ullal

Monday, June 12, 2006

இட ஒதுக்கீடும் என்.ஆர்.ஐ இந்தியரும்

nri 1 -என்னப்பா இந்தியால என்ன நடக்குது ?

nri 2- ஓபிசிக்கு ஐஐடில இட ஒதுக்கீடு கேக்கறாங்க.

nri 1 - அதனால என்ன ?

nri 2- முப்பது மார்க் வாங்கிட்டு சீட் வாங்கப்போறானுங்க.

nri 1 - அப்படியா ?

nri 2- இந்த கருணாநிதிக்கும், ராமதாசுக்கும் கோடி கணக்கில்பணம் இருக்கு. இவங்க பசங்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு குடுக்கணும்?

nri 1 - ஓஹோ.

nri 2- நர்மதா அணை கட்டக்கூடாதாம். இந்த ஆதிவாசிங்களால நாட்டுக்கு என்ன ப்ரயோசனம்? நர்மதா அணையை ஒரு துலுக்கன் ஆமிர்கான்எதிர்க்கறானாம்.

nri 1 - சரி. விடுப்பா. இப்ப எங்க வேலை பாக்கறே?

nri 2 - அரசாங்க கான்ட்றாக்ட் பேர் சொல்லுகிறார்.

nri 1 - மைனாரிடி கம்பெனியா? அப்ப நீயும் இட ஒதுக்கீட்டுல தான வேலை செய்யறே

nri 2 - அத எப்படி கண்டுபுடிச்சீங்க.

nri 1 - ஆமாம். உங்க பையன் என்ன செய்யறான்.

nri 2 - இந்தியாவுக்கு அனுப்பிட்டேன். மெடிகல் காலேஜில் படிக்கிறான்.

nri 1 - என்.ஆர்,ஐ கோட்டாவா

nri 2 - ஆமா, அனியாய காசு புடுங்கறாங்க.
சரி. நான் கெளம்பறேன்.இங்க இந்தியாவில் இட ஒதுக்கீடு எதிர்த்து நாங்க போராட போறாம். வரட்டுமா?

இதற்கு மேல் உரையாடல் கேட்டவருக்கு தலை சுத்தி விட்டது.

2 Comments:

At 12:08 PM, Blogger வவ்வால் said...

வாழ்த்துகள் ஆதிரை!

சிரில் அலெக்ஸ் பதிவில் பார்த்தேன் பாஷா இந்தியாவின் சிறந்த தமிழ் வலைப்பதிவு(political) என தேர்வு பெற்றதை.மேலும் பல சாதிக்க வாழ்த்துகள்!

 
At 8:15 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

pls approve this comment.

could u pls write to me at

mathygrps at gmail dot com

i would like to talk to about being thamizmanam natchaththiram from aug 21-27.

-Mathy

 

Post a Comment

<< Home