ullal

Friday, June 09, 2006

சாதி ஒழிந்துவிட்டதா

இட ஒதுக்கீடு பற்றிபேசும்போது மட்டும் சிலர் இந்தியாவில்சமத்துவம் மலர்ந்து அனைவரும் ஒரே தட்டில் இருப்பது போல நீட்டி முழக்கி வியாக்கியானம் செய்வார்கள்.


சாதியை பார்க்க அதிக தூரம் போக வேண்டாம்.கொஞ்சம் தலையை நிமிர்த்தி அல்லது scrollbar ஐ நகர்த்தி தமிழ்மணத்தின் நெற்றிப் பட்டையில் Tamil Groom Meet 1000s of members of your caste விளம்பரத்தை பாருங்கள்.

4 Comments:

At 8:57 PM, Blogger வவ்வால் said...

இந்து நாளிதழில் வரி விளம்பரங்களில் வீடு வாடகைக்கு - கண்டிப்பாக வெஜிடேரியன் எனப்போடப்படுவதன் நோக்கம் என்னவென்று பார்த்தாலே தெரியும் நகரத்தில் மறைமுகமாக வேறு பெயரில் ஜாதி பார்ப்பது :-))

 
At 11:40 PM, Blogger ஜயராமன் said...

ஐயா ஆதிரை அவர்களே,

////இட ஒதுக்கீடு பற்றிபேசும்போது மட்டும் சிலர் இந்தியாவில்சமத்துவம் மலர்ந்து அனைவரும் ஒரே தட்டில் இருப்பது போல நீட்டி முழக்கி வியாக்கியானம் செய்வார்கள்.////

இது அபத்தமான பதிவு. இவ்வாறு (அதாவது சமத்துவம் மலர்ந்துவிட்டது என்று சொல்லும்) ஒரு பதிவை எனக்கு காட்டுங்கள். மேலும், இவ்வாறு சமத்துவம் மலர்ந்துவிட்டதால் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லும் ஒரு பதிவையும் தயவு செய்து காட்டவும்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களை தாங்கள் திறந்த மனத்தோடு பார்ப்பது நல்லது.

(நான் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன். சில மாற்றங்களுடன். என்று சொல்லிக்கொள்கிறேன்)

திருமண விவகாரங்களில் சாதி இருப்பது நிதர்சனமான உண்மை. இதனால் சமுதாயத்துக்கு பெரிய தீமை விளைந்து கொண்டிருக்கவில்லை என்பதே என் எண்ணம்

நன்றி

 
At 6:07 AM, Blogger aathirai said...

dondu vin pinnootam engo kaanamal poi vittadhu.

 
At 11:36 PM, Blogger dondu(#11168674346665545885) said...

ஆதிரை அவர்களே,

நான் உங்களுடைய இந்தப் பதிவில் பின்னூட்டம் இடவில்லை. கன்ணகி-பெரியார் பதிவில்தான் இட்டேன். அது அப்படியே பத்திரமாக இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

<< Home