ullal

Wednesday, April 19, 2006

கனிமொழியின் திருவோடு இலவசமும் கலர் டிவி இலவசமும்


கனிமொழியின் திருவோடு இலவசம் கட்டுரை இங்கே.http://www.thozhi.com/issue8/kanimozhi.htm


திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது இவரை யாரும் ஆலோசனை கேட்பதில்லையா?


இந்த தேர்தல் (2006) அறிக்கைகளை இதை விட காரமாக விமர்சிக்க ( கிழிக்க ) முடியுமா?


அல்லது, அரசியல் வேறு பிசினஸ் வேறு என்று கருணாநிதிசொல்வது போல
அரசியல் வேறு இலக்கியம் வேறா ?

10 Comments:

At 2:59 PM, Blogger VSK said...

'எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்கு
பிச்சைக்காரர் கும்பல் ரோட்டிலே1

இனச்சண்டை, பணச்சண்டை
மதச்சண்டை, மொழிச்சண்டை
எத்தனையோ உண்டு நாட்டிலே !

இத்தனையையும் தீர்த்திட
வழி ஒன்றும் செய்யாமல்
கலர் டிவி கொடுக்கிறார் ஓட்டிலே!

தமிழர் சாதி நீங்க
இந்தப் பகுத்தறிவாளரைப்
பாக்காதீங்க!

கொடுப்பதை வாங்குங்க!
நாமத்தை போடுங்க![கழகங்களை]
வீட்டிற்கு அனுப்பிட
மறக்காதீங்க!

வா! வா! வா!
வாக்கினைப் போட
எல்லாரும் ஒண்ணாக
அன்போடு ஓடி வாங்க!

இந்த அனுபவப் பொருள் விளங்க
வாக்காளர் அண்ணாவே நீங்க
எல்லோரும் சேர்ந்து
நன்றாக முடிவெடுங்க!
வாக்கையெல்லாம்
உபயோகமாப் போடுங்க!

வா! வா! வா!

[நன்றி: கலைஞரின் பராசக்தி]

 
At 3:58 PM, Blogger aathirai said...

pala pinnootangal approve seyumpodhu maraindhuvittana. pinnar thedi podugiren.

 
At 8:13 PM, Blogger தயா said...

கனிமொழி இதை எப்போது எழுதினாரோ?

இலவச டிவி அறிவிப்புக்கு பின் என்றால் கோயில்களில் அன்னதானம் மட்டும் பற்றி பேசுவானேன்?

அன்னதானம் என்பது பல வருட பழக்கம். கர்நாடாகாவில் உள்ள பல கோயில்களில் உபயதாரர்களின் உதவியால் நடக்கிறது. எவ்வளவு பணக்காரர்களாயிருந்தாலும் கோயில் உணவு என்று சாப்பிட்டு போகிறார்கள்.

அப்பாவோடு சுற்றுப்பயணம் செய்யும் அவர் அவருக்கு ஏன் தர்மசங்கடம் கொடுப்பானே என நினைத்திருப்பார் போல.

அவர் "கருத்தை" வரவேற்போம்.

 
At 5:06 AM, Blogger aathirai said...

இது சமீபத்தில் ஜனவரி 2006 இதழில் வெளிவந்த கட்டுரை.

கோவில்களில் சோம்பேறிகளுக்கு சோறு போடுவது போன்ற பிற்போக்கு
பழக்கங்களை இவர்கள் எதிர்த்தவர்கள்தானே.

அன்னதானம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு கலர்டிவி என்று படித்தாலும்
கட்டுரை பொருந்துகிறது.

இது classic
"தமிழகத்தை ஆளும் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் தன்னை சோழ
வம்சத்து வள்ளல் பெருந்தகைகளாகவே பாவித்துக்கொள்கிறார்கள்.
அரசாங்கப் பணத்திலிருந்து 'ஈதல்' என்று வாக்கு வேட்டைக்கு
அற்புதமான வழி வகுத்திருக்கிறார்கள்"

(courtesy thozhi.com)

 
At 5:28 AM, Anonymous Anonymous said...

கனிமொழி; இதையேன் எங்களுக்குச் சொல்கிறார்; அவர் அப்பாவுக்கு சொல்ல வேண்டியது தானெ!
கட்டுரையை; "எனவே எங்கப்பா கருணாநிதிக்கு ஓட்டுப் போடாதீங்க" என்று முடிச்சிருக்கலாமே!!
அப்பனின் ;பேரில் அனுபவிக்கும் இவர்கள் சொல்வார்களா????; அப்பாவைப் போல அழகா!!! ஊருக்குபதேசம் செய்யப் பழகிவிட்டார்.
யோகன்
பாரிஸ்

 
At 5:36 AM, Blogger aathirai said...

மறைந்த பின்னூட்டங்கள் என் மெயிலில் உள்ளது. யஹோ இதை
junk ஆக மாற்றியிருக்கிறது. இதை விரைவில்் மீட்டெடுக்கும்
வழி என்ன?

 
At 9:30 AM, Blogger Santhosh said...

noreply-comment@blogger.com இந்த மெயில் ஜடியை உங்க address book இல் add செய்யுங்கள் கமெண்டுக்கள் அனைத்தும் உங்க இன்பாகஸ் போகும்.search for this mail id in the search option this will display all the mails from this id and so u can easliy open and approve them

 
At 10:36 AM, Blogger கூத்தாடி said...

தோழியில் கோவில்களில் சாப்பாடு இலவசமாகப் போடப்பட்டதை ஒட்டி எழுதியது இந்தப் பதிவு.ஆனால் இங்கு இது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது . ஆனால் கனிமொழியின் கருத்துக்கள் டிவி கொடுப்பதை எதிர்ப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அவ்ரின் கருத்தில் உடன்பாடா இல்லையா என்பதை ஒட்டி விவாதம் இருந்திருக்கலாம் .அதை விட்டு விட்டு அவரின் பின்னணியை விமர்சிப்பது நாமும் தமிழகத்தின் அரசியல் நாகரிகதிற்கு எதிலும் குறைந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது . அதுவும் தோழியில் அவரது பத்திப் பாரட்டத்தக்கதாகவே உள்ளது .
//"தமிழகத்தை ஆளும் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் தன்னை சோழ
வம்சத்து வள்ளல் பெருந்தகைகளாகவே பாவித்துக்கொள்கிறார்கள்.
அரசாங்கப் பணத்திலிருந்து 'ஈதல்' என்று வாக்கு வேட்டைக்கு
அற்புதமான வழி வகுத்திருக்கிறார்கள்"
//

இது அவர் கலைஞரை exclude பண்ணவில்லையே .தமிழகத்த ஆளும் தலைவர்கள் என்னும் போது அது கலைஞரை குறிக்காதா என்ன ?

 
At 12:20 PM, Blogger aathirai said...

உங்கள் யோசனைக்கு ந்ன்றி சந்தோஷ்

கூத்தாடி,
கனிமொழி உண்மையிலேயே எல்லா தலைவர்களையும் விமர்சிக்கிறாரா
அல்லது அப்பொழுது அம்மாவை எதிர்ப்பதற்காக எழுதினாரா என்று
என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.


முன்னதாக இருந்தால்ப பாராட்டலாம்.

 
At 3:59 PM, Blogger aathirai said...

nandri anonymous. 49 -O kkalai ennuvargala?

 

Post a Comment

<< Home