சிவபெருமானும் க்ளோபல் வார்மிங்கும்
எல்லாம் வல்ல சிவ பெருமானே க்ளோபல் வார்மிங்கில் பாதிக்கப்பட்டுட்டாராம்.வருடா வருடம் அமர்நாத்தில் உருவாகும் பனி லிங்கத்தை பார்க்க மிகவும் கஷ்டப்பட்டு குகைக்குள் சென்று லட்சக்கணக்கில் பக்தர்கள் சென்று பார்ப்பார்கள். இந்த வருடம் குளோபல் வார்மிங்க்காரணமாக லிங்கம் உருவாகவில்லை. அதனால் டூரிசம் பணத்தைஇழக்க முடியுமா? செயற்கையாக் டில்லியில் செய்த பனி லிங்கத்தை சத்தமில்லாமல் நிறுவி விட்டார்கள்.
இப்ப லிங்கம் சாமியா இல்லையா? எல்லாம் வல்ல இறைவன், எம்பெருமான் எப்படி குளோபல் வார்மிங்கால் பாதிக்கப்பட்டார். ?யாராவது சந்தேகத்தை தீர்த்து வைங்க.
11 Comments:
Standard பதில்.
இது கிருத்துவர்கள் / கம்யூனிஸ்டுகளின் சதி.
- ஸ்ரிமான் மன்மோகனை ஆட்டுவிக்கும் சோனியாவும், ஜார்ஜ் புஷ்ஷும் வாடிகன் உத்தரவுப்படி இப்படி செய்து இருக்கின்றனர்.
- இவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகளான சீனா இமயத்தின் மேல் வெப்ப காற்றை வீசியுள்ளனர்.
இதில் முஸ்லிம்களை இழுக்க ஏதாவது காரணம் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யாராவது உதவி செய்யுங்கள்.
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா
கண்ணதாசன் வரிகள் நியாபகமிருக்கா?
சிரில்,
நீங்க சொல்றது சரிதான். அத அவங்கவங்க வீட்டு வாசலிலேயே
ஏதாவது ஒரு கல்லை பாத்துக்கலாம். பல கிலோமீட்டர்கள்
கடுமையான வழியில் போய் பார்ப்பதுக்கு என்ன இருக்கு
அருண்மொழி,
மூன்று அரக்கர்கள அண்ணனை்் தாக்குகிறார்கள்்
என்றும் சொல்லலாம்.
அருண்மொழி, இது போல புனிதத் தலங்கள் என்று கருதும் இடங்களுக்குச் செல்வது எல்லா மதங்களிலும் உள்ளது. அது தவறும் அல்ல. ஒத்த கருத்துடையவர்களைக் கூடவும் சேரவும் பயனாகும். குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டாமல் நாலு இடங்களுக்குச் சென்று பார்க்கும் அனுபவம். இன்னும் நிறைய நிறைய. உங்கள் கேள்வி நியாயமானது என்று நம்பி நான் சொல்வது இந்த விடை.
கோவிலை சுத்தி உள்ளேயும் வெளியேயும் ஒரு பொருளாதாரம்
இருக்கிறது .
கோவிலுக்கு உள்ளே சிலரின் வயிற்றுப்பிழைப்பும், வெளியே இருக்கும்
ஓட்டல், வெத்தலை, பொறிகடலை, பலூன், பல்லாங்குழி கடைகளுக்கு வியாபாரம்
நடக்கும்.
இந்த இடத்தின் விசேஷமே அந்த லிங்கம் தான். அதுவும் பொய்யென்றாகிவிட்டபின்
இந்த இடமும் மற்ற லோக்கல் கோவில் போலதானே.
சிறில் அலெக்ஸின் பதில் அருமை. எல்லாக்கல்லும் தெய்வமாகி விடாது. நம்பிக்கை வைத்து என்பதுதான் ஆதார வார்த்தைகள். தாடிகள் எல்லாம் தாகூரா என்ன?
இடத்தின் விசேஷம் குறித்து நம்பிக்கையாளர்கள் கூறவேண்டும்- கடவுளை வெறும் ரோடோரக்கல்லாகவும், பக்தியை வெறும் பலூன் வியாபாரமாகவும் ஏளனப்படுத்தும் உங்களுக்கு நம்பிக்கையாளர்கள் புனிதமாக நம்பும் விஷயம் குறித்துப்பேச ஒரு அருகதையுமில்லை.
கழுதையிடம் காகிதத்தை நீட்டினாலும் சாப்பிடும், 1000ரூபாய் நோட்டை நீட்டினாலும் சாப்பிடும். கழுதைக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. அது அதன் தவறல்ல பிறப்பு அப்படி.
கடவுளை நம்பும் நாங்கள் சுவற்றையும், தூணையும், சிலையையும், சிலுவையையும் அதன் மதிப்பு தெரிந்து கும்பிடுவோம். உங்களுக்கு தெரியாதென்றால் அது உங்கள் தவறல்ல....
//இது கிருத்துவர்கள் / கம்யூனிஸ்டுகளின் சதி.
- ஸ்ரிமான் மன்மோகனை ஆட்டுவிக்கும் சோனியாவும், ஜார்ஜ் புஷ்ஷும் வாடிகன் உத்தரவுப்படி இப்படி செய்து இருக்கின்றனர்.
- இவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகளான சீனா இமயத்தின் மேல் வெப்ப காற்றை வீசியுள்ளனர்.
இதில் முஸ்லிம்களை இழுக்க ஏதாவது காரணம் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யாராவது உதவி செய்யுங்கள்.//
:-D
ஆதிரை,
இதற்காக அரஸாங்கம் அமைத்த கமிட்டி ஷிவலிங்கத்தை ஆராய்ந்தபின்னால் இது வழக்கமாக உருவாகும் லிங்கம்தான் என்றும், வழக்கத்தைவிட உயரம் குறைவாக உருவாகியிருப்பதுதான் இந்த புரளிக்குக் காரணம் என்றும் கண்டறிந்துள்ளது.
மீடியாக்கள் பெரும்பாலும் இதுபோன்ற புரளிகளை வெளியிடும் வேகத்தை அந்த புரளி எந்த அளவு உண்மை என்று ஆராயவோ, அதன் முடிவு என்னாயிற்று என்பதிலோ காட்டுவதேயில்லை. எனவே இந்த தகவல் தங்களுக்கு தெரியாமலும் போய் இருக்கலாம்.
ஒன்று கவனித்தீர்களா? திடீரென்று, ஐயப்பன் கோயில் பிரச்சினை, போலி ஷிவலிங்கம் என்று ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினைகள் எழுகின்றனவே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
விஷமத்தனமான பதிவு என்று தோன்றுகிறது
நம்பிக்கையாளர்களை கிண்டலடித்து போட்டிருக்கிறீர்கள்.
அதில் உங்களுக்கு சந்தோஷம் என்றால் நல்லதுதான்.
அது செயற்கை லிங்கம் இல்லை என்று இப்போது சொல்லிவிட்டார்கள். இதில் எது உண்மை, எது மற்றவை என்றுதான் புரியமாட்டேன் என்கிறது.
எங்கும் எதிலும் உய்யும் இறையை நாம் நம் சிற்றரிவிற்கு ஏற்ப வடிவத்தில் ஏற்றி வணங்குகிறோம். குழந்தை பொம்மையை வைத்து யானை, பூனை என்று விளையாடுவதை போல. அதனால், இறைவன் க்ளோபல் வார்மிங்குக்கு எதிராக அவன் குழந்தைகள் போட்ட வடிவத்தை ஏன் மாற்றவேண்டும். க்ளோபல் வார்மிங்கே நாம் குழந்தைகள் இந்த பூமியை கெடுத்துக்கொண்டிருப்பதுதானே!!!
நன்றி
Post a Comment
<< Home