மொழிப் பிரச்சினை
இடம் - சென்னை மாநகரம்
நம்ம ஹீரோ அறிவழகன் பள்ளிக்கூட ஹோம் ஒர்க் எழுதி கொண்டிருக்கிறார்.
தாத்தா டிவியில் MTV பார்த்து கொண்டிருக்கிறார்.
அறிவு - தாத்தா, டிவி சவுண்டை குறைங்க. நான் எப்படி படிக்கறது?
தாத்தா - ஏண்டா உள்ள போய் படிக்கக்கூடாதா? ஹால்ல தான் படிக்கணுமா?ஆமா என்ன பாடம் படிக்கறே?
அறிவு - ஆங் கணக்கு போடறேன்.
தாத்தா - டே என்னதான் படிச்சாலும் நம்ம தாய்மொழி தெரியாம இருக்ககூடாதுடா. தமிழ் ஹோம் ஒர்க் எழுது.உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குனு அந்த காலத்திலேயே போராட்டமெல்லாம் பண்ணியிருக்கோம்.
அறிவு - சரி தாத்தா.
அறிவின் அப்பா - ஆமா இவங்க பண்ணின போராட்டத்தாலே நான் இந்தி படிக்க முடியாம குஜராத்தில போய் திண்டாடினது போதாதா? தமிழ் மட்டும் படிச்சா போதாதுடா. வட நாட்டுல வேல பாக்கணுமுன்னா இந்தி படிக்கணும். இந்தி புஸ்தகத்த எடுத்துட்டு வா.
அறிவு - சரிப்பா, இதோ வந்துட்டேன்.
அறிவின் அம்மா - எதுக்கு இந்தி? இந்திக்காரனே சோம் பப்டி விக்கறானாம். ஏண்டா, இந்தியும் தமிழும் படிச்சா அமெரிக்கா போகமுடியுமா? மொதல்ல இங்க்லீசு ஒழுங்கா படி.
பக்கத்து வீட்டு மாமி- இப்பவெல்லாம் இன்க்லீசுகாராளே பேங்களூரிலே வேலதேடறாங்களாம். இதுல்லாம் லாயக்கு படாது. கன்னடம் படிச்சீன்னா வேலை இடத்துல பேசறதுக்கு வசதியா இருக்குமில்லே.
அறிவின் அண்ணன் - எல்லாம் சரி. அடுத்த சூப்பர் பவர் சீனாவாமாம். இந்தியா கூட சீனாவோட சமாதானம் ஆயிடுச்சு. மாண்டரின் படிச்சா வேலை கெடைக்கும்.ஜப்பான்காரன் இங்க்லீசா படிச்சான்?
அறிவு புஸ்தகத்தை தூக்கி கடாசிவிட்டு பம்பரம் எடுத்துக்கொண்டு ஓடுகிறான்.
தாத்தா - எங்கடா போற, படிக்கலியா?
அறிவு - நீங்க சொல்றதெ எல்லாம் கேட்டா, பைத்தியந்தான் புடிக்கும். ஏற்கெனவே புஸ்தகத்த சொமந்து முதுகு ஒடியுது ! யாராவது எங்க யோசனைய கேக்கறிங்களா?
அம்மா- அப்ப படிச்சு பெரிய ஆளாக வேணாமா ?
அறிவு - நீங்க எல்லாம் பெரிய ஆளாயிட்டிங்களா ? நான் குழந்தைகளுக்காக கு.மு.க (குழந்தைகள் முன்னேற்ற கழகம்)ன்னு கட்சி ஆரம்பிச்சு ஆட்சிய புடிக்க போறேன். இதுக்கு ஒரு மண்ணும் படிக்கவேணாம். யாரும் அங்க ரெகமந்டேசன் நு வந்துறாதீங்க சொல்லிட்டேன்.
அப்பா - அப்ப உங்க ஆட்சியில என்ன மொழி படிப்பீங்க.?
அறிவு - எங்க ஆட்சில எல்லா குழந்தைகளும் Sign Language (சைகை மொழி) தான் படிக்கணும்.
எந்த ஊருக்கு போனாலும் பிரச்சினையே இருக்காது பாரு.
ஏற்கெனவே எம்ஜிஆர் கூட சைகை மொழி யை ஆட்சி மொழியாக்கியிருக்காரு.
தாத்தா - உங்க கொள்கை என்ன?
அறிவு - வேறென்ன, பெரியவர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான்.
5 Comments:
:)
:))
ஸ்மைலி இட்டவர்களுக்கு நன்றி
படித்தேன். இரசித்தேன். வாழ்த்துக்கள்.
நன்றி
ரொம்ப நல்ல வந்திருக்குங்க... நிறைய இதில செய்திகள் இருக்கு. நகைச்சுவையா போனலும்... முடிஞ்ச இந்தப் பக்கமும் போயிட்டு வாங்க...
http://orani-sittingby.blogspot.com/2006/05/red-chair-and-english.html
theka.
Post a Comment
<< Home