திருவாதிரை என்ற ஆணாதிக்கப் பண்டிகை
சிறு வயதில் இந்த பண்டிகை பிடிக்கும். அம்மா செய்து வைக்கும் திருவாதிரைக் களி, வடை பாயசம் சாப்பிடலாம். அப்புறம் ஒரு கயிறு கட்டிவிட்டு, அப்பா காலில் விழுந்தால் ஒரு ரூபாய் கிடைக்கும்.
என் கணவர் வீட்டில் இந்த பண்டிகையின்போது பெண்கள் கணவருக்காக மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்து அப்புறம் தெம்பு இருந்தால் அவர்களே சமைத்து பூசை செய்து நோன்பு நோப்பார்கள்.
அமெரிக்கா வந்துவிட்டதால் இந்த கொடுமையிலிருந்து விடுதலை. மேலும் இதுஎம் உடல் நிலைக்கு ஒத்து வராது.
சிதம்பரம் என்றாலே ஆணாதிக்கம்தான். ஒரு பத்து வருடத்துக்கு ஒரு முறையாவது கணவன்மார்கள் தங்கள் மனைவிக்காக விரதம் இருக்கக் கூடாதா?
அப்படி ஏதாவது பண்டிகை இருக்கிறதா?
3 Comments:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கணவன்மார்கள் விரதமிருப்பது உங்கள் கையில்தானே இருக்கிறது :)
எனக்குத்தெரிந்தவரை விரதம் எனும் கொடுமை(!?! அளவாகச் செய்தால் நன்மையும் கூட) பெண்களால் பெண்களுக்குச் செய்யப் படுவது. ஆண்கள் இதில் பெரிதாகத் தலையிடுவதில்லை என நினைக்கிறேன். ஆனால் சிலவேளைகளில் ஆண்கள் கட்டாயவிரதமிருக்கப்படுத்தப்படுவதும் உண்டு :)
சுகா
//சிதம்பரம் என்றாலே ஆணாதிக்கம்தான். //
அது சரி. மதுரைக்கு வந்து பாருங்க. யார் ஆட்சி நடக்குதுன்னு...
எங்கம்மா மீனாட்சி ஆட்சி தான். நடராஜா எங்க ஊருல அம்மா அழகுல சொக்கிப் போய் சொக்கநாதர் ஆயிட்டார் :-)
Post a Comment
<< Home