ullal

Tuesday, July 18, 2006

உயர்வு தாழ்வுஎங்கே வந்தது?- தினமலர்

வேதம், சாஸ்திரம் போன்றவற்றில் வல்லுநிரான சேசாத்திரிநாத சாஸ்திரிகள் :நாற்பத்தியொரு நாட்கள் விரதம் இருந்துசபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் உடல் உபாதையால் மன ஒருமையோடு இறைவனை சிந்திக்க கடியாது. இந்த நலையில் விரதக்குறையோடு அய்யப்பனை பெண்கள் தரிசிக்கக்கூடாது என்பது அந்த கோவிலின் நயதி.

சாதாரணமாக ஓர் இடத்துக்கு சென்றால் அங்கே உள்ள நியதி யை கடைப்பிடிப்பது தானே நியாயமாக இருக்கும்? பணிபுரியும் இடத்தில் இன்ன சீருடை என்றால் அதைக் கடைப் பிடிக்கிறோம். "நான் தானே வேலை பார்க்கிறேன், சீருடையா வேலை பார்க்கிறது' என்று கேட்க முடியுமா? அந்த வேலைக்குப் போவதை வேண்டுமானால் தவிர்க்கலாம். இங்கே மட்டும் கேள்வி ஏன்?

பெண்களை மிகவும் உயர்வான இடத்தில் வைப்பது பாரத கலாசாரம். தாய்நாடு இது. உயிர் கொடுக்கும் நிதிகள் பெண்கள். "மாத்ரு தேவோ பவ' என்று பெண்ணை முதலில் வணங்கும் கண்ணியம் கொண்டவர்கள் நாம். அம்பாள் புராணத் தில் அசுரர்களை அழிக்கப் புறப்படும் அம்பாளின் படையில் அனைவரும் பெண்கள். "எங்களைக் காப்பாற்று' என்று அவள் காலில் விழுந்தவர்கள் ஆண்கள். உயர்வு & தாழ்வு எங்கே வந்தது?
இருட்டினால் பெண் தனியே போகக் கூடாது; ஓர் ஆண் துணையோடு போக வேண்டும் என்றால், அவன் உளவாளி என்று அல்ல... மெய்க்காப் பாளன் என்கிற கோணத்தில் பார்க்க வேண்டும்.

நம் அன்றாட வாழ்வில் அற்ப காரியங்களிலேயே ஏராளமான பாகுபாடுகளை வைத்திருக்கிறோம். இஞ்சினியர் ஊசி போட்டால் அவரை சும்மா விட மாட்டோ ம். வக்கீல் பாலம் கட்ட கடியாது. இப்படி பாகுபாடு இருக்கிறது. இதில் உயர்வு தாழ்வு எங்கே வந்தது?
என்ன லாஜிக்கு? என்ன லாஜிக்கு?

கோவில்களில் கருவறை, முதல் பிரகாரம், இரண்டாம், உன்றாம் பிரகாரம் என்றெல் லாம் உண்டு. யார் எந்த காலத்தில் "எங்கே இருந்து" சுவாமியைப் பார்க்கலாம் என்றெல்லாம் விதித்து வைத்திருக்கின்றனர். அப்படி ஒன்று தான் சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் வரக் கூடாது என்பதும்.
பூனைக்குட்டி வெளியில் வந்துட்டது.

பெண்கள் வழிபட எத்தனை யோ கோவில்கள் இருக்கின்றன. ஏன், கேரளத்தில் பல கோவில்
களில் பூஜை செய்பவர்களாக பெண்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்தக் காரியத்தை செய்ய அசாதாரணமான தகுதி இருப்பதாக அந்தக்கோவில்கள் நனைக்கின்றன. அங்கே போய், சமத்துவம் பேசி "ஆணை அர்ச்சகராக்கு' என்று சொல்வது புத்திசாலித்தனமா?

5 Comments:

At 11:15 AM, Blogger மு. மயூரன் said...

தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் பல கோவில்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

பெண்களை அனுமதிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களாக எவை முன்வைக்கப்படுகிறதோ, ஏறத்தாழ அதே மாதிரியான காரணங்களே முன்வைக்கப்படுகின்றன.

கேட்டால், இது இந்த கோவிலின் நியதி., தேவை என்றால் சாதிக்கோவில்கள் எத்தனையோ இருக்கே அங்கே போய் கும்பிட்டுக்கலாமே என்றமாதிரியான பதில்கள் தான் வருகின்றன.

பெண்விடுதலையும், சாதி விடுதலையும் மதங்களின், குறிப்பாக இந்து மதத்தின் அழிவில் தான் சாத்தியமாகும் என்பது வலிய உண்மை.

சர்வ வியாபகத்தை கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் மதம், எல்லோரும் கடவுளின் முன் சமம் என்று வாயளவில் கூறிக்கொள்ளும் சமயம், தனது வழிபாட்டிடத்தில் அந்த சமநிலையை கடைப்பிடிக்காமலிருப்பதை அம்பலப்படுத்தத்தான் இப்படியான் குற்றச்சாட்டுக்கள் தூக்கிபிடிக்கப்படுகின்றன.

வழிபாட்டிடங்களின் முறைகேடான சட்டதிட்டங்களை மீறுதலும், எதிர்த்தலும் மதத்தின், வழிபாட்டிடங்களின் சுயநலப்போக்குக்கு, ஏமாற்றுக்கு எதிராக செய்யப்படும் போராட்டமே.

மதங்கள் தம்மை சீர்திருத்திக்கொள்ள வழியில்லை.
அழிந்துபோனால் தான் உண்டு.

 
At 12:44 PM, Anonymous Anonymous said...

Wht to say !!!
if you are a religious person follow the rules
if you are an Atheist , get out of that,
dont criticise any religion, every religion has their own pros and cons.

 
At 6:09 AM, Blogger ரவி said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...அப்போ மகர ஜோதி உண்மையா கிளம்புது என்று சொல்லுவீங்க போலிருக்கு...

அறிவென்றிருந்தால் சிந்திக்கவேணாமோ ?

விண்வெளிக்கு பெண்கள் சென்றுவந்திட்டாங்க...இன்னும் கோயிலுக்குள்ள வராதீங்கன்னா எப்படி சாரே...

உங்களுக்கு கட்டுப்பாடு இல்லைன்னு சொல்லுங்க...

என்ன ஒரு போங்குத்தனமான வாதம் (உபயம் : டோண்டு) ?

 
At 7:41 AM, Anonymous Anonymous said...

"அந்த வேலைக்குப் போவதை வேண்டுமானால் தவிர்க்கலாம்"

இந்த கண்ராவி எல்லாம் வேணா மென்றுதான் ;இப்போ கோவிலுக்கே போவதில்லை. வேலையும் கோவிலும் ஒன்றில்லை. கோவில் போகாமல் குடி குழுகிவிடாது. ஆண்டவன் ரொம்ப நல்லவர்; இல்லை யென்றால், சங்கரா;சங்கரா என்று சொல்லி "சுவர்ணமாலிகா" வோடு கூத்தடிச்சவங்களையும்; கூத்துக்குக் கூலியாக காமாச்சி அம்மன் அணிந்த பட்டுச்சேலையைக் கொடுத்தவங்களைக் கூட தனக்குக் கிட்ட வர விட்டுள்ளாரே! சாமி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர். போங்கய்யா ,நீங்களும் ஒங்க நியதிகளும். ஆட்டம் படிப்படியாக அடங்கத் தொடங்கி விட்டது. முதல் சங்கரமடம்,,இனி ஒண்ணோண்ணா!!அடங்கும் காலம் நெருங்குது.
யோகன் பாரிஸ்

 
At 8:21 AM, Blogger aathirai said...

//if you are a religious person follow the rules//
question is who makes the rules?

idhukellam anonyaa varanuma

 

Post a Comment

<< Home