குடும்ப அரசியல் என்பது கட்சிகளின் சொந்த பிரச்சினையா?
விகடன் பேட்டியில் தயாநில்தி மாறன் வாரிசு அரசியல் எங்க கட்சிக்காரர்களின்உள்வட்ட பிரச்சினை. இதைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டியதில்லை என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.
கருணாநிதி குமாரமங்கல(ங்கள்) பரம்பரையாக அமைச்சர்களாக இருப்பதைசுட்டி காட்டுகிறார். நேரு குடும்பத்தை ஏனோ மறந்துவிட்டார்.
ஒருவர் மீண்டு மீண்டும் ஒரே பதவியில் அமருவதால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதற்கு வழிவகுப்பதால்தான் அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள்.
கருணாநிதி நான்கு முறைக்கு மேல் முதலமைச்சராக வருவதை தடுக்க இந்திய அரசியல் சட்டத்தில்வழி இல்ல. என்னைக் கேட்டால் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சாதாரண அமைச்சராகக் கூட இருக்கக்கூடாது என்று சொல்வேன். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் கட்சியில் பார்த்தால் எல்லாம்பரம்பரை பரம்பரையாக ஆட்சியில் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தை மாற்ற எந்த கட்சியும் முன் வராது. இதை மாற்றுவதற்கு petition வழிமுறை ஏதாவது இருக்கிறதா? இத்தனை கையொப்பம் இருந்தால் அரசியல் சட்ட மாற்றல் மசோதா கொண்டு வரும் வழிமுறை ஏதேனும் உள்ளதா?
5 Comments:
""ஏ! தமிழனை ஏமாற்றிய கழகங்களே!
தேர்தல் நேரத்தில் தான்
அரிசி பற்றி நினைப்பா?""
நான் கேட்க வில்லை ஐயா!
சுஷ்மா சென் கேட்கிறார்!
நாண்டுகிட்டு ..........ங்க!
ஒங்க பவுச புட்டு புட்டு
வெச்சு கேக்குறாங்க!
என்னா சொல்லப் போறீங்க?!
உங்கள் ஆதாங்கம் எனக்கு புரிகிறது. ஆனால் மிக கசப்பான உண்மை என்னவேன்றால் இந்த மாதிரி சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டுமானால் மெஜாரிட்டி எம்.பிக்கள் மனது வைக்க வேண்டும். அப்போது தான் அத்தகைய திருத்தங்கள் நடைமுறைக்கு வரும். ஆனால் நமது அரசியல்வாதிகள் தங்களை பாதிக்க கூடிய ஒரு சட்ட திருத்தத்தினை கொண்டுவருவார்களா?. இவர்கள் ஒழுங்காக இருந்தால் இந்த திருத்தங்களே தேவையில்லை.
நல்ல அலசல். எல்லாக் கட்சிகளுமே சிந்திக்க வேண்டும். ஒரே ஒரு கட்சியையோ ஒரே ஒரு குடும்பத்தையோ திட்டுதல் சரியான தீர்வாகாது! இப்போது பார்ப்பனர்கள் அத்தகைய செயலைத்தான் செய்கின்றனர். தேர்தல் கமிஷன் தலையிட வேண்டும்.
ஏன் கருனாநியை மட்டும் விமர்சிக்கிறீர்கள்.
அ தி மு க் - தினகரன் டி வி டி, சசி & கோ
காங்கிரஸ். - வாசன்
வைகோ - அதிக அளவில் மாவட்ட செயலாளர்கள்.
பா ம க - அன்புமணி
தி மு க வில் ஸ்டாலின் வாரிசு அல்ல. அதிக அளவில் தியாகம் செய்துதான் இந்த இடத்திற்கு வந்துளார்.
டாக்டரின் மகன் டாக்டராக இருப்பதில்லையா?
ஸ்டாலின் ஏன் தலைவராக வரக்கூடாது?
Post a Comment
<< Home