ullal

Monday, February 06, 2006

பாருக்குள்ளே நல்ல நாடு

இங்கு ஒரு பதிவில் (யாருடையது என்று மறந்துவிட்டது.) ரஷ்யாவில்எட்டு டாலர் வருமான வரி கட்டாவிட்டால் ரஷ்ய போலீஸ் குதிரையில்வரும் என்று எழுதியிருந்தார்கள்.

சரி அமெரிக்காவில் வருமான வரி கட்டாவிட்டால் மேள தாளத்துடன் பாராட்டு விழா நடக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இங்கு கருப்பு கண்ணாடி, துப்பாக்கியுடன் ஐ.ஆர்.எஸ் காரர்கள் காரில் வருவார்கள்.

இப்படி எல்லாம் செய்யாத நல்ல நாடு இந்தியாதான்.இந்திய கருப்புப்பணம் மொத்த GDP யில் 20 சதவிகிதம் (தோராயமாக).நம்ம இந்திய அரசாங்கமும் பணம் தேவைப்படும்போது, "கண்ணுங்களா உங்க கருப்பு பணத்த வெள்ளையா மாத்த வாய்ப்பு தறோம்" நு செல்லமா பொது மன்னிப்பு தந்தது.

அப்புறம் கோர்ட்டு 'இப்படியெல்லாம் மன்னிக்கக்கூடாது. கடும் நடவடிக்கைஎடுங்கள்' நு சொல்லிச்சாம்.

என்னடாது கடும் நடவடிக்கை எடுத்தா பாராளுமன்றமும் சட்டமன்றங்களும்காலியாகப் போய் ஏதாவது அரசியல் சட்ட சிக்கல் வந்துடுமோன்னு மண்டையை பிச்சிக்கிட்டு யோசிச்சு அடுத்த செல்லமான திட்டம் கண்டுபிடிச்சாங்க. அதாவது உங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தைக் கொடுத்து அரசாங்கம் zero coupon bond வாங்கிக்கொள்ளலாம். இப்படிஒரு கடும் நடவடிக்கையை கேள்விப்பட்டு எல்லோரும் நடுங்கிப் போயிருக்கிறார்கள்.


மொத்த GDP((735 பிலியன் டாலர்) யில்
ராணுவத்துக்கு செலவு பண்ணுவது வெறும் 3 சதவிகிதம்.
பற்றாக்குறை 9 சதவிகிதம்
கருப்புப்பணம் 20 சதவிகிதம்

எல்லா ஊரிலும் இளிச்ச வாயர்கள் உண்டு. இந்தியாவில் சம்பளம் வாங்குபவர்களைத்தான்சொல்றேன். பாவம் TDS என்று ஆரம்பத்திலேயே பிடிச்சுடுவாங்க.

இப்ப சொல்லுங்க. எது உண்மையிலேயே நல்ல நாடுன்னு?

0 Comments:

Post a Comment

<< Home