ullal

Wednesday, January 11, 2006

சம்ஸ்கிருதம் படித்தால் IT வேலை கிடைக்குமா

சமீபத்தில் சம்ஸ்கிருத கல்லூரியில் ஒரு விழாவில் வீரசண்முகமணி என்ற கலெக்டர் பேசியது, "சம்ஸ்கிருதம் படித்தால் வேலை கிடைக்காது என்று நினைக்காதீர்கள். சம்ஸ்கிருதம் கம்ப்யூட்டருக்கு நெருக்கமான மொழி"(Sanskrit is computer friendly language.) என்று பேசியதாக ஆங்கில அறிவுஜீவி பத்திரிகை 'ஹிண்டு ' செய்தி வெளியிட்டிருந்தது. (தற்போது கைவசம் link இல்லை.)
இந்த உண்மை தெரியாமல் இவ்வளாவு வருசம் இந்த துறையில் குப்பைகொட்டியிருக்கோம் என்று நினைத்தால் வெட்கமாக உள்ளது.

சமீபத்தில் இந்தியா வந்த பில் கேட்ஸ் இந்தியர்கள் சம்ஸ்கிருத அறிவால் எங்கே விண்டோ ஸை காலி பண்ணிவிடுவார்களோ என்று உளவறிந்துவிட்டு போனார். இவர் ஓய்வு நேரத்தில் ஜார்ஜ் ஹார்ட்டிடம் சம்ச்கிருதம் படிப்பதாகக் கேள்வி.

அப்புறம் நாசா ராக்கெட்ல கூட சம்ச்கிருத ப்ரோகிராம் தான் என்று டெல்லி கணேஷ் மாநாட்டில் பேசியிருக்கிறார்.

niit கூட சம்ஸ்கிருத certification பாடத்தை தங்கள் நிறுவனத்தில் சேர்க்கப்போகிறதாம்.சம்ஸ்கிருதம் தெரிந்த பொறியியலாளர்களுக்கு ஆரம்ப சம்பளம் 100000 டாலர்கள் என்று dice.com சொல்லுகிறது.

8 Comments:

At 3:15 PM, Anonymous Anonymous said...

http://www.rediff.com/netguide/2003/jul/24sanskrit.htm

 
At 7:45 PM, Anonymous Anonymous said...

சமஸ்கிருதம் படிச்சா வேற எதுவும் கெடைக்குதோ இல்லையோ கோயிலில் மணியாட்ட வாய்ப்பு கிடைக்கும்.

பார்ப்பனர் அல்லாத தமிழகத்தினைச் சேர்ந்த ஒருவர் அறைகுறை சமஸ்கிருதம் படித்து விட்டு இங்கே கோயிலில் அய்யர் என்று பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்து கைநிறைய சம்பாதிக்கிறார்!

 
At 8:15 AM, Blogger aathirai said...

அனானிமஸ், ஆங்கில linkக்கு நன்றி.

சம்ஸ்கிருத இலக்கியங்களை வலையில் ஸ்கேன் செய்து போடலாம். வரலாறு
படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். (அதை படிக்கத் தெரிந்தவர்களாக
இருக்கும் பட்சத்தில் ). மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கு ஆங்கில
மொழிபெயர்ப்பு.

இதற்கு மேல் ஓவராக ஜல்லியடிப்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது.
எனக்குத் தெரிந்து இங்கு கல்லூரிகளில் திடீரென்று அரபி மொழிக்கு
பயங்கர மவுசு கூடியுள்ளது. புதுசா நிறைய கோர்ஸ் சேர்த்திருக்கிறார்கள்.

 
At 8:54 AM, Blogger Santhosh said...

இப்படி நம்ப ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு, ஒருத்தன் மொழியை அடுத்தவன் நக்கல் அடிச்சிட்டு, வெளிநாட்டு மொழிகளுக்கு கொடி பிடிச்சுகிட்டு அடிமையாவே வழப்போறேம்.

 
At 10:29 AM, Blogger aathirai said...

பழைய சம்ச்கிருத இலக்கியங்களை வலையில் எடுத்து
போடுவதில் என் முழு ஆதரவு உண்டு.

இலக்கியம், வரலாறு படிப்பவர்களுக்கு இது பலன் அளிக்கும்
என்றே நினைக்கிறேன்.

கன்னா பின்னாவென்று கப்சா விட்டு மாணவர்களை ஏமாற்றுவது
சரியல்ல.

 
At 10:38 AM, Blogger aathirai said...

vazha vazha engeyo poiteenga

 
At 4:20 PM, Anonymous Anonymous said...

:-) :-)

 
At 7:37 AM, Anonymous Anonymous said...

if it is ur additional qualification, u may get it.....


But u know only this, definetly u wont get IT JOB. :)

 

Post a Comment

<< Home