ullal

Thursday, June 29, 2006

பரத முனிக்கு கோவில் கட்டலாமா?

http://www.keetru.com/anaruna/jun06/madivanan.html

இந்த பரத சாஸ்திரத்தை எழுதியது ஒருவர் தானா அல்லது பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டதா என்று ஒருவருக்கும் தெரியாது. இவர் பரத முனி கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் இருந்ததாக எழுதியுள்ளார். பெரும்பாலானவர்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை இருக்கலாமென்கிறார்கள்.


கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் இசை, நாட்டியம் பற்றிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது. இது பத்மா சுப்ரமணியத்திற்கும்தெரியும். அவரே ஏதோ ஒரு பேப்பரில் குறிப்பிட்டிருந்ததாக நியாபகம்.
(இந்த கல்வெட்டு நான் பிறந்த ஊரில் இருப்பதை கொஞ்சம் சைடில்பீற்றிக்கொள்கிறேன்.)

இந்த கலையை வளர்த்த பெண்மணிகள் இந்த நவீன கலைஅரசிகளைப் போல உலகம் சுற்றாமல் இன்றும் கிராமங்களில் பயங்கரவறுமையில் இருப்பதாக படித்திருக்கிறேன். இந்த பணத்தை பரதருக்கும் (யாரிவர் எப்படி இருப்பார்) அவிநயருக்கும் கோவில் கட்டுவதை விட உண்மையில் இவர்களுக்கு உதவுவதே பொருத்தமாக இருக்கும்.


இந்த கலையை வளர்த்தவர்கள் வறுமையில் வாடும்போது, யாரென்றே தெரியாத இரண்டு பேரில் யாருக்கு கோவில் கட்டுவதென்று போட்டி தேவைதானா?

ஒரு கும்பலுக்கு கண்ணகி சிலை வைக்க வேண்டும், இன்னொரு கும்பலுக்குபரத முனிக்கு கோவில் கட்ட வேண்டும். வாழ்க்கை நடைமுறை பிரச்சினைகளைவிட சிலை வைப்பதுதான் இப்பொழுது தலையாய பிரச்சினையாக இருக்கிறது. ( கண்ணகி சிலையை எதிர்த்தவர்கள் ஏன் பரத முனி கோவிலை எதிர்க்கவில்லை என்று சிலர் கேட்கலாம். )

அரசாங்க பணத்தில் சிலை, கோவில்கள் போன்றவை கட்டுவதை ஒட்டுமொத்தமாக தடை செய்யலாம்.

3 Comments:

At 1:15 PM, Blogger நரியா said...

வணக்கம் ஆதிரை.

இந்த மாதிரி முனிகளுக்கு கோவில் கட்டி, அதனால் அவர் புகழ், வரலாறு உலகிற்கு தெரியவேண்டும் என்று அரசாங்கம் நினைத்தால், அந்த கோவில்களிலே ( (அ) சங்கங்களிலோ) ஏழை பரத கலைஞர்களுக்கும் வேலை கொடுத்து உதவினால் உபயோகமாகத்தான் இருக்கும்.

செய்தி சொல்லும் நல்ல பதிவு. வாழ்துக்கள்!!

 
At 10:47 AM, Anonymous Anonymous said...

//
கண்ணகி சிலையை எதிர்த்தவர்கள் ஏன் பரத முனி கோவிலை எதிர்க்கவில்லை என்று சிலர் கேட்கலாம். )
//
கேக்கலாமே. அரசாங்க பணத்தில் கண்ணகி சிலை வைப்பதா
என்று எழுதியவர்கள் அரசாங்க நிலத்தில் பரத முனிக்கு
கோவிலா என்று ஏன் கட்டுரை எழுதவில்லை, கார்டூன் போடவில்லை.?

 
At 4:49 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

சிலைகள் வைப்பதால் ஏற்படும் பலன்கள் பல. அந்த சிலையை பார்ப்பவர்களுக்கு அதன் வரலாறு பற்றிய ஆர்வம் வரும். அந்த நபரின் வரலாறு அவரது போராட்டங்கள், உழைப்பு, ஸமூகத்திற்கு செய்த பங்களிப்பு என்பது போன்ற விஷயங்களை பற்றி அறிய ஒரு நல்ல தூண்டுதல்.

இந்த தூண்டுதல் மூலமாக பரத முனியின் சிலையை வைத்து அவரால் போதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒரு கலைக்கு தங்கள் வழ்க்கையை கொடுத்து, வறுமையை பெற்றவர்கள்மீது கவனம் பாயக்கூடும். ப்ரூஸ் லீ மூலம் உலகம் குங் ஃபூ கலையின்மேல் ஆர்வம் காட்ட ஆரம்பித்ததுபோல இந்த சிலைவைப்பும் ஒரு விளம்பர யுக்திதான்.

இதை செய்யும் அரஸாங்கம் இந்த கலைஞர்களுக்கும் உதவ வேண்டும். ஆனால் இந்திய அரஸியலே அழிப்பு அரஸியலாக இருக்கும்போது இதை அரஸாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கமுடியாது. வெறுமே அரஸாங்கத்தை குறை சொல்லிக்கொண்டு இருப்பதைவிட நம்மால் முடிந்ததை செய்யலாம். பெரிய அளவில் ஏதும் செய்யமுடியாவிட்டாலும் குறைந்த அளவில் நடக்கின்ற இதுபோன்ற ஓரிரு நல்ல விஷயங்களையும் குறை சொல்லாமல் இருப்பது நாம் பின்பற்றவேண்டிய குறைந்தபக்ஷ தர்மம்.

 

Post a Comment

<< Home