விஜயகாந்தை நம்பலாமா?
கருணாநிதி மற்றும் ஜெயாவிற்கு வாய்ப்பு கொடுத்து விட்டோ ம். இவர்கள்அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை. ஒருவர் குடும்ப அரசியல் செய்கிறார்.பத்திரிகை துறையில் ஆதிக்கம் செய்கிறார். மற்றவர் ஆட்சியில் வேட்பாளர்களேரோட்டில் நடந்து செல்ல துப்பாக்கி போலீஸ் துணை போட வேண்டியிருக்கிறது.அதனால இவருக்கு போட்டு பாத்தா என்ன என்று ஒரு வாதம் வைக்கிறார்கள்.
ஆக தமிழகத்தில் ஓட்டு போடுவது என்பது லாஸ் வேகாஸ் ஸ்லாட் மெசின் போலஆகிவிட்டது. இவருக்கு போட்டுதான் பார்ப்போமே என்று சூதாடும் விஷயாமாக கருதுகிறார்கள்.
விஜயகாந்த் சிலசமயம் ரொம்ப யோசித்து முடிவெடுப்பது போலவும் தெரிகிறது.சில சமயம் தமாசாக ஒவரான அதீதமான கற்பனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இவருக்கு இருக்கும் ஒரே தகதி இதற்கு முன்பு அராஜகம் செய்யும்வாய்ப்பு இவருக்கு கிடைக்காததே. இந்த ஒரு தகுதியை பார்த்து எப்படி ஓட்டுபோடுவது?
இட ஒதுக்கீடு பிரச்சினை நாட்டையே போட்டு உலுக்கினாலும் கல்லூரி உரிமையாளரான இவர் அது பற்றி பேச மாட்டார். ஜெயலலிதாவை திட்டியே ஆட்சியைப்பிடிக்கும் கருணாநிதியைப் போல மற்ற இரண்டு கட்சிகளையும் திட்டினாலேஆட்சியை பிடிக்கலாம் என்று நம்புகிறார்.
இவருக்கு இருக்கும் ஒரே முதலீடு இவருடைய சினிமா புகழ் மட்டுமே. இப்படிஒரு ஒற்றை முகத்தை மட்டுமே வைத்து எந்த அடிப்படையும் கொள்கையில்லாத கட்சி ஜெயாவின் அதிமுக கட்சி போலதான் இருக்கும். இது போன்ற கட்சிகளில் தலைவர் எப்பொழுதும் ஒன்றாகவும் மற்றவர்கள் பூஜ்யமாக இருப்பார்கள். இன்று ஜெயலலிதாவின் முன்பு மண்டியிடும் வேட்பாளர்களைப் போல இவரைத்தவிர வேறு யாருக்கும் மதிப்பு இருக்காது. இங்கும் குடும்ப அரசியல் கொடிகட்டி பறக்கிறது. இவரை ஒரு பெரிய ஜால்ரா கூட்டம் சுற்றி வரும். என்னுடைய கணிப்பில் இவர் கருப்பு ஜெயலலிதாவாகதான் இருக்க முடியும்.
நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும். முதலில் நாட்டில் இருக்கும் பொது பிரச்சினைகளை விவாதிக்கட்டும். இவர்களுடைய கருத்துகளை எடுத்து வைக்கட்டும். ஜனநாயக முறையில் முதலில் கட்சியை நடத்திக் காட்டட்டும். இவருடைய கருத்துகள், நடைமுறைகள் தெரியாமல் சும்மா வீராவேசமாக சினிமா ஹீரோவைப் போல வீறாப்பாக பேசுவதும், எந்த பொருளாதார அடிப்படையும் இல்லாது இலவசங்கள் அறிவிப்பதையும் வைத்து நம்பி ஓட்டு போடுவது முட்டாள்தனம் அல்லது ஊதாரித்தனமானபரிசோதனை.
10 Comments:
sittukkuruvi avargale ungal padhivai paarthudhan ezudhinen. ivar ozungaga iruppar enbadharku edhavadhu adippadai ezudhi irukireergala. idhu enna soodhaatama?
//விஜயகாந்த் சிலசமயம் ரொம்ப யோசித்து முடிவெடுப்பது போலவும் தெரிகிறது.சில சமயம் தமாசாக ஒவரான அதீதமான கற்பனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இவருக்கு இருக்கும் ஒரே தகதி இதற்கு முன்பு அராஜகம் செய்யும்வாய்ப்பு இவருக்கு கிடைக்காததே. இந்த ஒரு தகுதியை பார்த்து எப்படி ஓட்டுபோடுவது?//
சில மரமண்டையில மட்டும் இது ஏற மாட்டேங்குதே...
ஒரு தடவை இவருக்கும் அராஜகம் செய்ய வாய்ப்பு கொடுங்கன்னு தானே இவங்க "பிரச்சாரம்"பண்ணுராங்க!
And see mine too!
www.aaththigam.blogspot.com
:-)
ஆதிரை,
நிறைய பொதுப் பணிகள் செய்துள்ளேன். நிரைய தான தருமங்கள் செய்துள்ளேன் என்று கூறித் தான் அரசியலில் நுழைந்துள்ளார். நீங்கள் சொல்வது போல, கொள்கை அளவில் தெளிவான பார்வைகளை இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், அவரது கல்லூரியில் வேலை பார்க்கும் ஒருவரின் கருத்துப் படி இவர் ஒன்றும் உத்தம புருஷன் இல்லையாம். இன்னும் ஒரு நண்பர், மதுரையில் இவரது உள்வட்டம் போட்ட கூத்துகளைப் பற்றி கூறினார்.
இருந்தாலும், இவ்வளவு இறங்கி, கிராமம் கிராமமாக மக்களிடம் போகும் அக்கறையும் உழைப்பும், கைப்பணத்தைச் செலவழித்து அரசியல் பண்ணும் துணிச்சலும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அவர் சொல்வது போல, சினிமாவில் சம்பாதித்த சொத்துகளைக் காத்துக் கொண்டு ஓய்வு பெற்று விடாமல் இப்படி நாயாய் அலையும் ஆர்வத்துக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?
அன்புடன்,
இவரைப் போலவே சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே
அரசியலுக்கு வந்த இன்னொரு அரசியல்வாதியின் குடும்பம்
எனக்கு நெருக்கமான நண்பர்கள். கோடி கணக்கில் பணாம்
புரள்வதால் வருடா வருடம் வருமான வரி காரணத்துக்காக
சில அமைப்புகளுக்கு தருமம் செய்வார்கள். ஆனால் தேர்தலில்
மட்டும் இந்த கட்சி தேறவே இல்லை. காரணம் அவருக்கு
சுத்தமாக சமூகத்தைப் பற்றி ஒரு பஅக்கறையும் இல்லை.
இது போன்ற ஆட்களால் சமூகத்திற்கு எந்த பிரயோசனமும்
இருக்குமென்று தோன்றவில்லை.
SK அவர்களே மீண்டும் ஒரு கழகத்தை வளர்க்க வேண்டுமா
என்று கேட்கிறேன்.
//ஜெயாவின் அதிமுக கட்சி போலதான் இருக்கும். இது போன்ற கட்சிகளில் தலைவர் எப்பொழுதும் ஒன்றாகவும் மற்றவர்கள் பூஜ்யமாக இருப்பார்கள்.//
கருணாநிதி கட்சியில மட்டும் என்ன வாழுதாம்?
கொள்கைகளால் உருவாக்கப்பட்ட இயக்கத்தையே துதிபாடிகளின்
இயக்கமாக கருணாநிதி மாற்றுகிறபோது மற்ற கட்சிகளின் நிலை
எப்படி இருக்கும்?
"கருப்பாக இருக்கிறான். அதனால களவாணிப்பயலாகத்தான் இருப்பான்" என்கிற ரீதியிலான பதிவு. மெய்யாலுமே உங்களிடமிருந்தா???
அனானிமஸ் அவர்களே தவறாக படித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாட்டு அனுபவத்தை வைத்து எழுதினேன். அவர் பொது பிரச்சினைகளைப்
பற்றி பேசி அவரைப் பற்றி அறிந்துக்கொள்ளாமல் அயர்ன் பாக்ஸ் கொடுக்கிறார்
என்று ஓட்டு போடுவதா? என்னுடைய அனுமானம் தவறாகவும் இருக்கலாம்.
//ஆக தமிழகத்தில் ஓட்டு போடுவது என்பது லாஸ் வேகாஸ் ஸ்லாட் மெசின் போலஆகிவிட்டது.//
//விஜயகாந்த் சிலசமயம் ரொம்ப யோசித்து முடிவெடுப்பது போலவும் தெரிகிறது.சில சமயம் தமாசாக ஒவரான அதீதமான கற்பனையில் இருப்பதாகவும் தெரிகிறது. //
//இட ஒதுக்கீடு பிரச்சினை நாட்டையே போட்டு உலுக்கினாலும் கல்லூரி உரிமையாளரான இவர் அது பற்றி பேச மாட்டார். //
இதல்லாம் சரிதான்.
//எந்த அடிப்படையும் கொள்கையில்லாத கட்சி //
ஆனா கொள்கை பத்தி மட்டும் பேசாதீங்க. கொள்கை வேறு, கட்சி வேறு, கூட்டணி வேறு. ஆனால் அரசியலின் ஒரே நோக்கம் பதவி/பணம். தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கொள்கை அந்த அந்த கட்சித் தொண்டனுக்கே தெரியாது.
மக்கள் மாற வேண்டும்.
Post a Comment
<< Home