

போட்டி இல்லாத இடத்தில் மக்களுக்கு நன்மை ஏற்படாது. விவசாயிகளிடம் ரிலையன்ஸ் நேரடியாக சரக்கை மொத்தமாக வாங்கும். இதனால் விலை குறையும் என்கிறார்கள். முதலில் நல்ல சரக்கை ரிலையன்ஸ் வாங்கிச் சென்றபின் உள்ள மிச்ச மீதிகளை மற்ற கடைக்காரர்களுக்கு கொடுப்பார்கள். நாளடைவில்மற்ற கடைகள் மூடப்பட்டு ரிசையன்சில் மக்கள் காய்கறிகள் வாங்குவார்கள். அதற்கப்புறம் அம்பானி வைத்தது தான் விலை. சம்பளத்துக்கு உழைப்பவனையும் சிறு தொழில்செய்பவனின் உழைப்பையும் ஒப்பிடவே முடியாது. சிறு தொழில்காரன் தனக்காகமுழு நேரமும் உழைப்பான். (மாம் அண்ட் பாப் கடைகளுடன் நம்மால் போட்டியிட முடியாது என்று சில அமெரிக்க பெரிய நிறுவனங்கள் புலம்புகிறது.)

அம்பானிக்கு வங்கிகள் மலிவு வட்டியில் கடன் கொடுக்கும். அன்றாடம் காய்கறிவாங்கி விற்பவர்கள் தண்டல் வட்டி வாங்கி வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு பத்து சதவிகிதம் என்று நினைக்கிறேன். சிறு தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவிசெய்தால் வீட்டுக்கே ப்ரெஷ் காய்கறிகள் கொண்டு வரலாம். பெரிய கடைகள் வீட்டில் டெலிவரி செய்யுமா? லோக்கல் நாடார் கடையில் லிஸ்ட் கொடுத்தால் வீட்டுக்கேமொத்த மளிகை சாமானும் வந்துவிடும்.

இதோ இந்த அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் கடைக்கு போய் வருவதற்கு எப்படியும்இரண்டு மணி நேரம் செலவாகிறது. ஆரம்பத்தில் இது நன்றாக இருந்தாலும், வார கடைசியில் யார் க்ளாசுக்கு போவது , யார் கடைக்கு போவது என்றுவாக்குவாதமாக இருக்கும். இங்கும் சில சிறிய கடைகள் உள்ளது. இந்த கடைகளில்ஈசியாக காரை பார்க் பண்ணிவிட்டு வேகமாக வாங்கி வந்து விடலாம். பெரிய லைன் கூட இருக்காது.

வால்மார்ட்டைவிட ரிலையன்சால் இன்னும் அதிக ஆபத்து உள்ளது. வால்மார்ட் ரீடெய்ல் வியாபாரம் மட்டுமே செய்யும். வங்கி துறையில் இவர்கள் நுழையமுயற்சித்து அமெரிக்காவில் அந்த திட்டத்திற்கு ஆப்படிக்கப்பட்டது. ஆனால்இந்திய அம்பானியிசத்தில் ரிலையன்சே துணி, பெறட் ரோகெமிகல், எலெக்ற்றிகல்சாதனங்கள், டெலிகாம், சிமென்ட் etc etc தொழில்களையும் செய்வதால்மளிகைக் கடைகள் விறிவடைந்து ரிலையன்ஸ் க்ரூப்பின் மற்ற தயாரிப்புகளையும் விற்பார்கள். இவர்களுடைய போட்டி நிறுவன பொருட்களை விற்க விடாமல் செய்வார்கள்.கிட்டத்தட்ட சன் டிவி அங்கங்கே ஜெயாவை ஆப் செய்வது போல. மோனாப்பலியால்மக்களுக்கு ஒரு நன்மையும் விளையாது. அப்பொழுது அந்த பொருட்களைதயாரிக்கும் நிறுவனங்களும் பாதிக்கப்படும்.

இதனால் விவசாயிகளின் பொருட்களுக்கு அதிக விலை கிடைக்குமா அல்லது அந்த லாபத்தையும் ரிலையன்சே விழுங்கிவிடுமா என்று இப்பொழுது சொல்ல முடியவில்லை. மற்ற வியாபாரிகளை துரத்திவிட்டால் அப்புறம் ரிலையன்ஸ்சொல்லும் விலைக்கு தானெ இவர்கள் விற்க வேண்டி வரும். இல்லையென்றால்சரக்குகள் விளைச்சல் வீணாகப் போகும்.

மாதம் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள்ரிலையன்சில் அஞ்சு ரூபாய் குறைவாக காலிப்ளவர் கிடைக்குது என்றுபின்னூட்டம் போடுவதைப் பற்றி என்னத்த சொல்வது?

Saturday, March 17, 2007

கேபிடலிசம் சோசலிசம் டாடாயிசம்

மேற்கு வங்காளத்தில் தொழிற்சாலைகள் கட்டுவதற்காக பதினான்கு பேரை படுகொலை செய்ததை ஜாலியன்வாலாபாக் என்று அத்வானி வர்ணித்திருக்கிறார். உலகில் பல்வேறு வாடுகளில் தனிச்சொத்து பாதுகாப்பு சட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான தனிச்சொத்தை மதிக்கும் நாடுகளில் ரோடு, பாலம் போன்ற பொது உபயோகத்துக்காக தனி மனிதர்களின் சொத்துக்களை நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.

சமீபத்தில் சீன அரசு தனிச்சொத்து பாதுகாப்பு சட்டம் இயற்றியுள்ளது. இதனால் சீனர்கள் (அரசுக்கு பயந்து )வெளிவாட்டில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை சீனாவிற்கு கொண்டு வருவார்களாம். இது ஒரு கம்யூனிச நாடு என்று சொல்கிறார்கள்.

அமெரிக்கா தனிமனிதர்களின் சொத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கும் பொது காரியங்களுக்காக மட்டும் அரசு ஒருவரின் விலத்தையோ, வீட்டையோ தகுநத விலை கொடுத்து விட்டு ஆக்கிரமிக்கலாம்.

2005 ஆம் வருடம் இந்த ( http://en.wikipedia.org/wiki/Kelo_v._New_London) வழக்கில் நீதிபதி பொருளாதார வளர்ச்சிக்காக அரசு ஒருவரின் சொத்தைப் பிடுங்கி இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். உடனே துப்பாக்கி சூடு எதுவும் இல்லாமலெ அமெரிக்க மக்கள் கொத்தித்தெழுந்து சட்டத்தையே மாற்றினார்கள். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்காக ஒருவனின் வீட்டைப்பிடுங்கி வால்மார்ட்டுக்கு வழங்க முடியாதபடி செய்து விட்டார்கள்.
http://www.cnsnews.com/ViewCulture.asp?Page=%5CCulture%5Carchive%5C200511%5CCUL20051104a.html

மேற்கு வங்கத்தில் இருக்கும் கம்யூனிச அரசும் மற்ற மாநில அரசுகள் விவசாய விலங்களை பிடுங்கி டாடாவுக்கும், வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் தானம் செய்வது கேபிடலிசமா, சோசலிசமா அல்லது டாடாயிசமா என்று யாராவது கண்டுபிடித்து சொல்லுங்களேன்.

Tuesday, March 13, 2007

ஜப்பானை மிஞ்சியது இந்தியா


உலக பணக்கார வரிசையில் அதிகமான இந்தியர்கள் இடம் பிடித்திருக்கிறார்களாம். ஜப்பானையும் மிஞ்சி விட்டதாக பிரபல நடுநிலை பத்திரிகை சொல்கிறது.

http://www.kamat.com/kalranga/bhiksha/2133.htm


http://www.maailmansivu.fi/images/poverty_india.jpg

http://www.amrc.org.hk/5304.htm

Friday, March 09, 2007

ஐடி யில் XXXX

இதை நிறுவனங்கள்தானே செய்கிறது?


https://www2.blogger.com/comment.g?blogID=10397034&postID=115798829231666911

Thursday, March 08, 2007

புரியாத புதிர்கள்

இந்த புரியாத புதிர்களை யாராவது விடுவிக்க முடியுமா?

மனுநீதி எழுதப்பட்ட காலம் எதுவென்று சரியாக சொல்ல முடியாது.ஆனால் வேத காலத்தில் பெண்கள் உயர்வாக இருந்தார்கள்என்பதற்கு ஆதாரம் (??) இருக்கிறது.

உனக்கும் சம்ஸ்கிருதம் தெரியாது. எனக்கும் சம்ஸ்கிருதம்தெரியாது. ஆனால் நீ சொல்லும் மொழிபெயர்ப்பு தவறு என்று மட்டும் எனக்கு தெரியும்.


சில்லறை வணிகத்தில் அன்னியர் நுழைந்தால் சிறு வணிகர்கள்பாதிக்கப்படுவார்கள். ஆனால சில்லறை வணிகத்தில் அம்பானிநுழைந்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
வணிகர்கள்நன்மையடைவார்கள். (சத்தியமா தினமலர் கடித்ததில் இப்படிதான் எழுதியிருந்தது.)