ullal

Friday, April 14, 2006

சிவப்பு எம்ஜிஆரும் இதர எம்ஜிஆர்களும்

நிறைய பேருக்கு தாங்கள் எம்ஜிஆர் போல முதலமைச்சர் ஆக வேண்டுமென்ற கனவு இருக்கிறது.

அரசியலில் எம்ஜிஆரும், மற்றவர்களும் உழைத்த வருடக்கணக்கு எல்லாம் இருக்கட்டும்.நடிப்பிலாவது இவர்கள் எம்ஜிஆர் ஏற்ற பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கின்றனரா ?

சிவப்பு எம்ஜிஆர் நடித்த படங்கள் உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், படகோட்டி,மீனவ நண்பன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், மலைக்கள்ளன்,மதுரை வீரன்.

கறுப்பு எம்ஜி ஆர் நடித்த படங்கள் சின்ன கவுண்டர், தவசி, ரமணா, சிம்மாசனம்.

Failed எம்ஜிஆர் நடித்த படங்கள் (திரு)அண்ணாமலை, அருணாசலம், (ஆறு)படையப்பா,பாபா


எம்ஜிஆர் எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக நடிப்பவர். இவர் படங்களில் நம்பியார் பண்ணையார் போல ந்டிப்பார். இப்பொழுதெல்லாம் ஹீரோக்களே பண்ணையாராக நடிக்கிறார்கள்.

3 Comments:

At 8:21 AM, Blogger தருமி said...

என்ன சொல்ல வருகிறீர்கள்? எம்.ஜி.ஆர்.தான் நன்றாக ஏமாற்றினார் என்கிறீர்களா? :-(

 
At 8:36 AM, Blogger aathirai said...

இல்லை. இவர்கள் நடிக்கும் படங்களுக்கும், இவர்களுடைய சொந்த சார்புக்கும்
சம்மந்தம் இருக்கிறது என்று சொல்ல வந்தேன்..

எம்ஜிஆரின் வெற்றிக்கு பின்னால் அந்த காலத்து திராவிட இயக்கத்தின் கொள்கைகள்,
பிரச்சாரங்கள், போராட்டங்கள் இருக்கிறது.

தலித் மக்களிடையே எம்ஜிஆர் பிரபலமாக இருந்ததற்கு இந்த படங்களும் ஒரு
காரணம்.

மற்றவர்களால் நடிப்புக்காக கூட இது போன்ற ரோல்களை ஏற்க முடியவில்லை.
இவர்களுடைய எம்ஜிஆர் கனவு 'கான மயில் ஆடக் கண்ட வான்கோழி' தான்.

எம்ஜி ஆர் ஏமாற்றினார் என்று சொல்ல முடியாது. அவர் இருந்த வரை ஏழை மக்கள் அவரைத்
தவிர வேரு யாரையும் ஏற்கவில்லை.

 
At 8:26 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

aathirai,

vaNakkam!

Please dont approve this comment.

I would like invite you to be thamizmanam natchaththiram for a week during June/July.

You can read all about thamizmanam natchaththiram here -

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=star_of_the_week

could you please write to me at

mathygrps at gmail dot com

nandri.

-Mathy

 

Post a Comment

<< Home