ullal

Friday, March 17, 2006

ஆன்மீக பொருளாதாரம்

இந்த கட்டுரையை (http://www.thinnai.com/pl0317061.html ) படித்தபொழுது தோன்றியது. இது யாரையும் புண்படுத்த எழுதவில்லை. இதை படித்தபொழுதுகோபத்தைவிட சிரிப்புதான் வந்தது. வெற்றிலை போட்டதற்காக ஒரு அரசன் 100 பேருக்கு நிலம் தானமாக கொடுத்தானென்றால் அவன் எப்பேற்பட்ட அடிமூடனாக இருந்திருக்க வேண்டும்?.(தெனாலி ராமன்கதையில் இப்படி வரும்.) சுரண்டியவர்களின் புத்திசாலித்தனமும் வியக்கவைக்கிறது. உலகம் முழுவதும் அரசர்கள், ஜார் மன்னர்கள்சுரண்டிய கதைகளும் புரட்சிகள் நடந்த கதைகளும் உள்ளன. இது போன்றஒரு மூடத்தனம் வேறு எங்காவது நடந்திருக்குமா?

அந்த காலத்து அரசந்தான் இப்படி என்றால் இந்த காலத்திலும் அப்படிதானேநடக்கிறது. நம் தலைவி ஜெயலலிதாவுக்கு பள்ளிகளுக்கு ஆசிரியர் போடுவதற்கு பட்ஜட்டில் இடமில்லை. ஒரு வகுப்பில் 139 குழந்தைகள் இருக்கிறார்கள். 140 வது குழந்தை இருந்தால்தான் இன்னொரு ஆசிரியர் போடுவார்களாம். அந்த குழந்தைகளின் படிப்பையும், ஆசிரியர் நிலைமையும்நினைத்துப் பாருங்கள். ஆனால் கோவில்களில் அன்னதானம் என்ற சோம்பேறிகளுக்கு சோறு போடும் திட்டத்திற்கு பட்ஜட் அளிக்கிறார். கோவில்களுக்கு குடமுழுக்கு என்று செலவு செய்கிறார்.

ஏதோ கொஞ்சம் ஆடம்பரமில்லாமல் எளிமையாக சாமி கும்பிடமுடியாதா? அண்ணன் இளையராஜா வைர கிரீடத்துடன் மூகாம்பிகைக்கு படை எடுக்கிறார். இவர் தலித் என்று சொல்கிறார்கள். அவர் மற்றாவருக்கு உதவுகிறாரா இல்லை மோட்சத்துக்காக செலவு செய்கிறாரா என்பது தனிப்பட்டஉரிமை. இன்னும் இது போல ஏராளமான தங்க வாசக்கால்களும், தேர்களும்,தங்க கோபுரங்களும் இந்த ஏழை நாட்டில் எந்த பயனும் இல்லாமல் முடங்கி கிடக்க, இந்தியா வெளிநாட்டு முதலீட்டுக்கு கையேந்துகிறது.

சரி மக்கள் கொண்டு வரும் காணிக்கையில் உருப்படியாக என்ன செய்கிறார்கள்.?திருப்பதியில் பல்கலைகழகம் கட்டியிருக்கிறார்கள். அமிர்தானந்தமயி மடம் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 கோடி ஒதுக்கி வீடுகட்டிக்கொடுக்கிறது. இதை பாராட்டலாம். இவர்களிடம் இருக்கும் பணம் மலைக்க வைக்கிறது. விட்டால் அரசாங்கத்துக்கே இவர்கள் கடன் கொடுக்கலாம்.

இன்னும் ஜோசியர்களின் பேச்சை கேட்டு தோஷம் கழிக்க செலவழிப்பதைஎல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த ஊருக்கு ஒரு பெரியார் போதாது.

3 Comments:

At 12:00 PM, Blogger துளசி கோபால் said...

ஏங்க, பேசாம ஒரு அஞ்சு வருசத்துக்கு ஆடம்பர விழா எதுவும் செய்யக்கூடாது, புதுக் கோயில்களும்( எல்லா
மதத்துக்கும்) கட்டக்கூடாது. இதுக்கான பணத்தையெல்லாம்' நாட்டைச் சுத்தப்படுத்தவும், பள்ளிக்கூடங்கள்
பிள்ளைகள் படிப்பு முன்னேற'ன்னு செலவு செய்யணுமுன்னு சட்டம் கொண்டுவந்தா எவ்வளோ நல்லா இருக்கும்?

 
At 3:20 PM, Blogger Unknown said...

//அந்த காலத்து அரசந்தான் இப்படி என்றால் இந்த காலத்திலும் அப்படிதானேநடக்கிறது. //

அது!!!

 
At 2:19 PM, Anonymous Anonymous said...

திருநிள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் மற்றும் ப஛வாரக் கோயில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நிடக்கிறது.

திருநிள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலின் கும்பாபிஷேகம் நிடைபெறுவதையொட்டி கோயில் ககப்பில் புதிதாகக் கட்டப்பட்ட 87 அடி உயர ராஜகோபுரம் மற்றும் ப஛வார கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நிடத்தப்படுகின்றன. கும்பாபிஷேகத்துக்காக சனீஸ்வர பகவான் கோயில் விமானம் கழுவதும் "தங்கத்தால் "இழைக்கப்பட்டுள்ளது. கோயில் கலசங்கள் அனைத்தும் தங்கத்தால் எழில் சேர்க்கப்பட்டு உள்ளன.

(இடுப்புக்கு வேட்டி இல்லாதவன் முண்டாசு கட்டியது போலதான்
இந்த ஆடம்பரங்கள் இருக்கிறது.)

 

Post a Comment

<< Home