ullal

Thursday, February 09, 2006

உலக தேசிய கழுதைகள் திராவிட முன்னேற்ற கழகம்

மேஜர் கழுதை கருப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.
கழுதை ரசிகர் மன்றத் தலைவர் - அண்ணே, எங்க ஜோரா கெளம்பிட்டீங்க

மே.க. - புதுசா கட்சி ஆரம்பிக்கபோறேண்டா.

க.ர.ம.த - நமக்கு எதுக்குண்ணே இந்த வேலை ?

மே.க. - மக்களெல்லாம் நொந்து போயிருக்காங்கடா. ரெண்டு கட்சிகளும் மாத்திமாத்தி அராஜகம் பண்றாங்க.

க.ர.ம.த. - நமக்கு யாருண்ணே ஓட்டு போடுவா?

மே.க. - டே ரெண்டு கட்சியும் புடிக்காத மக்கள் வேற யார் வந்தாலும் ஓட்டு போடுவாங்கடா. அந்த நெலமைல இருக்காங்க.

க.ர.மத. - அது சரிண்ணே, நம்ம கட்சிக்கு பேர் என்ன?

மே.க - வெக்க மாட்டேனே, நம்ம கட்சிக்கு என்ன பேருன்னு எல்லாரும் மண்டயபிச்சிக்கணும்.

க.ர.மத. - கட்சி ஆரம்பிச்சு என்ன பண்ண போரீங்க.

மே.க - ஊழல ஒழிக்கப்போறேன். வீட்ட வித்து செலவு பண்ணப் போறேன்.

கரமத.- அண்ணி மொறைக்கறாங்க பாருங்க. அப்பொ அடுத்த தேர்தலுக்கு செலவுக்கு என்ன பண்ணுவீங்க.

மே.க திடீரென்று ஆவாசம் வந்து "யாராலும் என்ன மெரட்ட முடியாது. நான் மதுர வீரனாக்கும்"என்று சத்தம் போடுகிறார்.

க.ர.ம.த - கட்சின்னா கொள்கை வேணுமே. அதுக்கு என்ன செய்யறது.

மே.க - எதுக்கு கொள்கை ?அவங்க எல்லாம் கொள்கை வெச்சிருக்காங்களா சொல்லு?

க.ர.ம.த - வாஸ்தவந்தான்.

மே.க - தமிழ்நாட்டுல சம்பாதிக்க நாலு வழி இருக்கு. அதுல சினிமாலயும்,காலேஜிலயும் கால் வெச்சிட்டேன். மூணாவது அரசியல்.

க.ர.ம.த - நாலாவது எதுண்ணே

மே.க - அதுதாண்டா, சாமியாராவறது. ரஜினி இதையும் பண்ணிட்டார். கொஞ்ச நாள்கழிச்சு அதுல எறங்கலாம்.

மீண்டும் ஆவேசம் வந்து கத்துகிறார் "எங்கிட்டே மோதினீங்க, காணாம போயிடுவீங்க."

க.ர.ம.த - சும்மா கோஷம் போட்டா போதுமா. மக்களுக்கு என்ன செய்யணும்னு சொல்லணும்.

மே.க - மக்களுக்கு ஏதாவது செய்வோம்.

க.ர.ம.த - ஏதாவதுன்னா?

மே.க - டே, அத செய்வோம் இத செய்வோம்னு சொன்னா ஏன் அத செய்யலேன்னு கேப்பாங்க. ஏதாவது செய்வோம்னு சொன்னா எத வேணா செய்யலாண்டா.

க.ர.ம.த - அரிவு கொளுந்துண்ணே,

மே.க - மக்களை இந்தி படிக்க சொல்வோம். நான் இந்தி தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்.இல்லண்ணா பாலிவுட்ட ஒரு கை பாத்துருக்கலாம்.

க.ர.ம.த - அண்ணே, உங்கள வாழ வெச்சது தமிழ் படம்.

மே.க. - டே அமெரிக்காகாரன் இந்தி படிக்கிறான். அதுனால நாமும் படிப்போம்.

க.ர.ம.த முணுமுணுக்கிறார் (அமெரிக்காகாரன் டாய்லெட் பேப்பர் யூஸ் பண்றான்)

க.ர.ம.த - அப்படி எல்லாம் இல்லியாமே. அங்க இந்திகார பசங்களுக்கே இந்தி தெரியாதாமே. ஏதோ அரபு மொழி படிக்கறாங்களாம்.

மே.க. - டே, இந்தியில பாதி அரபு வார்த்தைடா. அப்ப அமெரிக்காக்காரன் பாதி இந்தி படிக்கிறனா இல்லையா?

க.ர.ம.த - எங்கியோ போய்ட்டீங்க. வேணும்னா இப்பிடி சொல்லலாமா? பின் லேடன்இந்தி படிக்கிறார். அதுனால அமெரிக்காகாரன் இந்தி படிக்கிறான். அதனால நாமும் இந்தி படிக்கணும்.

மே.க. இதுவும் நல்லாதான் இருக்கு.

க.ர.ம.த. - அண்ணே காலேஜெல்லாம் வெச்சிருக்கீங்க. இந்த இட ஒதுக்கீடு மசோதாபத்தியெல்லாம் ஒன்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க.

மே.க.- வாயக் கழுவு. இப்படியெல்லாம் கேப்பாங்கன்னுதான் நான் எந்த நிருபரையும் சந்திக்கறதில்ல.(தொண்டை கீச் கீச்சுகிறது.)

க.ர.ம.த. - நமக்கு இதுல அனுபவம் இல்லயே. இங்க காலம் தள்ள முடியுமா?

மே.க.- டே அவங்களுக்கு என்ன ஒரு 50 வருச அனுபவம் இருக்குமா.
நாம ரெண்டாயிரம் வருசமா பொது வாழ்க்கையில இருக்கோமடா.

க.ர.ம.த. - எப்ப்டி?

மே.க.- டே அந்த காலத்துலெயிருந்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தினவங்களநாம தானே ஊர்வலமா கூட்டிட்டு போனோம். சமீபத்துல குஷ்பு வீட்டுக்கு கூடஅரசியல் போராட்டத்துக்கு போனமா இல்லயா? நாம சும்மா குரல் கொடுப்போம்.மத்ததெல்லாம் பலாப்பழம் பாத்துக்குவார்.

க.ர.ம.த. - அப்படியா?

மே.க.- ஒரு பேட்டி குடுத்துருக்கார் பாரு. சிமெந்ட் வரி குறைச்சதில் முதலாளிகளுக்கு300 கோடி லாபம். அப்ப ஆட்சி பண்றவங்களுக்கு 100 கோடியாது இருக்கும்னு 'கரெக்டா' கணக்கு சொல்றாரு பாத்தியா? இதுக்குதான் இப்படி அனுபவசாலிங்கள பக்கத்துல வெச்சுக்கணும்.

அண்ணி ஜோசியர் குடுத்த தாயத்தோடு வருகிறார்.

கரமத கட்சி வேலய பாக்க கிளம்புகிறார்.

4 Comments:

At 10:23 AM, Blogger Santhosh said...

நீங்க தலைய கிண்டல் பண்ணி பதிவு போடுறிங்க வீட்டு பக்கம் ஆட்டோ அனுப்புறமாதிரி இருக்கும் பாத்துகுங்க. :)) நல்ல காமெடியா இருந்ததுங்க.

 
At 10:57 AM, Blogger aathirai said...

இந்த ஊர்ல ஆட்டோ இல்லாத தைரியந்தான்

 
At 6:32 PM, Blogger குழலி / Kuzhali said...

//டே, அத செய்வோம் இத செய்வோம்னு சொன்னா ஏன் அத செய்யலேன்னு கேப்பாங்க. ஏதாவது செய்வோம்னு சொன்னா எத வேணா செய்யலாண்டா.
//
ஹி ஹி இது சூப்பர் ஆப்பு இரண்டு பக்கத்திற்கும்...

 
At 9:48 PM, Blogger சந்திப்பு said...

அன்னே என் ஓட்டு உங்களுக்குத்தான்!

 

Post a Comment

<< Home