ullal

Thursday, July 27, 2006

தமிழ் உணர்வும் ஆபாச சினிமாக்களுக்கு வரி விலக்கும்

தமிழக முதல்வர் தமிழ் பெயர் வைத்த சினிமாக்களுக்கு வரி விலக்குஅளித்திருக்கிறார். இதன் மூலம் இவர்களுக்காக தேர்தலில் கூட்டம் கூட்டிய சினிமாக்காரர்களுக்கு தமிழ் உணர்வு முலாம் பூசிய பரிசு அளித்திருக்கிறார்.

இந்த வரி விலக்கின் விளைவு என்னவென்றால்,

1. தமிழில் பெயர் வைத்து படத்தில் சந்தமிழில் (சன் டிவி பெண்கள் டாக் பண்ணும் தமிழ்) வசனம் இருக்கலாம்.

2. 'டேக் இட் ஈசி பாலிசி' போன்ற பாட்டுக்கள் இருக்கலாம்.ஆனால் படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்க வேண்டும்.

3. தூய தமிழில் இம்சை அரசன் போல 'பொத்திக்கொண்டு போங்கள்'என்று தலைப்பு வைத்தாலும் வரி விலக்கு கிடைக்கும்.

இந்த வரி விலக்கு மூலம் தமிழ் வளர்கிறதோ இல்லையோ, சினிமா உலக காக்கா கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான். இத்துடன் சூட்டிங்க் எடுப்பதற்காக தமிழக அரசுக்கு கொடுக்கும் வாடகையும் குறைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமான விசயம்.இதனால் அரசு எத்தனை கோடி இழக்கும் என்ற விபரம் இல்லை.விபரம் இருந்தால் இந்த பணத்தில் எத்தனை பள்ளிகள் கட்டலாம் என்று சொல்ல முடியும்.

அப்படி தமிழ் சினிமாக்கள் ஏதாவது சமூக நீதி கருத்துக்களை பரப்புகிறதா?சமூகத்திற்கு நல்ல செய்தி ஏதாவது தருகிறார்களா? அத்தனையும் ஹாலில் குழந்தைகளோடு பார்க்க முடியாத ஆபாசப் படங்கள்.

பா.ம.க. தமிழ் படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டுமென்று போராட்டம்நடத்தியது. இவர்கள் சினிமா நடிகர்களையும் எதிர்த்தார்கள். ஆனால் சிலதயாரிப்பாளர்களை மட்டும் ஆதரித்தார்கள்.

சாதாரண மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசை சினிமா தியேட்டரில் கொட்டுகிறார்கள்.இதில் பெரும் பகுதி சூப்பர் நடிகர்களின் வங்கி கணக்கைதான் நிறைக்கிறது. சினிமாதொழிலாளர்களுக்குக் கூட பெரிய நன்மை இல்லை.

இவர்களுடைய பட்ஜட்டை பார்த்தாலே தமிழக அரசியல் பார்முலா தெளிவாகிறது.

2 ரூ அரிசி + பண்ணயார்களுக்கு விவசாயக் கடன் ரத்து + சினிமா காக்காய்களுக்கு வரிவிலக்கு + கலர் டிவி + கட்சிக்காரர்களுக்கு கமிஷன் + அரசு ஊழியர்களுக்கு சம்பள படி + வாட் வரி + ஏதோ கொஞ்சம் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் = ஸ்டாலின் முதல்வர்

9 Comments:

At 12:53 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஸ்டாலின் என்கிற பெயரில் படமெடுத்தால் வரி விலக்கு கிடைக்குமா?

தமிழைவைத்து அரசியல் செய்யும் 'தலைவர்களை' எல்லோரும் கண்டிக்கவேண்டும்.

பெரியார் படத்துக்கு நிதி உதவி செய்பவர்கள் அதில் வரும் இலாபத்தில் பங்கு கேட்கவேண்டும் என்பதும் சரியான வாதமே.

 
At 11:05 AM, Blogger aathirai said...

http://thatstamil.oneindia.in/news/2006/07/28/ramdoss.html

 
At 12:26 PM, Blogger வெற்றி said...

நல்ல முயற்சி. கலைஞருக்கு என் பாராட்டுக்கள்.

 
At 2:35 PM, Blogger aathirai said...

இதிலென்ன நல்ல முயற்சி. அவருடைய சினிமா நண்பர்களுக்கு
வரி விலக்கு அளிக்க வேண்டுமென்று முடிவெடுத்தாகி விட்டது.
அதற்கு தமிழுணர்வு முலாம் பூசினால் யாரும் கேள்வி கேக்க
முடியாது. இந்த இழப்புக்கெல்லாம் ஜனவரியிலிருந்து
உங்களை, (எங்கு இருக்கிறீர்கள்)தமிழ்நாட்டில் இருப்பவர்க்ளை
VAT வாட்ட போகிறார்கள்.

 
At 7:28 PM, Blogger ஜயராமன் said...

அடுத்து உடனே வர வேண்டிய சில சட்டங்கள்:

1. தமிழில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் வருமான கணக்கு காட்ட வேண்டியதில்லை. கருணாநிதி, ஸ்டாலின், ஜயராமன் முதலான பேர்கள் மாறும்.

2. தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப துண்டு போட்டுக்கொண்டால் சொத்து வரி கிடையாது. அதுவும் மஞ்சள் துண்டாக இருந்தால், அரசாங்கம் தாங்கள் சேர்த்த சொத்தில் 10% பொது சொத்திலிருந்து மேலும் கொடுக்கும்.

3. தமிழ் கலாசாரப்படி வேட்டி கட்டினால், உடனே மந்திரி பதவி. சின்ன ஐயாக்களும், பேராண்டிகளும் நிரந்தரமாக லாபம் அடைவார்கள்.

இம்மாதிரி சட்டங்களை ஆவலுடன் தமிழகம் எதிர்பார்க்கிறது

நன்றி

 
At 7:54 PM, Anonymous Anonymous said...

வாட் பற்றி தவறாகக் கருதுகிறீர்கள். தற்போதுள்ள பன்முனை வரி மூலம் வியாபாரிகளுக்கு நஷ்டமே. மேலும் வரி வசூலிப்பவர் ஒழுங்கு பற்றி ஊருக்கே தெரியுமே. பல இடங்களில் வரி மற்றும் கிரி (வரி வசூல் செய்பவருக்கு கொடுக்கும் கில்மா) கொடுப்பது குறையும்.

பல வியாபாரிகள் முறையான கணக்கு காண்பிக்கவும் முறையான வரி செலுத்தவும் வாய்ப்பு உண்டு. இதனால் பொருட்களின் விலைகளும் குறையலாம்.

 
At 11:02 PM, Blogger வெற்றி said...

ஆதிரை,
யாழ்ப்பாணத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். 'காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்' என்று சொல்வார்கள். அதே போல் கலைஞர் எதைச் செய்தாலும் விளம்பரதிற்காகச் செய்கிறார் எனும் பார்வையோடு பார்ப்பதால் இந்த நடவடிக்கையும் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது என நினைக்கிறேன். திரை[சினிமா] என்பது மிகவும் பலம் வாய்ந்த ஊடகம். நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகையினர் இந்த சினிமாவில் வருவதை தங்கள் வாழ்க்கையிலும் பின்பற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழகத்தமிழர்கள் பலர் தங்கள் பெயரைத் தமிழில் எழுதும் போதும், S.ஆறுமுகம், என்றிருந்தால் எஸ்.ஆறுமுகம் என்று எழுதுகிறார்கள். காரணம் இந்த திரை மோகம். MGR அவர்கள் எம்.ஜி.ஆர் என்று பெயர் வைத்து வெற்றி பெற்ற பின்னர், அவர் பாணியில் பலர் தமிங்கிலத்தில் எழுத் ஆரம்பித்துவிட்டனர். இது தமிழ்க் கொலை இல்லையா? இப்படி என்னால் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டு போக முடியும். எனவே இந்த தமிழ்திரைப்படங்கள் பெயர்களைத் தமிழில் வைப்பவர்களை ஊக்கிவிப்பது நல்ல முயற்சியே.

 
At 4:00 AM, Blogger aathirai said...

அனானி,
விலை குறைந்தால் எனக்கு மகிழ்ச்சி. ஐடி கம்பெனிக்கும்,
சினிமாக்களுக்கும் வரி விலக்கு அளித்துவிட்டு
சாதாரண மக்களுக்கு வரி விதிப்பது (இது பல
வழிகளில் வருங்காலத்தில் எப்படியும் வாங்கப்படும்)
நியாயமா?

வெற்றி,
சினிமாவை விட இன்று தமிழர்களை தினமும் தாக்குவது
சன் டிவிதான். ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் டிவி
பார்க்கிறார்கள்? இதை திருத்த முடிந்ததா?

 
At 9:17 AM, Blogger Nakkiran said...

வெற்றி அவர்களே...

உண்மையிலே தமிழை வளர்க்கும் ஆசை இருந்தால் ஏனய்யா சன் டிவியில் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் கூட தமிழுக்கு ஒதுக்கவில்லை..

ஏனென்றால் அது அவர் சொந்தபணம்...

மக்கள் பண்த்தை எடுத்து வரிவிலக்கு அளிக்கிறார்... கடைத்தேங்காய்.. வழிபிள்ளையார்...

 

Post a Comment

<< Home