அப்பாவி ஆறுமுகம்
அப்பாவி ஆறுமுகம் கேட்கிறார்.
ஏம்பா எங்க ஊர்ல அமைதியா ஊராட்சிதலைவர் பதவியை ஏலம் விட்டோம். உடனே ஜனநாயகத்துக்கு ஆபத்துஎன்று எல்லா பத்திரிகையிலும் எழுதுனாங்க. பதவியை ஏலம் விட்டா குண்டர் சட்டம் பாயுமுன்னு போலீஸ் கமிசனர் கூட மிரட்டினார்.
இப்போ சென்னையில ஓட்டுப்பெட்டிய ரோட்டில போட்டு அடி, உதை, கலவரம். தேர்தல் அமைதிய நடந்ததா அதே கமிசனர் சொல்றார். இந்த ரவுடிங்களை எல்லாம் குண்டர் சட்டத்துல போட மாட்டாங்களா?
ஏங்க இந்த சென்னை கார்பரேசன் பதவிகளையும் அமைதியா ஏலம் விட்டா என்ன? குப்பை அள்ளினா கவுன்சிலர், கூவத்தை க்ளின் பண்ணினா மேயர்னு ஏலம் விட்டா என்ன?
ஜனநாயகம்னு எதோ சொல்றாங்களே, அது என்னங்க? இப்போ ஜனநாயகத்த காப்பாதிட்டாங்களா?
யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க.
2 Comments:
ஏங்க இந்த சென்னை கார்பரேசன் பதவிகளையும் அமைதியா ஏலம் விட்டா என்ன? குப்பை அள்ளினா கவுன்சிலர், கூவத்தை க்ளின் பண்ணினா மேயர்னு ஏலம் விட்டா என்ன?//
நல்ல கேள்வி :-)
//குப்பை அள்ளினா கவுன்சிலர், கூவத்தை க்ளின் பண்ணினா மேயர்னு //
இது சூப்பர் ஐடியா!
//இப்போ ஜனநாயகத்த காப்பாதிட்டாங்களா//
பின்னே.. இல்லீங்களா? ஏலம் எடுக்கறத கட்டுப்படுத்திட்டோமில்ல!
Post a Comment
<< Home