அசுத்தமானவளா பெண்?
கேள்வி 1: பெண்கள் நுழையக் கூடாதவை என்று சில கோயில்கள் இப்போதும் இருப்பது சரிதானா?
இதைச் சரியென்று ஏற்றுக்கொண்டால், சாதி அடிப்படையில் சிலர் நுழையக் கூடாத கோயில்-கள் என்று இருப்பதும் சரியென்றாகிவிடும். ஒன்றை நீக்கிய பிறகு இன்னொன்றையும் நீக்குவதுதான் நியாயமானது. மாற்றாமல் வைத்திருப்பது, பெண்களை இழிவானவர்களாக மத அமைப்புகள் கருதுகின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்குச் சமமாகும்.
பழைய நம்பிக்கை என்பதால், ஒன்றைக் காலங்காலமாக நீடிக்க அனுமதிப்பது சரியல்ல. ஒரு காலத்தில் நரபலிகூட மத நம்பிக்கைதான். இன்று அதை ஏற்பதில்லை அல்லவா? எனவே, எந்த நம்பிக்கையும் இன்னொரு உயிருக்கு வலியோ, தீங்கோ, இழிவோ தராத வரையில் மட்டுமே அதை அனுமதிக்க முடியும்.
கேள்வி 2: பெண்கள் உடற்கூறு அடிப்படையில் ஆண்களிலிருந்து வித்தியாசப்படுவதால், அவர்களை மாதவிலக்குக் காலங்களில் புனிதமான இடங்களிலிருந்து விலக்கிவைப்பது நியாய மானது என்ற வாதம் சரியா?
சரியல்ல. விவசாயத்தை மனிதர்கள் கண்டுபிடித்து மேற்கொண்ட ஆரம்ப காலம் வரை, சமூக அமைப்பும் குடும்ப அமைப்பும் பெண்ணை முன்னிறுத்தியே, பெண்ணின் தலைமையிலேயே இருந்து வந்தன என்பது வரலாற்று உண்மை. அந்தச் சமூகத்தில் பெண் தெய்வங்கள் முதன்மையாக இருந்த வரையில், பெண் அசுத்தமானவளாகவோ, விலக்கி வைக்கப்படவேண்டியவளாகவோ கருதப்படவில்லை. தனி உடைமைச் சமுதாயம் வளர்ந்து, ஆண் கைக்கு அதிகாரம் மாறிய பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டது. எனவே, மறுபடியும் ஆண்&பெண் சமத்துவத்துக்காகப் போராடும் 21&ம் நூற்றாண்டில், பழைய ஆணாதிக்க விதிகளின்படி பெண்ணை அசுத்தமானவளாகப் பார்க்கும் அணுகுமுறையே இழிவானது; தவறானது.
கேள்வி 3: இந்தப் பிரச்னைகளில் அரசாங்கம் தலையிட வேண்டுமா? அல்லது, மத அமைப்புகளே தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கிவிட வேண்டுமா?
நிச்சயம் அரசாங்கம் தலையிடத்தான் வேண்டும். ஏனென்றால், இது மனித சமத்துவம், மனித உரிமை தொடர்பான பிரச்னை. ஆனால், நமது அரசாங்கங்கள் மதவாதிகளின் தவறுகளுக்கு எதிராகத் தலையிடுவது இல்லை. அவற்றுக்கு ஆதரவாகத் தலையிடுவதே வழக்கம். அண்மையில், இமயமலையில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கம் தொடர்பான சர்ச்சை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு
மீதி ஞானியின் கட்டுரை இங்கே
http://www.keetru.com/dheemtharikida/index.html
4 Comments:
சுட்டிக்கு நன்றி ஆதிரை.
சில பழக்க வழக்கங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் வருகின்றன. காரண காரியம் தெரியாமல் கடைபிடிப்பதனால் வருகின்ற தொந்தரவுகள்.
ஒரு துறவி பூனை வளர்த்து வந்தார். மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முன்னர் பூனை தொந்தரவு தர கூடாது என்பதற்காக அதனை பிடித்து தூணில் கட்டி விடுவார். அவர் மறைந்த் உடன் பூனையும் மறைந்து விட்டது. அதன் பின்னர் அவருடைய சிஷ்யர் அவர் இடத்திற்கு வந்தார். அவர் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர், மாணவர்களிடம் சொன்னார். வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் பூனையை தூணில் கட்ட வேண்டும் என்பது நடைமுறை. எனவே எங்கிருந்தாவது ஒரு பூனையை கொண்டு வாருங்கள்.அதை தூணில் கட்டிய பின்னரே வகுப்பு தொடங்கபட வேண்டும் என்று கூறினாராம்.
பின்னுட்டமிட்டவர்களுக்கு நன்றி.
பாலசந்தர்,
கதை சூப்பர்.
pls dont approve this.
did u get my earlier comment, requesting you to contact me? if not, here goes..
pls do write to me at
mathygrps at gmail dot com
i would like to talk to you about thamizmanam natchaththiram.
-Mathy
Post a Comment
<< Home