ullal

Thursday, January 04, 2007

அரை ப்ளேடுவிற்கு பின்னூட்டம்

அரை ப்ளேடு பதிவில் பின்னூட்டம் வேலை செய்யாததால் இந்த பதிவு.

அரை ப்ளேடு சார்,
ப்யூட்டி பார்லர் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோவம்?பரட்டை தலையுடன் மூக்கு ஒழுகிக்கொண்டிருக்கும் உங்கள் மனைவியை பார்ட்டிக்கு அழைத்து போய் மற்றப்ளேடுகளிடம் 'meet my wife, quarter blade"என்று சொல்லும்போது உங்க இமேஜ் பாதிக்காதா? எல்லாம்உங்க இமேஜுக்காகதான் செய்றாங்க.

அப்பறம் வரதட்சணை வாங்கறது பெண்களா? மாமனார் ப்ளேடு வாங்கிக்கொடுத்த ஸ்கூட்டரிலும், காரிலும் ஸ்டைலாக போகிற ப்ளேடுங்கெல்லாம் யாரு?

ஏண்டீ,உங்கப்பன் வெச்சிருக்க வெச்ட் மாம்பலம் ஒரு க்ரவுண்டை எப்ப எழுதி வைப்பான்னு கேளு என்று பின்னாலிருந்து ச்க்ரூகொடுப்பது ஆண் ப்ளேடா, பெண் ப்ளேடா?

பக்கத்து வீட்டு ப்ளேடுக்கு அவன் மாமனார் வீடு வாங்கி குடுத்திருக்கான்னுநீங்களும் வாங்கி குடுங்கன்னு மாமனார் ப்ளேடை கேப்பது யாரு?(எனக்கு தெரிஞ்ச ஒரு காலேஜ் வாத்தியார்கள் எல்லாம் peer pressureஇல்இப்படிதான் தங்கள் மனைவிகளை குடைந்தார்கள்.)

பொம்பளை ப்ளேடுகளா காலேஜ் சுவத்தில் உக்காந்து போற வறஆண் ப்ளேடுகளை பாத்து விசிலடிக்குது? பம்பாயில் ஒன்னும்நடப்பதில்லையா? பம்பாய் பஸ்ஸில் சில்மிசம் செய்து கூட்டத்திடம் அடி வாங்கும் காட்சிகள் அடிக்கடி நடக்குமே.

பாஞ்சாலிக்காவ சண்ட போட்டாங்களா? பெண்டாட்டி மேல அவ்வளவு பாசம் வெச்சிருந்தாங்களா ? அதான் நம்ம அர்ச்சுன சாரு டிசைனா டிசைனா பொண்டாட்டி வெச்சிருந்தாரா? அந்த காலத்துல டபில்யூ.எம்.டி இல்ல, அதுனால பாஞ்சாலிக்காக சண்ட போட்டதா சொன்னாங்க.
சொத்துக்காக அடிச்சுக்கிட்டதா சொன்னா வீரர்கள் போருக்கு வருவாங்களா? பாருங்க பழிய அந்தம்மா மேல போட்டுட்டாங்க.அந்தம்மாவ வெச்சு தாயக்கட்ட உருட்டினவங்க யோக்கியவானுங்களா? அந்தம்மா என்ன ஆடா, மாடா?

இப்பொதைக்கு இவ்வளவுதான் ப்ளேடு போட முடியும்.

6 Comments:

At 10:37 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ஆதிரை, இது எந்தப் பதிவுக்கான பின்னூட்டம்? அரைபிளேடின் சமீபத்தைய பத்து பதிவுகளில் எல்லாத்துக்கும் ஒத்துவரும் போலிருக்கே!!!

எப்படி இருந்தாலும் //அந்தம்மாவ வெச்சு தாயக்கட்ட உருட்டினவங்க யோக்கியவானுங்களா? அந்தம்மா என்ன ஆடா, மாடா?//
இந்த ஒரு கேள்வியில் மொத்தத்தையும் அடக்கிட்டீங்க :)

பதிவின் சுட்டியையும் இணைச்சிடுங்களேன்..

 
At 6:32 AM, Blogger aathirai said...

பொன்ஸ்,
அரை ப்ளேடு ஆண் ஏன் அடிமையானான் என்று ஒரு தொடர்
எழுதியிருந்தார். அப்புறம், ஆண்கள் மிருகங்களா என்று ஒரு
பதிவு போட்டிருந்தார். அதுக்காக மொத்தமா ஒரு பின்னூட்டம்
போட்டுட்டேன்.

http://araiblade.blogspot.com/2007/01/6.html
http://araiblade.blogspot.com/2007/01/blog-post_04.html
http://araiblade.blogspot.com/2006/12/5.html
http://araiblade.blogspot.com/2006/12/2_27.html

 
At 11:17 AM, Blogger அரை பிளேடு said...

தங்கள் பின்னூட்ட பதிவிற்கு நன்றி ஆதிரை...

//பரட்டை தலையுடன் மூக்கு ஒழுகிக்கொண்டிருக்கும் உங்கள் மனைவியை பார்ட்டிக்கு அழைத்து போய் மற்றப்ளேடுகளிடம் 'meet my wife, quarter blade"என்று சொல்லும்போது உங்க இமேஜ் பாதிக்காதா? எல்லாம்உங்க இமேஜுக்காகதான் செய்றாங்க.//

ஒழுகிக்கொண்டிருக்கும் மூக்குகளையா ப்யூட்டி பார்லரில் சரி செய்கிறார்கள். தெரியாமல் போயிற்றே.
அரை இஞ்ச் ஸ்னொவுக்கும் பவுடருக்கும் இன்ன பிற இத்யாதிகளுக்கும் பின்னால் முகம் மறைத்து பொய் முகத்தை முன்னிறுத்திதான் சமூக அந்தஸ்து பெற வேண்டும் என்பது அல்ல.
ஐஸ்வர்யா ராயை விட அருந்ததி ராய்கள் அழகானவர்கள்.

//அப்பறம் வரதட்சணை வாங்கறது பெண்களா? மாமனார் ப்ளேடு வாங்கிக்கொடுத்த ஸ்கூட்டரிலும், காரிலும் ஸ்டைலாக போகிற ப்ளேடுங்கெல்லாம் யாரு?
ஏண்டீ,உங்கப்பன் வெச்சிருக்க வெச்ட் மாம்பலம் ஒரு க்ரவுண்டை எப்ப எழுதி வைப்பான்னு கேளு என்று பின்னாலிருந்து ச்க்ரூகொடுப்பது ஆண் ப்ளேடா, பெண் ப்ளேடா?//

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவர். வேலையை இழந்து விட்டு வந்தார். வேலையில்லாத உனக்கு எங்க அப்பா கொடுத்த ஸ்கூட்டரை தொட அருகதை இல்லை என்று விறகு கட்டையால் அடித்து துரத்தினாள் அந்த வீரப் பெண்.
அந்த பெண்ணின் தங்கையோ அக்காவுக்கு மட்டும் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்தியே.. எனக்கு என்ன செஞ்ச என்று இன்னும் அந்த தகப்பனை படுத்தி எடுத்துக் கொண்டு இருக்கிறாள்.
அவர்கள் இருவரின் கணவர்களும் படு அப்பாவிகள். கண்ணெதிரே காண்கிறோம்.

வரதட்சணையின் மற்றொரு பரிமாணமும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

//பக்கத்து வீட்டு ப்ளேடுக்கு அவன் மாமனார் வீடு வாங்கி குடுத்திருக்கான்னுநீங்களும் வாங்கி குடுங்கன்னு மாமனார் ப்ளேடை கேப்பது யாரு?(எனக்கு தெரிஞ்ச ஒரு காலேஜ் வாத்தியார்கள் எல்லாம் peer pressureஇல்இப்படிதான் தங்கள் மனைவிகளை குடைந்தார்கள்.)//

எனக்கு தெரிந்த கல்லூரி பேராசிரியர். மனைவியும் அஃதே. இவர் கேட்கவில்லை என்றாலும் மனைவி வரும்போது வண்டி கொண்டு வந்தார்.
அதிகாரம் தூள் பறப்பதை கண்ணெதிரே கண்டுள்ளேன். வண்டி ஓடிய கிலோமீட்டர்களை கணக்கு வைத்துக்கொண்டு எங்கு சென்றது வண்டி என்று கேட்பார் மனைவி.

//பொம்பளை ப்ளேடுகளா காலேஜ் சுவத்தில் உக்காந்து போற வறஆண் ப்ளேடுகளை பாத்து விசிலடிக்குது? //

விசில் என்ன தண்ணியே அடிக்கக் கூடிய பெண் பிளேடுகளை நான் அறிவேன்.

//பம்பாயில் ஒன்னும்நடப்பதில்லையா? பம்பாய் பஸ்ஸில் சில்மிசம் செய்து கூட்டத்திடம் அடி வாங்கும் காட்சிகள் அடிக்கடி நடக்குமே.//

மும்பையில் நானறிந்த வரை இல்லை.

//பாஞ்சாலிக்காவ சண்ட போட்டாங்களா? பெண்டாட்டி மேல அவ்வளவு பாசம் வெச்சிருந்தாங்களா ? அதான் நம்ம அர்ச்சுன சாரு டிசைனா டிசைனா பொண்டாட்டி வெச்சிருந்தாரா? அந்த காலத்துல டபில்யூ.எம்.டி இல்ல, அதுனால பாஞ்சாலிக்காக சண்ட போட்டதா சொன்னாங்க.
சொத்துக்காக அடிச்சுக்கிட்டதா சொன்னா வீரர்கள் போருக்கு வருவாங்களா? பாருங்க பழிய அந்தம்மா மேல போட்டுட்டாங்க.அந்தம்மாவ வெச்சு தாயக்கட்ட உருட்டினவங்க யோக்கியவானுங்களா? அந்தம்மா என்ன ஆடா, மாடா?//

தேவையில்லாமல் பாஞ்சாலியை நான் இழுத்தது தவறு என்று உணர்கிறேன். பாஞ்சாலியிடமும் பாண்டவர்களிடமும் வியாசரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சம்பந்தப் பட்ட பதிவிலேயே கூட தெரியப்படுத்துங்கள். எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்.

எனது எழுத்துக்களை படித்து எதிர் கருத்துக்களை வைத்து ஆக்க பூர்வமான விவாதங்களை அளித்த தங்களுக்கு என் நன்றி.

 
At 1:20 PM, Blogger Syam said...

அங்க போய் பாத்தா அதுவும் சரினு தோனுது...இங்க வந்து பாத்தா இதுவும் சரினு தோனுது...என்னமோ போங்க :-)

 
At 1:20 AM, Blogger ramachandranusha(உஷா) said...

யக்கா, நா ஒண்ணும் சொல்லலே :-)ஆனாலும் இவ்வளவு பிளேட்டா :-)))))

//ஆதிரை, இது எந்தப் பதிவுக்கான பின்னூட்டம்? அரைபிளேடின் சமீபத்தைய பத்து பதிவுகளில் எல்லாத்துக்கும் ஒத்துவரும் போலிருக்கே//

பொன்சு, சூப்பர்ன்னு சொல்ல பயமா இருக்கு :-))))))

 
At 9:29 AM, Blogger aathirai said...

//மும்பையில் நானறிந்த வரை இல்லை//

mumbayil rottil vendumendre vandhu modhubavargalai thavirthu nadapatharke sila technique theriya vendum.

 

Post a Comment

<< Home