ullal

Wednesday, February 08, 2006

தேர்தல் நகைச்சுவை

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பேசுவது எப்பொழுதுமே நகைச்சுவையாகஇருந்தாலும், தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகப்படியாக தமாஷாக இருக்கும்.சென்ற தேர்தலில் அதிக தமாஷாக பேசியவர் வைகோ என்று நியாபகம். ஸ்டாலின் சில சமயம் புல்லரிக்கும் வகையில் பேசுவார்.

இந்த முறை அந்த இடத்தைப் பிடிக்க விஜயகாந்த் கோதாவில் குதித்திருக்கிறார்.இவருடைய மாநாட்டுக் காட்சிகளே ஒரு நகைச்சுவை குவியலாக இருந்தது.சமீபத்தில் இன்னும் தமாசாக பேசுகிறார்.

இவர்தான் இப்படி என்றால் இவருடைய உதவியாளர் பண்ருட்டி இவரையே மிஞ்சுவார்போல இருக்கு. ஒரு சேம்பிள்

நிருபர் - உங்க தலைவருக்கு அனுபவம் பத்தாதுன்னு சொல்றாங்களே!

பண்ருட்டி- கல்யாண மாப்பிள்ளைக்கு அனுபவம் இருக்கான்னு கேக்கலாமா?

நிருபர் - ????

நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாத தலைவர் ஜெயலலிதா. செம போர்.

இந்த விஷயத்தில் lifetime achievement அவார்ட் கொடுப்பதென்றால் அதுசு.சுவாமிக்குதான். இன்னும் இவர் பேஷ ஆரம்பிக்கலை.

கருணாநிதியைப் போல வட்டமிடும் கழுகு, வசந்தசேனை என்பது போலபேசக்கூடியவர் காளிமுத்துவாக இருக்கும்.

இவர் சொன்ன சில கருத்துக்கள் படிக்க தமாஷாக உள்ளன.

"ஆனால், 1996ல் கம்பங் கொல்லைக்கு காட்டெருமையை காவல் வைத்தது போல, கொய்யா தோப்புக்கு குரங்கை காவல் வைப்பது போல, திருடன கையில் சாவிக் கொத்தை கொடுப்பது போல கருணாநதியை கதல்வராக்கிவிட்டனர். "

"சில கோழிகள் அதிகாலை கூவும், சில சாமத்தில் கூவும். சிதம்பரம் சாமக் கோழி. சாமக் கோழி கூவுவது நில்லதல்ல. "

http://thatstamil.oneindia.com/news/2006/02/08/admk.html

(நிச்சயம் தொடரும் என்று நினைக்கிறேன்)

3 Comments:

At 8:31 AM, Blogger நாமக்கல் சிபி said...

தேர்தல்னாலே நிறைய நகைச்சுவைக் காட்சிகள் அரங்கேறுவது சகஜம்தானே!

 
At 12:07 AM, Blogger குழலி / Kuzhali said...

//96 இல் பாமக தனியாக நின்றதாக குழலி சொல்வதால்,

1996 இல் பா.மக பெற்ற மொத்த ஓட்டுக்கள் - 1042333

மொத்த ஓட்டுகள் 27154721

பாமக ஓட்டு சதவிகிதம் 3.8

30000க்கு மேல் வாங்கியவர்கள் 9 பேர் (இதில் எத்தனை பேர் இன்னும் பாமகவில்
இருக்கிறார்கள் என்று தெரியவில்லை )

இதில் 10000த்துக்கு மேல் அதிகமாக ஓட்டு வாங்கியவர்கள் - 35
//
Hi, Can you please tell me where you find data, if possible send me the link actually I am searching the complete data...

Thanks
Kuzhali

 
At 2:35 PM, Anonymous Anonymous said...

நன்றாக இருக்கிறது .... இன்னும் நிறையா காமெடிகளை செல்லியிருக்கலாம்

அன்புடன்
கனக்

 

Post a Comment

<< Home