ullal

Wednesday, April 19, 2006

டாக்டர் மகன் டாக்டராவது

டாக்டர் மகன் டாக்டராவதால் யாரும் பாதிக்கப்படுவதில்லை. ஆள்பவர்களுக்குஇந்த வாதம் பொருந்தாது.

சென்ற பதிவில் (http://ullal.blogspot.com/2006/04/blog-post_18.html)நான் திமுகவைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நான் காங்கிரஸ் கட்சியையும் அந்த பதிவில்குறிப்பிட்டுள்ளேன்.

ஸ்டாலின் தியாகம் செய்துதான் இந்த நிலைக்கு வந்ததாக ஒருவர் எழுதியுள்ளார்.
நான் ஸ்டாலின் மட்டுமல்ல கருணாநிதியும் கூட மீண்டும் முதலமைச்சராகவரக்கூடாது என்று சொல்கிறேன்.

இவர்களைப் பற்றி எழுதிவிட்டு அதிமுகவைப் பற்றி எழுதாமல் விடமுடியாது.மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவே முதலமைச்சராவதால், உடன் பிறவா தோழியின்குடும்பம் செய்யும் அட்டகாச அராஜகங்களை பார்க்கிறோம்தானே.

இது கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணாதிசய பிரச்சினை அல்ல.இந்த அமைப்பே தவறாக இருப்பதால்தான் இவர்கள் இப்படி இருக்கிறார்கள். இவர்கள்இடத்தில் வேறு யார் வந்தாலும் இப்படி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

அன்புமணி இப்பொழுதுதான் அவர் குடும்பத்தில் முதன்முறையாக அமைச்சராக இருப்பதால் அவர்இன்னும் இந்த லிஸ்டில் வரவில்லை.
இதே லாஜிக்கை நீட்டித்தால் தேர்தல் வைத்து வேட்பாளரை தேர்ந்தெடுக்காத அத்தனை கட்சிகளையும் disqualify செய்ய வேண்டும். நேற்று ஆரம்பித்த புதிய ஊழலை ஒழிக்கும் கட்சியில் கூட வேட்பாளரை தலைவர்தான் அப்பாயின் ட் செய்கிறார்.இவர் ஆட்சி அமைத்தால் அது எப்படி இருக்கும் என்று அறிய ரொம்ப கஷ்டப்படதேவையில்லை. கட்சியிலேயே ஜனநாயகம் இல்லாதபோது இவர்கள் ஆட்சியும்அப்படிதானே இருக்கும்.

இன்னும் இதே வாதத்தில் அமைச்சர்களுக்கு மீடியாவில் ஷேர் இருக்கக்கூடாது என்று கூட சொல்லலாம்.

0 Comments:

Post a Comment

<< Home