ullal

Thursday, April 06, 2006

அரசியல்வாதி ஆக வேண்டுமா?

முதலில் சூடு, சொரணை இரண்டும் சுத்தமாக இருக்கக்கூடாது. இது அடிப்படை தகுதி. இது இருந்தால் மேலே படிக்கலாம்.

1. இன்று எதையோ குளிப்பாட்டி எங்கயோ வெச்ச மாதிரி என்று வசனம் பேச வேண்டி வரும். நாளையே அண்ணா தம்பி என்று கண்ணீர் விடலாம்.
தினமும் கண்ணாடி முன் நின்று :) :( இப்படி மாறி மாறி முகபாவங்கள்
பயிற்சி செய்யவும்.

2. தினமும் முச்சந்தி பிள்ளையார் கோயிலில் 50 முறை தோப்புக்கரணம்,செய்து பயிற்சி செய்ய வேண்டும்.

3. சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று சாச்டாங்கமாக விழுந்துசேவித்து பழகவும்.

4.சந்திரபாபு, லூஸ் மோஹன் படங்களைப் பார்த்து தூய சென்னை செந்தமிழ் பேச கற்கலாம். கொஞ்சம் திறமை உள்ளவர்களுக்கு கொங்குதேர் வாழ்க்கை மாதிரி சிவாஜி பட வசனங்கள்.

5.கோஷ்டி சண்டை போடுவதற்கு யாராவது ஒரு குஸ்தி பயில்வான் பள்ளியில்சேர்ந்து பயிற்சி செய்யலாம்.

6. ஒரு பெரிய ட் ரம்மில் தார் வாங்கி வந்து வீட்டில் சுவத்துக்கு தார் பூசி பழக வேண்டும். மாதம் ஒரு முறை செய்தால் போதும்.

7. வாரம் ஒரு முறையாவது அலுமினிய தட்டில் களி சாப்பிட்டு, வாலிபால் விளையாடி பயிற்சி செய்ய வேண்டும்

8.ஏதாவது ஒரு நாட்டுக்கு விசா எடுத்து வைக்கவும். கட்சித் தலைவரின் கோபத்துக்குஆளாகும்போது ஒளிந்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

9. திருமணம் செய்யும்போது மனைவிக்கு அவசியம் ஒரு தம்பியாவதுஇருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுங்கள்.

10. உங்கள் ஊரில் உள்ள நூலகம், பழைய புத்தக கடைக்கு சென்று குட்டிகதைகள் சேகரிக்கவும். அதை சிசுவேஷன்க்கு ஏற்ப உடனடியாக தேடுவதற்குவசதியாக இது போன்ற தலைப்புகளில் அட்டவணப்படுத்தவும்(index?).துரோகம், நன்றி , பிரிவு , பிரிவிற்கு பின் சேர்தல் இப்படி

11. தமிழ் பழமொழிகள் புத்தகம் வாங்கி வைக்கவும்.

12. கலர் துண்டு ஒரு டஜன் வெவேறு கலர்களில் வாங்கவும். கட்சி மாறும்போதுவசதியாக இருக்கும்.

13. வீட்டில் தாயார் இருந்தால் டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பவும்.

14. எப்பாடுபட்டாவது இரண்டு வீடுகள் வாங்கி விடுங்கள்.

15. தினமும் பகலுணவுக்குப் பின் கோலி சோடா குடிக்கவும். குடித்துமுடித்த பின் தூக்கி வீசி அடிக்க பழகவும்.

3 Comments:

At 6:11 AM, Blogger லக்கிலுக் said...

பொதுவாக அரசியல்வாதிகளை நக்கலடித்தால் அறிவுஜீவி என்பது போல் ஆகிவிட்டது... நீயும் அரசியல்ல இறங்கி பாரு நைனா.... எவ்வளவு கஷ்டம்னு தெரியும்...

 
At 1:27 AM, Blogger Geetha Sambasivam said...

உங்கள் ஊர் கோவிலில் ராமரும், கிருஷ்ணரும் ஏன் இல்லை என்று கேட்டிருக்கிறீர்கள்.ஊரே எது என்று புரியவில்லை.

 
At 8:46 PM, Blogger Muthu said...

this is related to comment you have posted on my blog..you can take it as a personal mail...you need not publish


ஆதிரை,

இதையேத்தான் நானும் கேட்டேன்.கெட்டேன். ராகவன் இதையேத்தான் எழுதியுள்ளார்.உஷா போன்றவர்கள் இதை சரியான ஆங்கிளில் எடுத்துக்கொள்வார்கள்.மற்றவர்கள் என்றோ வாங்கிய அடியை மனதில் கொண்டு மற்ற பதிவுகளில் போய் உங்களைப்பற்றி பெயர் சொல்லாமல் எழுதுவார்கள்.

இதற்கெல்லாம் தயார் என்றால் இதைப்பற்றி ஒரு விளக்கமான பதிவு எழுதுங்களேன்.

 

Post a Comment

<< Home