ullal

Saturday, July 15, 2006

கடவுள்கள் சந்திப்பு

வலைப்பதிவர்களைப் போல இராமர் , ஐயப்பன், முருகன், பெருமாள்,நடராஜர் கேரளாவில் மீட் செய்தார்கள்.

பெருமாள் - என்னப்பா, ஐய்யப்பா திடீர்னு மீட்டிங் கூப்பிட்டுட்டே.

ஐயப்பன் - இந்த வலைப்பதிவர்களெல்லாம் மீட்டிங் போட்டு நலலாஉட்லேண்ட்ஸ்லெ மூக்கு பிடிக்க பகாளாபத் தின்னுட்டு அத பத்தி பதிவு எழுதறாங்க. அதனால நாமும் மீட் பண்ணலான்னு .

நடராஜர் - பிரமாதம். என்ன மெனு ?

ஐயப்பன் - பொரிகடலை, பஞ்சாமிர்தம்.

முருகன் கொஞ்சம் பஞ்சாமிர்தம் டேஸ்ட் செய்கிறார்.

முருகன் - என்னப்பா இது கேரளாவில இப்படி செய்றாங்க.பேசாம எங்க ஊர்ல மீட்டிங் போட்டிருக்கலாம்.

நடராஜர் - அதான் இப்ப பழனில மலையாளிங்க கூட்டம் போலருக்கு.கேரளாக்காரகளுக்கு பஞ்சாமிர்தம் செய்ய தெரியல.

பெருமாள் - இந்தாங்க. எங்க ஊர் லட்டு கொண்டு வந்திருக்கேன்

நடராஜர் - என்ன ராமர,் புதுசா எதோ அங்கி போட்டிருககீங்க

ராமர் - இது புல்லட் ப்ரூப் வெஸ்ட்டுப்பா. எனக்கு Z பிரிவுசெக்யூரிட்டி தெரியுமோ? இப்ப புல்லட் ப்ரூப் அறை கட்டப்போறாங்க.அதுக்கப்புறம் சிறை வெச்சிடுவாங்க. மீட்டிங் வர முடியாது.

முருகன் - அவ்வளவு பயமா? ஏன் , உங்க அஸ்திரம் எல்லாம் என்ன ஆச்சு?

ராமர் - அதெல்லாம் outdated ஆயிடுச்சு. புடுசா எதோ பேற்றியட்,ச்கட்டுன்னு ஏதேதோ சொல்றாங்க. ஒன்னும் புரியல.

ஐயப்பன் - நீங்களாவது இடன் டா ்நெஷனல் தீவீரவாதிக்கு பயப்படுறீங்க. என் நிலைமையைப் பாரு . பொண்ணுங்கள பாத்து பயந்து நடுங்க வேண்டிஇருக்கு. இந்த சினிமா நடிகைகளோட தொந்தரவு தாங்க முடியல.திடீர்னு தொட்டுட்டு பொயிடறாங்க.

ராமர் ் - சரி. கொஞ்சம் தள்ளி உக்காரு.

பெருமாள்- இப்ப எல்லா சாதிக்காரகளும் அர்ச்சகர் ஆகலாம்னு சொல்றாங்க.தீட்டு பிரச்சினை பெரிய பிரச்சினையாயிடுச்சு.

முருகன்் - ஆ......மாம். உங்க காஞ்சிபுர branch லே கொலையே் பண்ணாங்க. அப்ப தீட்டு ஆகலையா?

பெருமாள் - பிராமண ரத்தம் தீட்டு இல்லை.

ராமர் - நம்ம க்ரூப்ல முருகர் மட்டும்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கார்,

முருகர் - அட , நீங்க வேறே நமக்கு சிலை வெக்கறாங்க , எடுக்கறாங்க.ஒரே தொல்லையா போச்சு. புதுசா மண்டபம் கட்டியிருக்காங்க தெரியுமா?

நடராஜர் - கேள்விப்பட்டேன். ஜெயலைதாவின் அம்மா பேர் . வெச்சாங்களாமே.முன்னாள் நடிகை பேர்ல மண்டபம், பாவம் தமிழ்நாடு,

முருகர் - நீங்களும் தாமிழ்நாட்டிலதானே இருக்கீங்க. எதோ தமிழ் பாட்டு கேக்க மாட்டீங்கன்னு சொல்றாங்க. எனக்கு தினமும் தேவாராம் பாடறாங்க.

நடராஜர்- ஆமாப்பா. பக்தர்கள் பாடணும்னு ஆசைப்படராங்க. எனக்கும்கேக்க ஆசைதான். இந்த பூசாரிகள் நடுவுல தகறாறு பண்ணறாங்க.எல்லாம் இந்த ராமரால வந்தது. இவரு தென்னாட்டுக்கு வந்தாலும் வந்தாரு தமிழே கெக்க முடியல. தமிழ் பாட்டுக்குதான் டேன்ஸஆடி பழக்கம்.
நடனம் ஆ.........டினார்,னு. (ஆடி காண்பிக்கிறார்)

பாம்பு தலையை ஆட்டி ஆமோதிக்கறது.

முருகர் - நல்லா சொன்னீங்க. நான் பாட்டுக்கு வள்ளியோட நிம்மதியாஇருந்தேன். இவங்க வந்து தேவயானைன்னு ஒரு போண்ணை கட்டி வெச்சு, ரெண்டு வீட்டுக்கும் இடையே மாட்டிக்கிட்டேன்.

நடராஜர் - உங்க கஷ்டம் எனக்கு நல்லா புரியுது.

ராமர் - தமிழ் பாட்டு கேட்டு என்ன பண்ணப் போறீங்க?. இந்தி தெரியாம வேலை கெடைக்காது. சம்ச்க்ருதம் தெரியாம சோறுகெடைக்காது.

முருகன் - உங்க ஊர்ல வேலை கொட்டி கெடக்குதா?

ராமர் - எங்க ஊராளு உங்க ஊருக்கு வந்தா அவர்களுக்காக சம்ஸ்கிருதத்துல பூசை செய்யறதா சட்டசபையிலயே சொல்லியிருக்காங்க.

நடராஜர்- அவங்களுக்கு புரிஞ்சா? எனக்கு புரிய வேணாமா?எங்க ஊர் ஆளு உங்க ஊருக்கு வந்தா தமிழ்லயா பூசை பண்ணறீீங்க.?

பெருமாள் - சரி , விடுங்கப்பா . சண்டை போடாதீங்க.இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்க ஆதிக்கம் ஆயிடும். அப்புறம்எல்லாம் இங்க்லீஷ்தான்.

முருகரின் செல்போன் அடிக்கிறது.

முருகர் - வள்ளி, இதோ வந்துட்டே இருக்கேன். சத்தியமா,சபரிமலை மீட்டிங்க்லதான் இருக்கேன்.

நடராஜர்- இதுக்குதான் நான் செல்போனே வெச்சுக்கறதில்லை.

ஐயப்பன் ் - இந்த தொல்லைக்குதான் நான் கல்யாணமே பண்ணிக்கறதில்லைன்னுமுடிவு பண்ணிட்டேன்.

முருகர் - உங்கள பத்தி ஊருக்குள்ள ஒரு மாதிரியா பேசறாங்க.

ஐயப்பன் - இந்த உள்குத்துதான வேண்டாங்கறது.

முருகர் - சரிப்பா, நான் கெளம்பறேன்.

பெருமாள் எல்லாருக்கும் ஒரு வைரக் கிரீடம் பரிசளிக்கிறார்.
மீட்டிங் முடிந்தது.

8 Comments:

At 9:32 PM, Blogger Pot"tea" kadai said...

குளிர் தாங்கல, அதான் கொஞ்சம் குளிர் காஞ்சுட்டு போவலாம்னு வந்தேன்.
ஒரு +

அப்புறம் ஒரு சின்ன சந்தேகம், அய்யப்பனை தான் காலை கட்டிப்போட்டு வெச்சிருக்காங்களே அவர் எப்படி வந்தார்...:-))

முருகர் தமிழ் கடவுளாச்சே...அதுவும் ஒரு ஸ்டெஃபானி வேற வெச்சிருக்கார் அதனால நடிகை பேர்ல மண்டபம்லாம் அவருக்கு ஒரு மேட்டரே இல்ல.

ப்ரேக் டான்ஸர் தில்லாலங்கடி தில்லையரசனுக்கு ஒன்லி சேன்ஸ்க்ரிட் தான் புரியும் ஸோ தமிழ் பாட்டுக்கெல்லாம் டான்ஸ் ஆட முடியாது.

என்ன 10 நாள் தான ஸ்டே வாங்கியிருக்கானுங்க அதுக்கப்புறம் தீட்சிதர்கள் தலையில ரெண்டு போட்டு சிலைய தூக்கிகிட்டு ஓடுங்கடான்னு தெரத்த வேண்டியது தான்.

 
At 10:48 PM, Blogger G.Ragavan said...

ரசித்தேன். :-)

 
At 12:53 AM, Blogger மு. மயூரன் said...

//இந்த ராமரால வந்தது. இவரு தென்னாட்டுக்கு வந்தாலும் வந்தாரு தமிழே கெக்க முடியல. தமிழ் பாட்டுக்குதான் டேன்ஸஆடி பழக்கம்.//

//பெருமாள் - சரி , விடுங்கப்பா . சண்டை போடாதீங்க.இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்க ஆதிக்கம் ஆயிடும். அப்புறம்எல்லாம் இங்க்லீஷ்தான்.
//

அசத்தல்

 
At 7:42 AM, Blogger aathirai said...

//அப்புறம் ஒரு சின்ன சந்தேகம், அய்யப்பனை தான் காலை கட்டிப்போட்டு வெச்சிருக்காங்களே அவர் எப்படி வந்தார்...:-))//

அதான் சபரிமலைல மீட்டிங்க் போட்டாங்களோ?

 
At 5:52 PM, Blogger aathirai said...

sondha padhivu illaadha nabivazhiyan July ildhan bloggeril sernthirukiraar.

Hm..

 
At 8:27 PM, Blogger மனதின் ஓசை said...

:-)

 
At 11:33 AM, Blogger aathirai said...

அனைவருக்கும் நன்றி. பிழை திருத்திய ஆசிரியருக்கும்.
இந்த தமிழ் செயலியுடன் போராட்டம் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

 
At 11:22 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

உள்ளல்..
கலக்கல்

 

Post a Comment

<< Home