ullal

Thursday, March 30, 2006

கட்சி நல்ல கட்சி

எல்லா கட்சிகளும் (நேத்து ஆரம்பிச்ச ) கட்சிகூட வேட்பாளர் மனுவுடன்பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். இந்த கட்சியில் மட்டும் தான் கட்சியேவேட்பாளர்களுக்கு சீட் கொடுக்க வலிந்து முன் வருகிறது.

தொண்டர்களிடையே சீட்டுக்காக அடிதடி , மண்டை உடைப்பு, போலீச், ஸ்ட் ரெச்சர், வேட்டி கிழிப்பு எதுவும் இல்லை.

தலைவர்களுக்கு தொண்டர்கள் மிரட்டல் போஸ்டர் ஒட்டுவதில்லை.

தலைவர்களுக்கு சீட் பெற்ற வேட்பாளர்களைப் பற்றி புகார் fax அனுப்புவதில்லை.

சீட் கொடுக்காத தலைவர்களின் உருவப்பொம்மை எரிப்பதில்லை.

கட்சியில் சீட் கிடைக்காத காரணத்தால் யாரும் கட்சி தாவுவதில்லை.

கட்சி சீட் கொடுத்தாலும் தொண்டர்கள் பெருந்தன்மையாக மறுத்து விடுகிறார்கள்.

தேர்தல் அறிக்கை கூட காணோம்.

கடைசி நேரத்தில் கூட்டணி தாவல்கள், கூட்டணி உடைப்புகள் இல்லை.

அமைதியின் இலக்கணமாக இருக்கும் இந்தகட்சி எது ?

8 Comments:

At 1:42 PM, Blogger Suka said...

காங்கிரஸ் ?

 
At 1:52 PM, Blogger aathirai said...

congress - No!!
wrong answer

 
At 4:53 PM, Anonymous Anonymous said...

வேற யாரு? நம்ம பா.ஜ தான். 234 தொகுதிக்கும் வேட்பாளர்கள் இருப்பார்களா எனத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அல்லது தேர்தல் அறிவிக்கப்பட்ட விஷயம் இன்னும் இவர்கள் காதுக்குச் சென்று சேரவில்லை என நினைக்கிறேன்.

 
At 5:43 PM, Blogger தகடூர் கோபி(Gopi) said...

பா(வம்).ஜ.க ?

 
At 5:52 PM, Blogger தகடூர் கோபி(Gopi) said...

பா(வம்).ஜ.க

 
At 8:56 PM, Anonymous Anonymous said...

DMK

 
At 8:57 PM, Anonymous Anonymous said...

BJP

 
At 7:25 AM, Blogger aathirai said...

sariyana vidai.

BJP.

 

Post a Comment

<< Home