ullal

Tuesday, June 27, 2006

கண்ணகி காமெடி- இரண்டாவது சுற்று

கண்ணகியை பின்பற்ற சொல்லுகிறதா தமிழக அரசுhttp://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_4.html
பகுத்தறிவாளர் வேடத்தில் பகைவர் கூட்டம்http://www.keetru.com/anaruna/jun06/anaruna.html

ஆனாரூனாவின் கட்டுரை படித்து சிரித்து மகிழ உதவும். ஞானியின் எந்தகேள்விக்கும் பதில் வைத்ததாக தெரியவில்லை. பார்ப்பன சங்கரன்பகுத்தறிவு பேசுவதா என்று பெரிய ரப்பர் ஸ்டாம்ப் எடுத்து குத்துகிறார்.

அடிமைத்தனத்திற்கு அன்பு என்று பெயர் வைத்து ஜல்லியடித்து ஏமாற்றும் வித்தை எவ்வளவு நாள் ஓட்டுவார்கள்? யார் கண்டார்கள் ? பாண்டிய மன்னன் கோவலனைகொல்லாமல் இருந்திருந்தால் சிலம்பு விற்ற காசில் மாதவிக்கு பதிலாக வேறு ஒரு தேவியை தேடியும் போயிருப்பான்.

இப்பொழுது பிரச்சினை கிருஷ்ணனை போற்றுபவர்கள் கண்ணகியை இழிப்பது அல்ல.பகுத்தறிவாளர்கள் பிற்போக்குவாதிகளாக ஆனதுதான் பிரச்சினை.

இந்த கட்டுரையின் அதிகபட்ச நகைச்சுவை ஜமீன்களை எல்லாம் மந்திரிகளாகவைத்திருக்கும் கருணாநிதி கம்யூனிஸ்டான கதை.

இன்று உண்மையிலேயே பெண்களுக்கு பேசப்படவேண்டிய பிரச்சினைகள் உள்ளது. கண்ணகிக்கு சிலை வைத்ததால் யாரும் சிலம்பு அணிந்துகொண்டு போக போவதில்லை. ஞானியும் திமுகவின் தமிழ் உணர்ச்சிவிளையாட்டுக்கு எண்ணை ஊற்றி வளர்க்கிறார். திமுக காரர்களுக்கு வேண்டியதும் அதுதான். இந்த சிலை வைத்ததால் தாங்களே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பறைசாற்றும் வாய்ப்பு. எத்தனையோ சிலை போல இதுவும் ஒரு சிலை என்று கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம்.

மக்கள் பணத்தில் தினமும் அரசாங்க விளம்பரம் ("பேரன் பத்திரிகையில்") கொடுப்பதைப் பற்றி தனியாக பேச வேண்டும். இது போன்ற விஷயங்களைபேசாமல் திசை திருப்புவதற்காகதான் இந்த உணர்ச்சி தூண்டும் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.

9 Comments:

At 10:07 AM, Anonymous Anonymous said...

//இப்பொழுது பிரச்சினை கிருஷ்ணனை போற்றுபவர்கள் கண்ணகியை இழிப்பது அல்ல.பகுத்தறிவாளர்கள் பிற்போக்குவாதிகளாக ஆனதுதான் பிரச்சினை.
//

சும்மா நச்சுன்னு இருக்கு.

 
At 11:37 AM, Blogger ramachandranusha(உஷா) said...

போட்டீங்களே ஒரு போடு. கண்ணகி மட்டுமல்ல், ராமன், கண்ணன் போன்ற பாத்திரங்கள் அனைத்துமே இலக்கிய படைப்புகள் என்பதை மறந்துப் போனதன் விளைவு இது.

 
At 12:23 PM, Anonymous Anonymous said...

//
அடிமைத்தனத்திற்கு அன்பு என்று பெயர் வைத்து ஜல்லியடித்து ஏமாற்றும் வித்தை
எவ்வளவு நாள் ஓட்டுவார்கள்?
//

அன்பு என்பது பெண்களின் தனிச் சொத்தா? ஒரு தமிழனின் மனைவி இப்படி
பல காலம் வேறு ஒருவனின் வீட்டிலிருந்துவிட்டு வந்தால் தமிழன்கள்
அன்புடன் வரவேற்பார்களா?

பெண்களை கடவுளாக்குகிறோம்,பெண்கள் அன்பு நிறைந்தவர்கள் என்று
சொல்லியே ஏமாற்றி விடுவார்கள். பெண்கள் மனுஷியாக இருந்தாலே போதும்.

 
At 3:34 PM, Blogger கால்கரி சிவா said...

//பாண்டிய மன்னன் கோவலனைகொல்லாமல் இருந்திருந்தால் சிலம்பு விற்ற காசில் மாதவிக்கு பதிலாக வேறு ஒரு தேவியை தேடியும் போயிருப்பான்.
//

ஆம்பளைன்னா அப்படிதான் என ஒரு சல்ஜாப்புக் கட்டபட்டிருக்கும். மதுரையை எரித்த கண்ணகி இந்த மாதிரி ஆண்களை எரித்திருக்கலாம்

 
At 3:42 AM, Blogger சந்தர் said...

///எத்தனையோ சிலை போல இதுவும் ஒரு சிலை என்று கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம்.///

இந்த அறிவுரையை ஜெயலலிதாவுக்கு சொல்லியிருந்தால் நீங்களும் நானும் இப்போது கண்ணகியை பற்றியே பேசியிருக்கப்போவதில்லை!

 
At 5:40 AM, Blogger aathirai said...

ஜெயலலிதாவுக்கு அறிவுரையா , அதெல்லாம் கேக்கற
ஆளா அந்தம்மா

 
At 9:57 AM, Blogger குழலி / Kuzhali said...

//இந்த சிலை வைத்ததால் தாங்களே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பறைசாற்றும் வாய்ப்பு. எத்தனையோ சிலை போல இதுவும் ஒரு சிலை என்று கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம்.
//
இந்த சிலைக்கு பின்னும், சிலையை வைத்தும் அரசியல் உள்ளது, முடிந்தால் எழுத முயற்சிக்கிறேன்.

 
At 1:06 PM, Blogger aathirai said...

குழலி ,
உங்கள் பதிவை ் எதிர்பார்க்கிறேன்.

 
At 6:34 PM, Blogger குழலி / Kuzhali said...

சிலையரசியலில் எழுத்தாளர் ஞானியும் கலைஞர் கருணாநிதியும் என்ற என் பதிவின் சுட்டி http://kuzhali.blogspot.com/2006/07/blog-post.html

 

Post a Comment

<< Home