ஸ்ரீ ராம பிரான் சொன்ன தலாக்
எனக்கு தெரிந்த ஒரு பெண். ஒரிஜினல் பெயர் வெளியிட வேண்டாம் என்று ரேகா என்று குறிப்பிடுகிறேன். இவளுக்கு திடுமணம் ஆகி கொஞ்ச காலம்எல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஒரு குழந்தையும் உண்டானது. கணவன் கொஞ்சம் சந்தேகக் கேஸ். இந்த சந்தேகம் ரொம்ப பெரிசாகி சண்டை வந்து கடைசியில் அவளை விலக்கி வைத்துவிட்டான்.
ரேகாவுக்கு பிறந்த வீட்டிலும் ஆதரவு இல்லை. வயிற்றில் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறி, சில நல்லவர்களின் உதவியோடு வீட்டுவேலை செய்து, குழந்தையைப் பெற்று ஆளாக்கியும் விட்டாள். குழந்தைக்கு பத்து வயதாகிறது. இப்பொழுது அவள் கணவன் குழந்தையைச் சென்று ஸ்கூலில் பார்த்து பேசுகிறான். குழந்தையை அவன் அழைத்துச் செல்வதற்கு வழக்கு போட்டிருக்கிறான்.
இவ்வளவு நாளாக அவள் அந்த குழந்தையை எப்படிபெற்று வளர்த்தாள் என்று சிறிதும் கவலைப்படாத இந்த ஆள் திடீரென்றுகுழந்தையை பிரித்து செல்ல முயற்சி செய்கிறான். இந்து திருமணச்சட்டப்படி இது சாத்தியமே. இப்பவும் அவன் ரேகாவை மீண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவளும் அதை விரும்பவில்லை.
இவ்வளவு நாளாக கச்டப்பட்டு வளர்த்த மகனையும் இழக்க விரும்பாமல் ,வழக்கை சந்திக்க பொருள் செலவையும் செய்து இவள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை.
இந்த நிலையில் அவள் என்ன செய்யலாம்?ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
(இது ராமாயண சீதையின் கதை . இந்த பழைய பதிவு புதிய பெயருடன் மறுபதிவு செய்யப்படுகிறது )
10 Comments:
மனதுக்கு சங்கடமாக இருக்கிறது....
சட்ட ரீதியாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். வேறு முறையில் முயன்றால் சாஸ்வதமான முடிவு இருக்காது என்றே தோன்றுகிறது...
முதலில் விவாகரத்துக்கு அப்ளை செய்ய வேண்டும். கணவன் அவளது பராமரிப்பு செலவுகளுக்கு அவள் அவனை விட்டு பிரிந்த நாள் முதல் வட்டியுடன் தர வேண்டும். விவாகரத்து வழங்கும் வரை அந்தத் தொகை வந்துகொண்டிருக்க வேண்டும்.
அவனுடைய பிராவிடண்ட் ஃப்ண்ட் சேமிப்புகளுக்கு அவள் மகளே வாரிசு, விவாகரத்து ஆனாலும் கூட.
கூச்சப்படாமல் தனக்கு கணவன் செய்த கொடுமைகளை வழக்காடு மன்றத்தில் கூறவேண்டும். பெண் குழந்தையை வைத்து அவன் தவறான வழியில் சம்பாதிக்க முயலுவான் என்ற ரேஞ்சில் கூட தேவையானால் கூறலாம். இது யுத்தம். No holds are barred.
வழக்கம்போல இந்தப் பின்னூட்டமும் எனது இதற்கானத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
pinnotam itavarkaluku nandri
ஆதிரை,
என்ன செய்ய வேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் இவை உங்களுக்கு உதவலாம்.
1.இது போல் தேன் துளி பத்மா ஒரு உதவி கேட்டு பதிவு போட்டிருந்தார். நீங்கள் சொல்லும் பெண் அமெரிக்காவில் இருப்பாரேயானால் பத்மாவிற்கு ஒரு மயில் அனுப்புங்கள்.
http://domesticatedonion.net/blog/thenthuli.php?item=668
2.இந்தியாவென்றால் பெண்கள் அமைப்பையோ வேறு சட்ட உதவி மையங்களையோ அல்லது முதல்வருக்கு மனுவோ அனுப்பலாம்.
டோண்டு,
குழந்தை ஆண் என்றே தெரியவருகிறது.
//இவ்வளவு நாளாக கச்டப்பட்டு வளர்த்த மகனையும் இழக்க விரும்பாமல் ,//
பெண் என்று நினைத்து //தவறான வழியில் சம்பாதிக்க முயலுவான்// என்ற ரேஞ்சில் உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
இதற்கு மேலும் ஒரு உண்மையை எழுதாவிட்டால் அவ்வளவு நல்லா
இருக்காது. இது உண்மையில் ராமாயண சீதையின் கதைதான்.
பேரை மாற்றியதற்கு மன்னிக்கவும்.
சீதாவுக்கு இப்படி ஐடியா கொடுக்க யாரும் இல்லை. அவள் கதை
இன்னும் மோசம். இரு குழந்தைகளுடன் காட்டுக்குச் சென்றாள்.
ராமனைப் பார்த்ததும் லவ குசர்கள் ஜகம் புகழும் புண்ணிய கதையை
பாடிக்கொண்டு போய்விடனர். (நன்றி லவ குசா திரைப்படம்.)
இது சரிதானா ? கடைசியில் அவளை பூமாதேவி வந்து விழுங்கியதாகக்
காட்டினார்கள்.
ராமனைப்போல கணவர் இருக்க வேண்டும் என்று ஒரு பதிவாளர்
எழுதியிருந்தார். அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? இப்படிதான்.
........ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆதிரை.....toooooooooooo....much
இருந்தாலும் நீங்கள் சொல்லவந்த விச்யம் புரிகிறது
பேரை மாற்றியதற்கு மன்னிக்கவும்.
again
testing
யுக யுகமாக பாரத தேசத்தில் போர் தருமம்
என்று கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
நிராயதபாணியான பெண்ணின்
மூக்கை வெட்டியது என்ன தருமம்.
ஸ்ரீராமபிரான் செய்த தலாக் பற்றி
டோ ண்டு என்ன சொன்னார்.
http://ullal.blogspot.com/2006/01/blog-post.html
(இந்த பின்னூட்டத்தை என் பதிவில் போட்டு வைக்கிறேன்)
"ஊரில் ஒரு பார்ப்பனன். நாடகம் கூத்து எனப்பொழுது கழிப்பான். காம வெறியனாதலால் சிறு வயதிலேயே தன்னை விட மூத்தவளை மணந்து அப்பா சாகக் கிடக்கையிலும் அவளைப்புணர்வதில் இன்பம் கண்டான். வயதான போதிலும் இந்த வெறி அடங்காமல் இரண்டு பெண்களை சுற்றிக்கொண்டு காமப் பரீட்சைகள் செய்து மகிழ்ந்தான். இவனைப்போய் உலகமே இன்று போற்றுகிறது"- இப்படியும் காந்தியைப் பற்றி எழுதலாம். இயேசுவையும் நபிகள் நாயத்தையும் கூடக் கேவலப்படுத்தலாம். இது போல இன்னமும் பல மடங்கு கேவலமாக பெரியாரை எழுதலாம். ஆதிரை இப்படித்தான் இவர்களைப்பற்றியெல்லாம் எழுதுவாரோ என்னமோ தெரியவில்லை.
ஒன்று நிச்சயம். இப்படி எல்லாம் கேவலப்படுத்தி எழுதுவது, எழுதப்படுபவர்களைக்காட்டிலும் எழுதுபவரைக் குறித்தே அதிகம் வெளிச்சம்போட்டு விடுகின்றன.
Post a Comment
<< Home