ullal

Wednesday, January 17, 2007

ஸ்ரீரங்கத்தில் கடப்பாறை (அ) அம்மா மண்டபம்

ஸ்ரீரங்கத்தில் கிச்சாவின் மாமா ரங்கராஜ அய்யங்கார் ஊஞ்சலில் ஆடியபடி அடியாளுடன் பேசிண்டிருக்கார்.

ர.அ - அந்த காலத்துல எப்படி இருந்தோம். இப்ப இப்படி ஆயிட்டோம்.(பெருமூச்சு விடறார்).

அடியாள் - ம். சொல்லுங்க.

ர.அ - இந்த காலத்துல நம்ம பொண்டு பசங்கள் எங்கே அப்பாஅம்மா பேச்சை கேக்கறதுகள்? யாரையெல்லாமோ கல்யாணம் செஞ்சுண்டுமீன் குழம்பு சாப்பிட ஆரம்பிச்சுட்டா. யாரெல்லாமோ படிச்சுட்டு நம்மோட போட்டிக்கு வந்துட்டா. என் அக்கா பையன் கிச்சா கூடவேத்து ஜாதியில ஒரு பொண்ண கட்டிண்டு அமெரிக்கா போறான்.

அடியாள் - சரிங்க.

ர.அ - வேத்து மதக்காரா இந்தியாவுக்கு வந்து கொழப்பம்உண்டாக்கிட்டா. எல்லாரும் சிந்திக்க ஆரம்பிச்சுட்டா.

அடியாள் - சரிங்க.

ர.அ - அப்ப நான் சொன்ன மாதிரி நீ செஞ்சுடு.

(பணக்கட்டு விபூதி போடுவது போல அடியாள் கையில் போடுகிறார்.)

அடியாள் - சரிங்க.

ர.அ - கோயிலுக்கு எதிரே அசுரர்களுக்கு மூர்த்தி இருக்கக்கூடாதுன்னு வேதம் சொல்லுது. நாட்டுக்கு நல்லதில்லை.நாடு நன்னா இருக்கணுமோன்னோ ?அதுதான். கரெக்டா பாத்துக்கோ. இந்த போட்டோவுல இருக்கறது போல தாடி வெச்சுண்டு இருக்கும்.

அடியாள் - சரிங்க.

ர.அ - எங்களால மத்த கட்சிக்காரா மாதிரி பிரியாணி தர முடியாது. மதியம் சாப்பாட்டுக்கு இந்த புளியோதரை பொட்டலம் எடுத்துண்டு போ.

அடியாள் - சரிங்க.

ர.அ - நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கோ? கருப்பு வேட்டி , கருப்புசட்டை போட்டுண்டு போ. இப்படியே போயிடாதே.

ர.அவின் பேத்தி - டே தாத்தா நேக்கு புளியோதரை இல்லையா?

ர.அ - சும்மா இருடீ, பெரியவா பேசிண்டு இருக்கச்சே தொந்தரவு பண்ணாதே.

ர.அ - டிசம்பர் 6 எங்களவா எழுச்சி நாள். நல்ல முகூர்த்தம்.இந்த கடப்பாறை கொண்டு போ.

(கடப்பாறை தூக்க முயல்கிறார்.)

என்னால முடியல்லை. நாங்க வெஜிடேரியன் இல்லையா? we are weak.
நீயே எடுத்துக்கப்பா.

அடியாள் - சரிங்க.

ர.அ - வேலை முடிஞ்சதும் பஸ் பிடிச்சு கேரளாவுக்கு ஓடிடு. ஒரு வேளைமாட்டிண்டாலும் கவலைப்படாதே. நம்மவா நிறைய வக்கீல், ஜட்ஜ் சுப்ரீம் கோர்ட் வரை இருக்கா. ஒன்னும் கவலைப்படாதே.

அடியாள் புளியோதரையும், கடப்பாறையும் எடுத்துண்டு போறார்.

கலையின் தாத்தாவின் சிலைக்கு நன்றி சொல்லி மாலை போட வந்திருந்த கிச்சாவை தள்ளிவிட்டு அடியாளும் அவருடைய கூட்டாளிகளும் ஜெய்ராம் என்று சொல்லிக்கொண்டு தாத்தாவின் சிலையை இடித்தனர்.

கிச்சாவின் மாலை சாக்கடையில் விழுந்தது.

[இந்த கதை முற்றிலும் கற்பனையே. இந்த கதையில்வரும் கதாபாத்திரங்கள் இந்த உலகத்திலோ வேறு கிரகங்களில் இருப்பவர்களை குறிப்பதில்லை.]

6 Comments:

At 9:52 AM, Anonymous Anonymous said...

இதுவரை வந்த 'கதை'களிலேயே இதுதான் யதார்த்தமாக நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பேசுகிறது.

குமுதத்துக்கெல்லாம் வேணாம், ஏதாவது 'பாரத'ப் பத்திரிக்கையா பார்த்து அனுப்புங்க மேடம்!

 
At 11:38 PM, Blogger ╬அதி. அழகு╬ said...

பதிவில் இது மட்டுமே பொய்:

[இந்த கதை முற்றிலும் கற்பனையே. இந்த கதையில்வரும் கதாபாத்திரங்கள் இந்த உலகத்திலோ வேறு கிரகங்களில் இருப்பவர்களை குறிப்பதில்லை.]

 
At 3:50 AM, Anonymous Anonymous said...

குங்குமத்துல முயற்சி பண்ணி பாருங்களேன்.

 
At 6:47 AM, Blogger aathirai said...

பின்னூட்டமிட்ட மக்களே நன்றி. இந்த கதையின் கரு
'ஜெனரேசன் கேப்' மட்டுந்தான். நீங்க வேறு ஏதாவது
நினைச்சா நான் பொறுப்பில்லை.

இதுக்கு முன்னாடியும் நான் செய்திகளை வெச்சு 1980ல
கதை எழுதி இருக்கேன்.

 
At 8:10 AM, Blogger பங்காளி... said...

இப்டில்லாம் பதிவு போட்டா எங்கவா சும்மா இருப்பாளோ....எந்தந்த பேர்லல்லாம் வந்து உனக்கு இம்ச கொடுக்கப் போறாளோ தெரியலையே....

கலி முத்தீடுத்துடி...அதான் இப்டில்லாம் பேத்றேள்...உங்கவாளையெல்லாம் அந்த பகவாந்தான் காப்பாத்தனும்.......ம்ம்ம்ம்...

(ஹி..ஹி..ச்ச்சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன்....நன்னாத்தான்...சாரி நல்லாத்தான் வருது....அப்புறம்.....தாயே அந்த 'டி'க்கெல்லாம் கோவிக்ககதீங்க...நேட்டிவிட்டி வேணுமோல்லியோ அதான்....ஹி...ஹி...)

 
At 2:46 PM, Anonymous Anonymous said...

ஸ்டிங்க்ரே மாதிரி குத்துது.

 

Post a Comment

<< Home