ullal

Friday, July 07, 2006

அன்புமணி,வேணுகோபால் ....

என்னுடைய இரண்டு சென் ட்.இந்த பிரச்சினையில் எழும் மூன்று கேள்விகள்.

அரசாங்க உதவி பெறும் autonomous நிறுவனங்களில் அமைச்சகம் தலையிடலாமா ?

autonomous நிறுவனங்களில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பு?நிர்வாகம் சரியாக செயல்படாமல் பொதுமக்கள் அவதிப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?

இதில் மீடியாவின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?


autonomous நிறுவனங்களில் அரசாங்கம் நேரடியாக தலையிடக்கூடாது என்பதை நானும் ஏற்கிறேன். மேல்நாடுகளிலும் அரசாங்க தலியீடு இல்லாமல்தான்அரசாங்க ஏஜன்சிகள் செயல்படுகின்றன. ஆனால் இந்த நிறுவனங்களில்ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் மீடியாவும் மக்களும் போட்டு புரட்டி எடுப்பார்கள்.


இரண்டு உதாரணங்கள் கொடுக்கிறேன். கேட் ரினா புயல் அடித்தபொழுதுfema சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியது. மீடியாவில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளினார்கள். முடிவில் femaவின் இயக்குனரை நீக்கினார்கள். autonomy comes with accountability.


இன்னொன்று என் நிறுவனத்தில் நடந்தது.இந்த மாநில அரசாங்கத்துக்குஎங்கள் நிறுவனம் தயாரித்த மென்பொருள் நேரம் கெட்ட நேரத்தில் படுத்துபொது மக்களை வதைத்துவிட்டது. இதற்காக எங்கள் நிறுவனத் தலைவர்செனட்டுக்கு சென்று வறுபட வேண்டியிருந்தது.


இந்தியாவில் தேவைக்கேற்ப சோசலிசமும், கேபிடலிசமும் அவரவர் வசதிக்கேற்ப நேரத்திற்கேற்ப வசதியான தத்துவம் எதுவோ அதை பிடித்துக்கொள்கிறார்கள்.தமிழக அரசாங்கம் லட்சக்கணக்கானவர்களை ஒரே ஆர்டரில் டிஸ்மிஸ் செய்தபோதுசில பத்திரிகைகள் கைகொட்டி வரவேற்றது. இந்த மாடர்ன் உலகில் வளர்ந்து வரும்இந்தியாவில் யாரும் ஸ்ட் ரைக் செய்யக்கூடாது , there is no moral, legal,ethical right டto strike என்று சுப்ரீம் கோர்ட் சொன்னது. துக்ளக் சோ கூடஜெயலலைதாவின் துணிவை பாராட்டினார். (இப்பொ என்ன சொல்கிறார் என்றுயாராவது update செய்யுங்கள்.)

கம்யூனிஸ்டுகள் அரசு ஊழியர்களைஆதரித்தார்கள். பொது மக்கள் இதனால் எவ்வளவு அல்லல்பட்டார்கள் என்றுபத்திரிகைகள் அக்கறையுடன் எழுதின.


fast forward to 2006. இட ஒதுக்கீட்டை எதிர்த்து டாக்டர்கள் போராட்டம்செய்தார்கள். மக்கள் அல்லல்படுவதை பற்றி எந்த பத்திரிகையும் எழுதியது போலதெரியவில்லை. கோர்ட் அவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்கிறது. கம்யூனிஸ்டுகள் வழவழ கொழகொழ என்று ஏதோ சொல்கிறார்கள்.வழக்கமாக போராட்டங்களையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்ப்பவர்கள் திடீர் கம்யூனிஸ்டாக மாறி 'இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்படிபோராடுவது' என்று கேட்கிறார்கள்.


சரி. இந்தியாவில் autonomous நிறுவனம் செயல்படாமல் நின்று போகும்போது என்ன செய்ய வேண்டும்? எப்படியோ போகட்டும் என்று சுகாதார அமைச்சரும்,பிரதமரும் விட்டுவிட வேண்டுமா? பொதுமக்களின் பணத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் இஷ்டப்படி வேலை செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம். செய்யாவிட்டாலும் தண்டிக்கக்கூடாது.இவர்கள் கேட்பது autonomy with impunity. இது சரியா?


ஏற்கெனவே சாதி சூழல் உள்ள நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சட்டம் போட்டுஅனுப்பினால் நம் autonomous நிறுவனங்கள் அதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தன்னிஷ்டப்படி செயல்படும். பேசாமல் அமைச்சகத்தை மூடிவிட்டு பிரதம மந்திரி நேரடியாக அரசு அதிகாரிகளின் மூலமே நிர்வாகம் செய்யலாம்.அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களை தண்டிக்கப்படாமல் கம்யூனிஸ்டுகளும்,வேண்டப்பட்டவராயிருந்தால் கோர்ட்டும் காப்பாற்றுவார்கள்.

Jaihind.

Problems with autonomy
http://www1.worldbank.org/publicsector/civilservice/autonomous.htm

1 Comments:

At 5:38 PM, Anonymous Anonymous said...

Right questions...
If anyone supported the punishment for govt.employees in tamil nadu then, without logical twist they should support the punishment for aiims docs and the head. it was right then, so does now, irrespective who do it, and for what. if people get affected due to strike, it is wrong. it's shame no one, no media is talking about the guy died in heart problem during this strike. in my view these the doctors, employees and whole institution should be held responsible, and *criminal case should be booked for refusing to treat his heart problem*. that guy deserved a treatment, not to die like this.

 

Post a Comment

<< Home