பியரிலிருந்து கோக் வரை
பியர் பழங்குடிகள் கண்டுபிடித்த பானம். பியரை கண்டுபிடித்ததேஒரு விபத்து. அறுவடை செய்து கொட்டி வைக்கப்பட்ட தானியம்ஈர பதத்தால் முளைக்கட்டி அதிலிருக்கும் சர்க்கரை ஆல்கஹாலாகமாறி விட்டது. அந்ந்ந்த்த காலத்தில் எகிப்து பிரமிட்டுகள் கட்டியவர்களுக்குரொட்டியும், பியரும் கூலியாக கொடுத்தார்கள். (இன்று தமிழகஅரசு இலவச அரிசியும், டாஸ்மாக்கும் வைத்திருப்பது போல.)
பியரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அனைவரும் ஒன்றாகstraw போட்டு பருகுவர். நண்பர்களுடன் கறியை பங்கு போட்டுத்தின்றாலும் கூட சிலருக்கு நல்ல பாகமும் சிலருக்கு வேறு பாகங்களும் கிடைக்கலாம். கூட்டாக ஒரே பானையில் ஊற்றி பியர் குடிப்பதுதோழமையை குறிப்பது. இந்த காரணத்தால்தான் இன்று குடிக்கும்போதுடோஸ்ட் செய்யும் பழக்கம் வந்தது.
திராட்சைகளால் செய்யப்பட்ட ஒயின் கிரேக்கர்களின் கலாச்சாரம்.இறக்குமதி செய்த திராட்சைகளிலிருந்து செய்யப்படும் ஒயின் ஆரம்பத்தில் பெரும் பணக்காரர்களும், அரசர்களுமேமட்டுமே ஒயின் வாங்க முடிந்தது. பிற்பாடு ரோமாபுரியிலும் ஒயின் மிகப் பிரபலமாக இருந்தது. ஒயின் குடிப்பது உயர்வானதாகவும்,பியர் குடிப்பது காட்டுமிராண்டித்தனமாகவும் கருதப்பட்டது.ஒயின் காய்ச்சும் க்வார்ட்டர் கோவிந்தனின் டெக்னிக்கை கண்டுபிடித்தவர்கள் இஸ்லாமியர்கள். கிருத்துவம் ஒயின் குடிப்பதை ஏற்றது. ஆனால் மது இஸ்லாமில் தடை செய்யப்பட்டது. மருந்துக்காகமட்டுமே பயன் படுத்த அனுமதி உண்டு.
பிரிட்டிஷார்கள் காலை உணவுக்கே பியரும், ஒயினும் குடிப்பார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தண்ணியின் மீது அவ்வளவு பயம். தண்ணீர்குடித்தால் மலேரியா வருமாம். அதனால் நன்றாக காய்ச்சிய பியரும்,ஒயினும் பாதுகாப்பானது. முதன்முறையாக மதியை மயக்காத மாறாகமூளையை சுறுசுறுப்பாக்கும் காபி கண்டுபிடிக்கப்பட்டது. காபி அறிவுடன்சம்பந்தப்பட்ட பானமாகியது. பெரிய அறிவாளிகள், சிந்தனாவாதிகள்கூடும்போது காபி குடிக்கும் கலாச்சாரம் வந்தது. பியர் அளவுக்கு காய்ச்சாவிட்டாலும், காபி பாதுகாப்பாகவே கருதப்பட்டது. காபி வியாபாரத்தில் மத்திய கிழக்கு நாடுகளே கோலோச்சியது. வேறு நாடுகளில் இந்த செடியை விளைவித்துவிடக் கூடாதென்று காபிவிதையை வறுத்து ஏற்றுமதி செய்தார்கள். பின்னர் யாரோ திருட்டுத்தனமாக இந்த செடியின் கட்டிங்கை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று பிற நாடுகளில் விளைவிக்கப்பட்டது. இஸ்லாமியகோர்ட்டில் காபி இஸ்லாமுக்கு எதிரானதா என்று வழக்கு கூட நடந்ததாம்.
காபிக்கு அடுத்தபடியாக வந்தது தேயிலை ஏகாதிபத்தியம். இன்றும்பிரிட்டிஷார்கள் மாலையில் தேநீர் அருந்தும் கலாச்சாரம் வைத்திருக்கிறார்கள்.ஜப்பானில் தேநீர் அருந்தும் முறைக்கு வகுப்புகள்கூட இருக்கின்றன.அந்த அளவுக்கு தேநீர் குடிக்கும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது.தேயிலையும் காபி, பியரைப் போல ஒரு மருந்து வகையாகவே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. நமக்கு நன்றாக தெரிந்த கிழக்கு இந்தியா கம்பெனி தேயிலைக்காக சீனாவில் போர் நடத்தி வென்றது. பின்னர்சீனாவை மட்டுமே வியாபாரத்திற்கு நம்ப முடியாதென்று தேயிலையைஇந்தியாவில் கொண்டு வந்து விளைவித்தார்கள். குறைந்த விலையில் இந்தியாவில் தயாரித்த தேயிலையை அமெரிக்காவில் கொண்டு வந்து கொட்டி,பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன்(லஞ்சம் கொடுத்து ) அமெரிக்க தேயிலைக்கு வரி போட்டார்கள். இதிலிருந்து அமெரிக்க 'பாஸ்டன் தேயிலைபார்ட்டி' என்ற புரட்சி செய்து அமெரிக்கா பிரிட்டிஷிடமிருந்து விடுதலை அடைந்தது.
அடுத்த ஏகாதிபத்தியம் கோக்கினுடையது. இதை கண்டுபிடித்தவர் ஒரு பார்மசிச்ட். கோகா- என்பது கொக்கோ பழத்தை குறிக்கும். கோலா என்பது ஆப்பிரிக்காவில் உள்ள மூலிகை வேர். இவர் தயாரித்த மருந்தை குடித்தவர்கள்புத்துணர்ச்சி அடைந்ததால் இது பிரபலமான குளிர் பானமாக்கப்பட்டது. பல நாடுகளில் கோக்கை எதிர்த்தபோதும் ஒவ்வொரு முறையும் இந்த எதிர்ப்புகோக்கிற்கு இலவச விளம்பரமானது. கோக் என்பது அமெரிக்க சின்னமாகவே மாறிப்போனது.
இன்று க்ளிந்டனின் முயற்சியால் அமெரிக பள்ளிகளில் சோடா என்ற 'carbonated'பானங்கள் தடை செயப்பட்டுள்ளது.இன்று அமெரிக்காவில் பிரபலமாகி வரும்பான கம்பெனி கோகா கோலா இல்லை. Hansen natural beveragesஇன் பங்கு கடந்த இரண்டு வருடங்களில் 60 மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள்தயாரிப்பது multivitamin juice, fruit smoothie போன்றசோடா இல்லாத இயற்கை பானங்கள். இப்பொழுது நல்ல தண்ணீரும் பாட்டிலில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. Mountain spring என்றெல்லாம்விளம்பரம் செய்தாலும் இங்கு விற்கப்படும் தண்ணீர்கள் அனைத்தும் மலையிருந்துஎடுக்கப்படுவதில்லை. குழாயில் வரும் முனிசிபல் தண்ணீரில் சில தாதுக்கள் சேர்த்து விற்பனை செய்கிறார்கள். கடைசியில் ஒரு வழியாக மேற்கில் இப்பொழுது தண்ணீர் குடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
(History of the world in six glasses)
9 Comments:
//அதனால் நன்றாக காய்ச்சிய பியரும்,ஒயினும் பாதுகாப்பானது. //
இதத்தான் நானும் ரெம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்கேன் என் மனைவிக்குப் புரியமாட்டேங்குதே..
இந்தப் பதிவப் பாத்தீங்களா?
paarthen :)
//கோகா- என்பது கொக்கோ பழத்தை குறிக்கும்//
கோகா- இது தென் அமேரிக்க நாடுகளில் விளைகின்ற
கோகா இலைகளை குறிப்பதாக எங்கோ படித்த நினைவு.
இதன் தாவரவியல் பெயர் -Erythroxylum coca
//அதனால் நன்றாக காய்ச்சிய பியரும்,ஒயினும் பாதுகாப்பானது. //
அப்படியா?
இப்பவே கிளம்பறேன்.
எல்லாம் சொல்லீட்டு, பனங்கள்ளை மட்டும் விட்டிட்டீங்க
// எல்லாம் சொல்லீட்டு, பனங்கள்ளை மட்டும் விட்டிட்டீங்க//
ஒ. இது மேற்கத்திய வரலாறு. தமிழர்கள் தான் அவ்வையார் காலத்திலேயே
கள்ளு குடித்தவர்களாச்சே
பெரிசு,
கொக்கோ பழம் கேரளாவிலேயே இருக்கு.
//கடைசியில் ஒரு வழியாக மேற்கில் இப்பொழுது தண்ணீர் குடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.//
:-)))
அப்புறம் பின்லேடன் அண்ணாச்சிக்கு கோகா (கோலா இல்லை.கோகா ) பிசினஸில் பெரிய பங்கு இருப்பதாக சொல்றாங்களே உண்மையா ஆதிரை?
//அப்புறம் பின்லேடன் அண்ணாச்சிக்கு கோகா (கோலா இல்லை.கோகா )
பிசினஸில் பெரிய பங்கு இருப்பதாக சொல்றாங்களே உண்மையா ஆதிரை? //
நீங்க சொல்லிதான் கேள்விப்படறேன்.
இங்கு சில பாட்டில் தண்ணிகளில் முனிசிபல் குழாய் தண்ணீரைவிட
அதிக பாக்டீரியா உள்ளதாம்.
Post a Comment
<< Home