பாட்டி வடை சுட்ட கதையின் நுண்ணரசியல் (1)
ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள். வடையின் வாசனை மூக்கை துளைத்ததால் அதை முகர்ந்துகொண்டே அங்கு ஒரு காக்கா வந்து ஒரு வடையை தூக்கிக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து தலையை ஆஹா ஆஹா என்று ஆட்டியபடி வடையை ருசித்து சாப்பிட்டது. அப்போது அங்கே ஒரு நரி வந்தது. நரி எப்படியாவது இந்த வடையை நாம் காக்காவிடமிருந்து பிடுங்க வேண்டுமென்று தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு யோசனை செய்தது. பின்னர் நரி காக்காவை பார்த்து "காக்கா, நீ ரொம்ப அழஅகா இருக்கே, ஒரு பாட்டு பாடேன் " என்று கேட்டது. ஏமாந்த காக்கா "கா, கா" ன்னு பாட்டு பாட, வடை கீழே விழுந்தது. நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடியே போச்சு .
இந்த கதையில் மறைந்து கிடக்கும் நுண்ணரசியல் அடுத்த பதிவில் வரும். அதற்கு முன் முடிந்தால் இந்த நுண்ணரசியலை கண்டுபிடியுங்கள்.
9 Comments:
நீங்கள் நகைச்சுவையாக பதிந்தீர்களோ தெரியவில்லை, ஆனால் மிருகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கதைகள் அனைத்துமே அரசியலைப் பேசுகின்ற கதைகள்தான். கிரேக்கத்து அடிமைகள் ஆள்பவர்களை பற்றி நுட்பமான முறையில் உருவாக்கிய கதைகள் இவைகள். வெளிப்படையாக அரசியல் பேசுவதற்கு உரிமை அற்ற அவர்கள் மிருகங்களின் பாத்திரங்கள் மூலம் அரசியல் பேசினார்கள் என்பது வரலாறு.
இந்த கதைகளை சொன்னவர்கள் அடிமைகளா , ஆண்டவர்களா? அவர்கள் சொன்ன வடை கதையின் அரசியல் என்ன ?
எனக்குத் தென்படும் சில நுண்ணரசியல்கள்:
1. பாட்டி என்ற பெண் பாத்திரத்தால் எப்படி தான் சுடும் வடைகளைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று ஆணியப் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது கதை. மேலும், காக்கா பெண் காக்கா, நரி ஆண் நரி என்ற செய்தியும் மறைமுகமா உண்ர்த்தப்படுது (எப்படின்னு கேக்காதீங்க - சேட்டாலும் சரி, அதுக்கான விடை - "நீ அழகா இருக்கே"ங்கிறதுக்கு மயங்கக் கூடிய பாலினம் எதுவா இருக்கும்? :) அப்படி சொல்லி மயக்கக் கூடிய பாலினம் எதுவா இருக்கும்?) . அதைத் தொடர்ந்து ஆண் நரியின் கெட்டிக்காரத்தனமும் பெண் காகத்தின் ஏமாளித்தனமும் சொல்லாமல் சொல்லும் செய்திகள் ஏராளம். ஆகவே, இது ஒரு ஆணாதிக்கப் பார்வையை சுமந்து வருவது மட்டுமல்லாமல், வருங்காலச் சந்ததியினர் மீதும் அந்தப் பார்வையை சுமத்துகிறது.
2. வடை சுடும் பாட்டி என்ற குட்டி முதாலாளியை எப்படி விளிம்பு நிலையில் வாழும் காக்காவும் நரியும் வெற்றி கொள்றாங்கன்னு கோடிட்டு காட்டுது கதை. ஆனா, இறுதியில் விளிம்பு நிலைக் குழுக்களுக்கு மத்தியிலும் தனது இனச் சார்பை (நரி இனம் vs. காக்கா இனம்) அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு மோசமான பிரதியாகத்தான் இந்த கதை உருவெடுக்கிறது.
3. மரம் போன்ற உயர் பீடங்களில் போய் ஏறிக் கொள்பவர்கள் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும் அப்படீங்கிற feel good செய்தியைச் சொல்லி, தரை வாழ் மக்களின் போராட்ட குணத்தை மந்தப் படுத்தும் முதலாளித்துவ சூழ்ச்சியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
4. காகம் கிடைத்த வடையை நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடுவதாக சொல்லப்படுது. அதே நேரத்தில் நரி கிடைத்த வடையை சாப்பிடாமல் தூக்கிக் கொண்டு ஓடுவதாகத்தான் சொல்லப்படுது. ஆகவே, ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பவர்கள்தான் வெற்றி அடைவார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி, தனக்காக எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும் மனித வளத்தைத் தயார்படுத்தும் தந்திரமாகவும் இதை என்னால் பார்க்க முடியுது.
5. முதலில் பாட்டியின் வடையை காகம் தட்டிப் பறிக்கிறது. அதன் பிறகு அதை நரி ஏமாற்றி கைப்பற்றுகிறது. இதில் இருவருக்கும் எந்த தண்டனையும் கிடைத்ததாக சொல்லப்படவில்லை. காக்காவும் தன்னுடையது அல்லாத ஒரு வடையை கொஞ்சமேனும் சாப்பிட்டது. நரியோ, காக்காவை ஏமாற்றி பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது. இதன் மூலமாக பிறர் பொருளை அபகரிப்பதில் தவறில்லை என்ற நச்சுக் கருத்து இளம் வயதிலிருந்தே சிறார்களுக்கு புகட்டப் படுது. இதன் மூலமாக அதிகாரம் தனது செயல்களை நியாயப்படுத்திக் கொள்வதற்கும் இது தோதாக அமைகிறது.
வேற எதாவது தோன்றினால் கண்டிப்பா வந்து பதியறேன் :)
vow,
naan ezudha ninaitha vilakkathai vida unga pinnoottam super.
voice on wings எழுதிநுண்ணரசியல் விமர்சனம் பார்த்து அசந்து போய்விட்டேன்.
மக இக மருதைய்யரையும், அமார்க்ஸ் போன்ற அதிமேதாவிகளையும் மண்ணைக்கவ்வ வைத்து இவ்வளவு லேசில் அடித்து தள்ளுவதை பார்த்து ஆச்சரியம்!
ஆதிரை, நன்றி. உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன். :)
தமிழ்மணி, நன்றி. நானும் left of center நிலைப்பாடு உடையவன்தான் (அது குறித்து பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும்). அ.மார்க்ஸ், மருதைய்யன் ஆகியோர் குறித்து எனக்குத் தெரியாது. இணையத்தில் மொழி விளையாட்டு விளையாடிப் பார்க்கலாமே என்ற நப்பாசையில் எழுதியவையே இந்த நுண்ணரசியல் விவரிப்புகள்.
இடதுசாரிகள் மீதான உங்கள் தொடர் விமர்சனங்களை அவ்வப்போது பார்த்து வந்திருக்கிறேன். உங்களைப் போல் எனக்கு அவர்கள் மீதான தீவிரமான விமர்சனங்கள் கிடையாது. இணைய வேண்டிய புள்ளிகளில் அவர்களோடு இணைந்தும் பிரிய வேண்டிய புள்ளிகளில் அவர்களிடமிருந்து பிரிந்தும் எனது சிந்தனையை அமைத்து வந்திருக்கிறேன். எனது வலைப்பதிவில் தமிழரங்கம், மக்கள் சட்டம் போன்ற தளங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பதைக் காணலாம். ஏனென்றால், இன்று தமிழ் வலைப்பதிவுகளில் அரசியல் / சட்டம் குறித்து உருப்படியான செய்திகள் / தகவல்கள் வழங்குவது இந்தத் தளங்கள்தான் என்பது எனது தாழ்மையான எண்ணம்.
இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர்.
பாட்டி சுட்ட கதையில் குழந்தைகளுக்கு சொல்லப்படுவது யாதெனில் :- ஒரு பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்தாங்களாம். அதை காக்கா தூக்கிகிட்டு போய் மரத்து மேல உக்காந்துசாம். அப்புறம் நரி பாட சொன்னது கேட்டு வாய்ல வச்சி இருந்த வடைய மறந்து "காக்கா காக்கா" ன்னு பாட ஆரம்பிச்சுதாம். வாய்லேந்து விழுந்த வடைய்ய நரி சாப்டுசாம்.
இதுவே இந்த கதையின் சாராம்சம் மற்றும் நுண்ணரசியல் ஆகும். இந்த கதை குழந்தைகளுக்கு சொல்லப்படும் வரை.
கதை கேட்பதில் நான் இன்னும் குழந்தையாய் இருக்கவே விரும்பறேன்.
அன்பின் வாய்ஸ் ஆன் விங்ஸ்,
நீங்கள் என் பக்கங்களை படிப்பது குறித்து மகிழ்ச்சி.
அன்புடன்
தமிழ்
Post a Comment
<< Home