ullal

Saturday, May 20, 2006

இட ஒதுக்கீடு

பத்ரியின் (http://thoughtsintamil.blogspot.com ) பதிவிற்கு பின்னூட்டமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.


//புள்ளியியல் ஆதாரம் யாராவது திரட்டியுள்ளனரா என்று அறிய ஆவலாக இருக்கிறேன். //

இதைத்தான் நானும் தேடிகிட்டிருக்கேன். எந்த புள்ளி விவரமும் இல்லாமல்யார் பயன் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. அரசியல்வாதிகளின் கூச்சல்தான் நிறைய கேட்கிறது.

சென்ற வருடம் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெற்றவர்களின் பொருளாதார நிலை என்ன என்ற விபரம் எங்கே கிடைக்கும்? கீற்றுவில் ஒரு கட்டுரை கிராமத்து மாணவர்களுக்குஇட ஒதுக்கீட்டில் 20% தான் கிடைக்கிறாது.. 80 % ஒதுக்கீட்டையும் நகரத்து eliteபள்ளி மாணவர்களே பெறுகிறார்கள் என்று கூறுகிறது. அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த சொல்லி ஒருவரும் போராடுவது இல்லை. அரசியல்வாதிகள்இது பற்றி பேசுவதே கிடையாது.

2. creamy layer வேண்டும் என்பது சரி. இதில் உள்ள பிரச்சினைகள் இரண்டு.வருடா வருடம் inflation க்கு ஏற்றாற்போல் உயர்த்தாவிட்டால் சீக்கிரம் குடிசைவாழ் மக்கள் கூட creamy layerக்கு வந்து விடுவார்கள்.
வேலைக்கு போகிறாவர்கள் சம்பள certificate கொடுக்கலாம். சிறுதொழில் செய்பவர்களின்வருமானத்தை இந்தியாவில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். பெரும்பாலோர்வருமான வரி செலுத்துவதில்லை. மளிகை கடை department store வைத்திருப்பவரும் பொட்டிக்கடை வைத்திருப்பவரும் பொட்டிக்கடை வருமானத்தை claim பண்ணலாம்.

இ஢ரண்டாவது தலைமுறையில் இடஒதுக்கீடு கோருபவர்கள் இன்னும்இட ஒதுக்கீடே அனுபவிக்காத முதல் தலைமுறையிடம் போட்டியிடுகிறார்கள்.இதில் ஜெயிப்பவர்கள் யாராக இருக்கும் ?
பிற்படுத்தப்பட்டவர்கள் இதை சீரியசான பிரச்சினையாக எடுக்க வேண்டும்.

3பிரபு ராஜதுரை எழுதியது//மருத்துவ, பொறியியல் படிப்புகளில் மேற்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு ஏன் கூடாது என்பதற்கு, யாரோ ஒருவருடைய வலைப்பதிவில் விவாதத்திற்குறிய ஒரு காரணம் படித்தேன். //

இதற்கு காரணம் சமூகத்தின் அடுத்த தலைமுறை leadership அனைத்துபிரிவுகளில் இருந்து வரவேண்டும் என்பதுதான். இதனால்தான் IIM இல் அனவருக்கும் பிரதினிதித்துவம் வேண்டும். இவர்கள் அடுத்ததலைமுறை நிறுவனங்களின் தலைவராக வரும்போது இவர்கள்சார்ந்த சமூகம் பலனடைவார்கள் என்று சொல்கிறார்கள். இதைUS supreme court judgementஇலிருந்து எடுத்து சொல்கிறேன்.

(உடனே IIMக்கும் US supreme courtக்கும் என்ன சம்மந்தம்என்று பின்னூட்டம் இட வேண்டாம்)

4. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
வெளிநாடுகளில் recruitment போது அனைத்து பிரிவினரும் கலந்து இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். promotionஇல்லெந்த வேறுபாடும்கடைபிடிப்பதில்லை. நிர்வாகத்தினர் ஒரே பிரிவாக இல்லாமல் அனைவரும்கலந்து இருக்குமாறு செய்கிரார்கள்.

பாலா எழுதியது//5. சலுகை என்று வந்து விட்டாலே, அது இன்னொருவரின் உரிமையில் இருந்து பறிக்கப்பட்டதுதான் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். //

இதற்கு ஒரு 'மாதிரியான' பதில் சொல்ல முடியும். அதை தவிர்க்கிறேன்.
வேறு மாதிரி சொல்லவேண்டுமென்றால் Bill clinton பாணியில் சொன்னால் you try to help more people than it hurts. இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்காகசெய்யப்படுவது. இப்பொழுது பின்தங்கியவர்கள் அதிகம் இருப்பதால்தீவீரவாதம் , நக்ஸலிசம் பெருகுகிறது என்பதை புரிந்துகொள்ளமுயற்சி செய்யுங்கள். ஜனநாயக அமைப்பில் பகவ்த் கீதையைகாண்பித்து யாரையும் அடக்க முடியாது.

6. மண்டல் பரிந்துரையை 50 வருடங்களுக்கு மேல் ஊர போட்டுவிட்டுஇப்பொழுது புள்ளிவிபரம் பழசாகிவிட்டது மீண்டும் A B c D யிலிருந்துஆரம்பிக்கலாம் என்று ஸ்வாமிநாதன்கள் எழுதலாம். அதற்குள்இன்னொரு ஐம்பது வருடங்களும் ஆகலாம். இந்த விளையாட்டைவிரும்பும் மூடில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
(ரவி ஸ்ரீனிவாஸின் பதிவு பார்க்கவும்)

7. இந்த முன்னேறிய, பிற்படுத்தப்பட்ட லிஸ்டுகள் update செய்கிறார்கள்என்றே நினைக்கிறேன்.

8. சமீபத்தில் நடந்த ஒரு கூத்தையும் எழுதவேண்டும். thatstamil.comஇல் ஒரு செய்தி வந்தது. ஒரு வேளாள மாநாடு நடந்தது. இப்பொழுதுஓரளவு வேளாளர்களின் உட்பிரிவுகளுக்கிடையே திருமணங்கள்நடப்பதால் முன்னேறிய வேளாளர்களும் பிற்படுத்தப்பட்ட வேளாளர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே பிரிவாக பிற்படுத்தப்பட்டவர்களாகிவிடலாம் என்று யோசனை வைத்தார்கள். இதில் முன்னின்று கூட்டம் போட்டவர்கள் vice chancellor, நீதிபதிகளாக இருந்துரிடையர் ஆனவர்கள். இப்படி செய்தால் அதனால் யார் பலனடைவார்கள்யார் ஏமாறுவார்கள் என்று guess பண்ணுவது சுலபம்.

இந்த முன்னேறிய வேளாளர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் நம்பினால் அவர்களின் கதி அவ்வளவுதான்.

9. எனக்குத் தெரிந்து கிராம பகுதியில் 90 சதவிகிதத்துற்கும் மேல்மதிப்பெண்கள் இருந்து தனியார் கல்லூரியில் சேர பணம் இல்லாமல்அரசாங்க ஒதுக்கீடும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள்இருக்கிறார்கள். லோன் வாங்கும் தைரியம் அனைவருக்கும் இருக்காது.

6 Comments:

At 5:58 AM, Blogger PRABHU RAJADURAI said...

கலப்புத் திருமணம் பற்றி யாரும் எழுதவில்லையே?

 
At 7:34 AM, Blogger aathirai said...

கலப்பு திருமணாங்களுக்கு யாருடைய ஜாதி
கணக்கில் வரும் என்று எனக்கு தெரியவில்லை.
யாருக்காவது தெரியுமா?

 
At 10:03 AM, Blogger PRABHU RAJADURAI said...

please read my response to badri's post again...

 
At 11:11 AM, Blogger வவ்வால் said...

வணக்கம் ஆதிரை,

உங்கள் பதிவில் என்ன சொல்ல வருகிறீகளோ தெரியவில்லை ,எல்லாம் இட ஒதுக்கீடு என்று ஏதோ ஒன்றை கக்கி வைக்கிறார்கள் கருத்தெனும் பெயரில்,அது போல காற்றுள்ள போதே தூற்றி கொள்ளும் முயற்சியா.பெரும் பாண்மை அடித்தட்டு மக்களின் கருத்துகளை எவரும் பிரதிபளிக்கவில்லை! குழுமனப்பாண்மையில் அனைவரும் ஒரு கருத்தைக் கூறி தங்கள் சார்ந்த வட்டத்தையே கூட்டி வைத்து உண்மை என்பது போல ஒரு கருத்தாக்கம் உருவாக்கவே முயற்சிக்கிறார்கள்.உண்மை கண்டுக்கொள்ளபடாமல் புறக்கணிக்கப்படுகிறது.

மேலும் கலப்பு திருமணத்தில் வாரிசுக்கு தந்தையின் ஜாதியே தரப்படும்

 
At 1:26 PM, Blogger aathirai said...

வவ்வால்,
நான் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க்கிறேன். அது சரியானவர்களுக்கு
போய் சேர வேண்டுமென்றும் சொல்கிறேன்.

பெரும் பாண்மை அடித்தட்டு மக்களின்
கருத்து என்னவென்று சொல்லுங்கள்.பிரபு,

அதாவது, பட்டப்படிப்பில் ஒரே கல்லூரியில் ஒரே பாடத்திட்டத்தில்
ஒரே அளவிலான வசதிகளோடு படிக்கையில் அதற்கு மேலான படிப்பிற்கு
இட ஒதுக்கீடு கோருவது சரியல்ல என்று.

இந்த வாதத்திற்கான என் பதிலைத்தான் நான் தந்திருக்கிறேன்.

 
At 6:12 AM, Blogger bonapert said...

http://kaipulla.blogspot.com/2006/05/reservation-haunts-againmore-teeth.html

 

Post a Comment

<< Home