ullal

Friday, July 21, 2006

சோ, குருமூர்த்தியின் உளறல்வாதம்

இந்த பதிவை படிக்கு முன்பு முன்பு இட்லி வடையின் இந்த பதிவை (http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_21.html)படிக்க வேண்டும்.
முதலில் இஸ்ரேல் என்ற குட்டி நாடு தைரியமாக நடவடிக்கை எடுத்தது போல இந்தியா என்ற மிகப் பெரிய நாடு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறார்(கள்). இஸ்ரேல் என்பது பூகோளரீதியாக குட்டிநாடு. ஆனால் இதற்கு பின்னால் நிற்கும் 80 பவுண்ட்கொரில்லா வாக நிற்கும் அமெரிக்கா சோ, குருமூர்த்திகளின் கண்ணிற்குஏன் தெரியவில்லை? இஸ்ரேல் லெபனானை தரை மடமாக்கினாலும்அமெரிக்கா "எங்கே நான் பாக்கலையே" என்று கண்ணை மூடிக்கொண்டுவிடும்.அப்படியே UN இல் யாராவது இஸ்ரேலை கண்டித்தால், கண்டனத்தையும் வீட்டோசெய்து விடும்.

இந்தியாவிற்கு இப்படி பின்னாலிருந்து சப்போர்ட் செய்ய எத்தனை நாடுகள் இருக்கிறது?பாஜக ஆட்சியில் அணு ஆயுதப் போரின் எல்லை வரை கொண்டு சென்றது.இஸ்ரேல்(அமெரிக்கா) - லெபனானுக்கு இடையே உள்ள ராணுவ பல இடைவெளியும்,இந்தியா- பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இடைவெளியும் ஒன்றானதா?

அடுத்தது 'draconian law'. ஒரு பயங்கரமான சட்டத்தைப் போட்டு இந்த போரை அடக்குவதாம். கோர்ட்டுக்கு போக முடியாமல் வருடக் கணக்கில் ஜெயிலில் போடும் சட்டங்கள் ஜெயலலிதா போன்ற ஆட்களிடம் கிடைத்தால் என்ன நடக்கும் என்றூ நம் எல்லோரையும் விட குருமூர்த்திஅண்ணாவிற்கு நிச்சயம் அவர் பட்ட அனுபவத்திலாவது தெரிந்திருக்க வேண்டும். சாமியார் மடத்திலிருந்த அனைவரையும் குண்டாஸில் போட்டதற்காக மனித உரிமை பறிபோய்விட்டது என்று பக்கம் பக்கமாககண்ணீர் விட்டார்கள். இதே சட்டத்தை சாதாரண ஆட்களின் மீது தனிவிரோதத்துக்காக பயன்படுத்தினால் பத்திரிகையில் யாரும் கண்ணீர் விட மாட்டார்கள். இதனால் அப்பாவிகளின் மீது அடக்குமுறைதான் அதிகரிக்கும். இதை எழுதினதில் ஒன்று lawyer வேறு.

6 Comments:

At 12:07 PM, Anonymous Anonymous said...

why should you worry about Cho?.
Cho is a Nr one Fool. he write against to Ceylon tamils. why do u read THUKLAK?

 
At 1:34 PM, Anonymous Anonymous said...

'சோ'வையெல்லாம் மனுச சாதியின்னு நினைப்பதே மகா பாவம். அவனுக்கென்று ஒரு தலைப்பு போட்டு இதில் விவாதம் வேறையா? கொடுமையப்பா!

 
At 2:55 PM, Blogger கூத்தாடி said...

சோ / குரு மூர்த்திப் போன்றார் அறிவு ஜீவித்தனம் சார்பு நிலை கொண்டது...
காந்தகார்ரில் விமானம் கடத்தப் பட்ட போது இவர்களுக்கு பிடித்த இரும்பு மனிதர்கள் தானே இருந்தார்கள் ..ஆப்கானும் பாகிஸ்தான் போல் பெரிய நாடும் இல்லையே ..இஸ்ரேல் போல் நடந்து கொண்டிருக்கலாமே ..

 
At 3:36 PM, Anonymous Anonymous said...

ungalukellam cho madhiri oru critic fooldhaan,
you know only MK, rama doss, anbumani and co
because they are all corruptless demi gods
sorry gods

 
At 4:09 PM, Anonymous Anonymous said...

It is a shame that we in Tamil Nadu put up with this blatantly anti-Tamil creature.

 
At 5:12 PM, Anonymous Anonymous said...

போர்முனைக்கு சோவையும், குருமூர்த்தியையும்
முதலில் அனுப்பவேண்டும்.

 

Post a Comment

<< Home