ullal

Friday, August 18, 2006

ஐயப்பன் ,பெண்கள் ,மாதவிடாய்..

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதா என்ற விவாதம்எழுந்தபோது சிலர் (அவதாரப்பிறவிகள் ?) பெண்கள் கெட்டஇரத்தத்துடன் கோவிலில் நுழையக்கூடாது என்பது போல எழுதினர்.

அம்மனுக்கு சிவப்பாடை அணிவிப்பது மாதவிடாயை குறிப்பதுஎன்பதை முன்பு எப்போதோ கேள்விப்படிருக்கிறேன். சரியான விபரம் தெரியாததால் இது குறித்து எழுதாமல் விட்டேன்.

இப்பொழுது திண்ணையில் குமரி மைந்தனின் சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் கட்டுரையில் இதே செய்தியை கண்டதால் பதிக்க வேண்டி அவசியம்உள்ளது.

"பெண் தலைமை முறியடிக்கப்பட்ட பின் வழிபாட்டு முறைகளில் மாற்றம்ஏற்பட்டாலும் சில எச்சங்கள் இன்றும் நிலவுகின்றன. சில கோயில்களில்பூசாரிகள் சேலை உடுத்திக் கொண்டுதான் பூசை செய்கின்றனர். இன்றும்நாட்டுப்புற அம்மன் கோயில்களில் பூசாரிகள் சிவப்பு உடை உடுத்தியே பூசை செய்கின்றனர்.

இந்தச் சிவப்பு ஆடை பெண்களின் மாதவிடாய்க் குருதி பட்ட சேலையைக் குறிக்கும். பெண் தலைமைக் குமுகத்தில்மாதவிடாய் தெய்விகமானதாகவும் மாதவிடாய்க் காலத்தில்பெண் தெய்வத் தன்மையுடையவளாகவும் கருதப்பட்டாள். எனவே தான் இன்றும் இவ்வம்மன் கோயில்களில் அம்மனுக்குச்சிவப்புச் சேலை வாங்கிச் சார்த்தி அதைத் திரும்பப் பெற்றுவீட்டில் வைத்து வணங்குகின்றனர். பழங்காலத்தில் இவ்வம்மன்களை மாதவிடாயிலிருக்கும் பெண்களே பூசை செய்தனர். பெண் மாதவிடாயிலிருக்கும் போது தெய்விகமானவளாகக் கருதப்பட்டதால் அவளுடன் உடலுறவு கொள்வதும் தவிர்க்கப்பட்டது; இன்று அதற்குநேர் எதிரான காரணத்தால் அது தவிர்க்கப்படுகிறது. இன்று ஆண்,பெண் வேறுபாடின்றி “இந்துக்கள்” நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமப் பொட்டு முன்பு மாதவிடாய்க் குருதியை நெற்றியில் இட்டதின் எச்சமே. மஞ்சள் நெய் எனப்படும் சிவப்பான குழம்புக்கும் இதே குறிதகவு தான்."புகழ் பெற்ற குமரி மாவட்ட முப்பந்தல் இயக்கிக் கோவிலில் மஞ்சள் நெய் வழங்கப்படுகிறது.

15 Comments:

At 11:52 AM, Anonymous Anonymous said...

How to believe your arguments. Please explain more.

 
At 11:59 AM, Blogger Unknown said...

இதுகுறித்த சர்ச்சையின் போது பிரசுரித்த கட்டுரை :

http://paarima.blogspot.com/2006/07/blog-post_30.html

 
At 12:04 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்ல தகவல்கள். நன்றி

 
At 4:13 PM, Blogger aathirai said...

//How to believe your arguments. Please explain more. //

???
i dont know what you believe?

they do worship fertility in many cultures. the point is, periods is fertility not dirt.

 
At 4:47 PM, Blogger aathirai said...

என் நினைவில் எப்பொழுதோ கேள்விப்பட்டதாக
எழுதியிருந்தது இந்த பகவதி அம்மன பற்றியதுதான்.

http://www.templenet.com/Kerala/chengannur.html

An interesting belief with respect to the Bhagawati shrine prevails
in this temple. Celebrated as a symbol of fertility, a menstruation
ceremony has been observed periodically in the temple, corresponding
to certain physical observations on the image of Bhagawati; per tradition
during this period, the Bhagawati shrine is closed and worship is offered
to a processional image elsewhere in the temple. At the end of a three day
period, the processional image of the deity is taken to the nearby Pampa river
on a female elephant; the returning procession is received ceremoniously at the temple,
after which worship commences as usual at the Bhagawati shrine.

 
At 6:48 PM, Anonymous Anonymous said...

Bhagavathy amman temple follows that and Iyappan temple follows this. You meant to say all the temple should follow same. If so why don't insist all the people in each country, state, city, village street should follow same in everything.

Fertility is dirty but not SIN. The blood really stinks. If you get a blood in your finger by puncturing you suck your finger but can you taste the fertility blood. So its dirt. In house also people wants to keep certain things in certain place, here they followed something formalities.

Fertility blood is dirt but not SIN

Thanks
Goundan

 
At 6:49 PM, Anonymous Anonymous said...

The previous post I have put Fertility (I meant to say Period not fertility. Please edit that..

Sorry for that

 
At 7:26 PM, Blogger aathirai said...

thamizmanam aangila manam aagivitadhu.

if one can worship amman's periods
why should n't they allow women to become priests in any temple?

 
At 7:32 PM, Blogger aathirai said...

//Fertility blood is dirt but not SIN //

as a matter of fact, Fertility is HOLY.

 
At 8:36 PM, Anonymous Anonymous said...

Yes sir ....

Fertility is HOLY...

Period is dirty but not SIN.

//*if one can worship amman's periods why should n't they allow women to become priests in any temple? *//

Bhagavathy amman temple all worshipping Woman, so there are woman priests. Iyappan temple also worshipping woman but not that level like Bhagavathy amman temple so there is a differnce.

Before critisizing something understand or try to understand what you are trying to say....

I feel pity about you innocence...
-Goundan

 
At 1:39 AM, Blogger dvetrivel said...

பலர் புண்படும் படியும் பலர் சிலிர்த்தெழும்படியும் எழுதியுள்ளீர்கள். இந்த கேள்வியை நான் பலரிடம் கேட்டுள்ளேன். அவரவர் நம்பிக்கையின் படி பதில் கிடைத்தது. இதில் இருந்து நான் பெற்றது என்ன வென்றால் பெண்கள் அய்யப்பன் சுவாமியை உண்மையில் விரும்பினால் இது குறித்து போராட்டம்/ பெட்டிஷன் பொடலாம். பெண் உரிமையை அதை விட அவசர தேவையாய் நினைத்தால், இந்த கடவுளை விடுத்து வேறு கடவுளை வழிபடலாம். நான் இங்கு கூறியுள்ளது எனது சொந்த கருத்து. தவறாய் இருப்பின் மன்னிக்கவும்.

 
At 1:40 AM, Blogger dvetrivel said...

பலர் புண்படும் படியும் பலர் சிலிர்த்தெழும்படியும் எழுதியுள்ளீர்கள். இந்த கேள்வியை நான் பலரிடம் கேட்டுள்ளேன். அவரவர் நம்பிக்கையின் படி பதில் கிடைத்தது. இதில் இருந்து நான் பெற்றது என்ன வென்றால் பெண்கள் அய்யப்பன் சுவாமியை உண்மையில் விரும்பினால் இது குறித்து போராட்டம்/ பெட்டிஷன் பொடலாம். பெண் உரிமையை அதை விட அவசர தேவையாய் நினைத்தால், இந்த கடவுளை விடுத்து வேறு கடவுளை வழிபடலாம். நான் இங்கு கூறியுள்ளது எனது சொந்த கருத்து. தவறாய் இருப்பின் மன்னிக்கவும்.

 
At 4:09 AM, Blogger aathirai said...

பெண்களை அசுத்தமானவர்களென்று ஒரு கூட்டம்
கட்டமைத்து வைத்திருக்கிறது. இதில் வேதனை,
பெண்களும் இதை உண்மையென்று நம்புவது.
இந்த கருத்தை முதலில் உடைக்க வேண்டும்.

இனி ஆங்கில பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை
என்ற கொள்கையை பின்பற்ற இருக்கிறேன்.

 
At 10:32 PM, Anonymous Anonymous said...

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வேலை சேய்ய கூடாது. கோவில்களுக்கு சென்றால் வீட்டிலும் வேலை செய்ய வேண்டி வரும்.அதனாலேயே வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்
ஜெயஸ்ரீ

 
At 1:10 PM, Blogger thiru said...

//Anonymous said...
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வேலை சேய்ய கூடாது. கோவில்களுக்கு சென்றால் வீட்டிலும் வேலை செய்ய வேண்டி வரும்.அதனாலேயே வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்
ஜெயஸ்ரீ//

அப்படீங்களா? நம்பிட்டோம்!

பெண்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடாது, அய்யப்பனை பெண் தொட்டதால் தீட்டுனு சொன்னது ஏனுங்க?

இது தொடர்பான எனத்ஹு பதிவு http://aalamaram.blogspot.com/2006/07/x.html

 

Post a Comment

<< Home