பேண்ட் அணிவதும் பெண்ணீயமும்
பேண்ட் அணிவதால் பெண்கள் விடுதலை அடைவார்களா அல்லது அதைஅணியாவிட்டால் அடிமைப்படுவார்களா என்று ஒரு கேள்வி தங்கமணியின்பதிவில் எழுந்தது. பெண்ட் அணிவதாலோ, அணியாததாலோ பெண்கள்விடுதலை அடைய முடியாது.
இருந்தாலும், பேண்ட் அணிவதற்கும் பெண்ணீயத்துக்கும் கொஞ்சூண்டு சம்மந்தம்இருக்கு. மேற்கத்திய பெண்கள் பேண்ட் போன்ற ஒரு உடைக்கு மாறியதற்கு முன் பெண்களை முதலில் விடுவித்தது இரு சக்கர சைக்கிள்.சைக்கிள் ஓட்ட கற்றதால் பெண்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும்போக முடிந்தது. அந்த காலத்து மேற்கத்திய பெரீஇய வளையங்கள் வைத்து தைக்கப்பட்ட கூடை போன்ற பாவாடை உடையுடன் எப்படி காலம் கழித்தார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
பெண் சைக்கிள் ஓட்டினால் தங்கள் கண்பாரவையை விட்டு எங்கு செல்வாளோஎன்ற பயத்திலும் சைக்கிள் ஓட்டுவது அனாச்சாரமான விஷயமென்றும் எதிர்ப்புகள் எழுந்தது. மேல்தட்டினர் சைக்கிளை ஆதரித்ததும் இது மற்றவர்களையும் சென்றடைந்தது. கூடை போன்ற பாவாடையுடன் சைக்கிள் ஓட்ட முடியாது என்பதால் பேண்ட் போன்ற உள்ளாடைகளும, வெளியாடைகளும் உருவாக்கினார்கள்.
Back to india, என் உஅறவினர் ஒருவர் சமீபத்தில் ஒரு விபத்தில் இராந்துவிட்டார்.இவருடைய மக்ளின் டூ வீலரின் பின்னால் அமர்ந்து சென்றவர், (புடவை கட்டியிருந்ததால் ஒரு பக்கமாக தான் அமமுடியும்) ரோட்டிலிருக்கும் குண்டுகுழியில் வண்டி ஏற இவர் அப்படியே தூக்கி எறியப்பட்டு பஸ் சக்கரத்தில் போய் விழுந்தார். கால்களை இரு புறமும் போட்டு அமர்ந்திருந்தால்இன்னும் கொஞ்சம் பேலன்ஸ் இருந்திருக்கும். டூ வீலரில் புடவை மாட்டி ரோட்டில் அவமானப்பட்டபெண்களை நான் நேரிலும் பார்த்திருக்கிறேன். காரில் போகும்போது நான் விரும்பும் உடையை அணிவேன் என்று சொல்லலாம். காரிலும், ஓட்டும்போது சேலை இடைஞ்சல செய்யலாம். இடம், செய்யும் வேலைக்கேற்ப உடை அணிவதே சிறந்தது. சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோதுகூட எவ்வளவு ஆபத்தான வ்கையில் உடை அனிந்து பெண்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகிறார்களென்று பார்க்க முடிந்தது.
இந்திய பெண்களையும் டூவீலர் விடுதலை செய்திருக்கிறது. பல்லவன் பஸ்ஸுக்காககாத்திருந்து, இடிபட்டு கடிபட்டு, எங்காவது செல்வதற்கு அண்ணன்மார்களை பணிவிடை, பாதபூசை செய்து கெஞ்சிய அனுபவம் நிறைய பேருக்கு இருக்கலாம்.
இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அண்ணா பல்கலைகழகத்தில் ஒரு பெண்ணின்தலைமுடி டர்பைனில் மாட்டி மருத்துவமனைக்கு கொண்டு போக நேர்ந்தகதையை workshopஇல் சொல்வர்கள். அதனால் கோட் அணிய சொல்வார்கள். சில பெண்களுக்கு அந்த கோட்டையும் தாண்டி நீண்ட கூந்தலாக இருக்கும். இதே பல்கலைகழக துணை வேந்தர் தான் பெண்கள் புடவையும், சுடரிதாரும் அணிய வேண்டும் என்ற சட்டம் போட்டிருக்கிறார். இந்த இரண்டையும் விட பேண்ட்எவ்வளவோ பாதுகாப்பானது? இவருடைய லாஜிக்கை எப்படி மெச்சுவது. பெண்கள் என்ன அணிய வேண்டுமென்று ஆண்கள் முடிவு செய்தால் இப்படிதான் இருக்கும்.
மேலும் பெரியார் எழுதியது ஐம்பது அண்டுகளுக்கு முன்பு. என் அக்காகல்லூரி படிக்கும் காலத்தில்கூட சுரிதார் அணிய அனுமதி இல்லை. இந்த நூற்றாண்டிலும் துக்ளக் குருமூர்த்திகள் பெண்கள் நீண்ட கூந்தல் வைத்திருக்க வேண்டுமென்று எழுதுகிறார்கள். இது குறித்து திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருந்தார்.
மேற்கத்திய உடை வரலாறுhttp://www.jolique.com/undergarments/bloomers%20_and_bicycles.htm
4 Comments:
தங்களின் கூற்றுக்கு நான் ஒத்துப்போகிறேன். தாங்கள் கூறும் பிரச்சினைகள் சல்வாரிலும் சுடிதாரிலும் தீர்ந்து போய்விட்டது சரிதானே.. சொல்லப்போனால், அதனால்தானே சல்வார் வடிவமைப்பு நம் நாட்டு கிராமங்கள் முதற்கொண்டு எங்கும் சென்று சேர்ந்தது. கண்களை உறுத்ததாத எந்த ஆடையும் சிறந்ததே..
m. சுரிதாரிலும் பறக்கும் துப்பட்டாக்கள் சில பிரச்சினைகள்
ஏற்படுத்தும்.
கிராம பகுதிகளில் நிறைய பெண்கள் ச்கூட்டர் ஓட்டுவது சமீபத்து
விடுமுறையில் பார்த்தேன். இந்தியா நிறைய்வே மாறியிருக்கிறது.
அவரவர் வசதிக்கேற்ப ஆடை அணிவதை விமர்சனம்வரை கொண்டுவருவதே தேவையற்றது. ஆண்களின் உடை பற்றி பெண்கள் யாராவது லட்சியம் செய்கிறோமா?
பெண்கள் எந்த உடையில் வந்தாலும் அதில் சிறு நூலளவாவது சைட் அடிக்க வழியிருக்கிறதா என்று ஆண்கள் அலையும்போதுதான் , உடை பற்றிய பிரச்னையே வருகிறது.
உடைகளை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதையும் அதற்குபின் உள்ள அரசியலுமே கவனிக்கத்தக்கது! பெரியார் அதைப்பற்றி பேசியிருப்பார்.
Post a Comment
<< Home