ullal

Friday, September 01, 2006

திப்புசுல்தான் ராக்கெட்டும் அமெரிக்க தேசிய கீதமும்

திப்புவின் ராக்கெட்டுக்கும் அம்ரிக்காவுக்கும் என்ன சம்மந்தம்?1780 இல் ப்ரிட்டிஷாரரை மைசூர் படை வெற்றி பெற காரணமாக இருந்தது ராக்கெட் கள்.

ஒரு நான்கு அடி மூங்கிலின் முனையில் இரும்பு குழாயினுள்gun powder அடைக்கப்பட்டு எதிர்களின் மீஹு ஏவ பயன்படுத்தப்பட்டது.இந்த ராக்கெட்கள் 2.5 கி.மீ வரை போகும் ஆற்றல் படைத்தது .திப்புவிடம் ராக்கெட் ஏவுவதற்கு 5000 ஆட்கள் இருந்ததாக தெரிகிறது.திப்புவின் ராக்கெட்டுகள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.William Congreve 'A Concise Account of the Origin and Progress of the Rocket System'என்ற பேப்பர்வெளியிடப்பட்டது.
அப்பொழுது லண்டனில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளை விடஇரு மடங்கு தூரம் அதிகம் பயணிக்கும் திப்புவின் ராக்கெட் ஆராயப்பட்டது.இந்த ராக்கெட்டின் வடிவமைப்பை பின்பற்றி ஸ்டீல் குழாய்களைபயன்படுத்தி பிரிட்டிஷ் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், அமெரிக்க போரிலும் இந்த ராக்கெட்டுகள் பிரிட்டிஷார் பயன்படுத்தினார்கள்.
அமெரிக்க தேசிய கீதமான star spangled bannerபாடலில்வரும் And the rockets' red glare .. சீறி வரும் இந்த ராக்கெட்டுகளை குறித்கும் வரிகள்.

0 Comments:

Post a Comment

<< Home