மெல் கிப்சனின் யூதவெறுப்பும் ஷாருக்ின் கோக் பிரியமும
இரண்டு வாரம் முன்பு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் மெல்கிப்சன் ஓவராக குடித்துவிட்டு கார் ஓட்டி போலீசால்கைது செய்யபட்டார். மனிதர் போலீசுடன் வாக்குவாதம்செய்கையில் புகழ் பெற்ற F இல் தொடங்கும் நாலெழுத்துகெட்ட வார்த்தையில் யூதர்களை திட்டினார். அத்தோடு விட்டாரா, ஒரு படி மேலே போய் 'உலகில் நடக்கும்போர்களுக்கெல்லாம் யூதர்களே காரணம்' என்று மேலும் கூறினார். யூதர்கள் நிறைந்த ஹாலிவுட்டில் இப்படிபேச ரோம்ப தைரியம் வேண்டும்.
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க மீடியா இந்த சம்பவத்தை ஏந்டி செமிடிக் என்று சொல்லி அரைத்தெடுத்தது. அடுத்த நாள் மெல் கிப்சன் தான் சொன்னதற்கு மன்னிப்புகேட்டுக்கொண்டார். குடிபோதையில் உளறியதாக விளக்கம் கொடுத்தார். குடிபோதையில் இது போல கருத்துக்கள் எல்லாம் வருமா?ஏற்கெனவே மனதில் இருந்த வெறுப்புதான் குடிபோதையில்வெளி வந்துள்ளது. இவருடை அடுத்த படம் 'அபோகேலிப்டோ 'வை புறக்கணிக்க வேண்டும், ச்டூடியோக்கள் இவருடன் ஒத்துழைக்கக் கூடாது என்றெல்லாம் குரல் கேட்கிறது.இவருடைய முந்தைய படம் 'பேஷன் ஆப் க்ரைச்ட்' ஏந்டி செமிடிக் என்றார்கள். (யேசுவின் கதை முடிவை மாற்றியா எடுக்க முடியும்?) ஆனால் இந்த படம் பாக்ச்ஆபீசில் டால்ரகளை குவித்தது. (10th place in Alltime collection)
எப்படியோ அடுத்த படத்திற்கு நிறைய இலவச விளம்பரம்கிடைத்துள்ளது. இதைப் பற்றிய டைம்ச் ஆர்டிகிள்
இங்கேhttp://www.time.com/time/magazine/article/0,9171,1223357,00.html http://www.time.com/time/nation/article/0,8599,1222126,00.html
http://cagle.msnbc.com/news/MelGibson/main.asp
அடுத்ததாக நம் ஷாருக்கான் இந்தியாவில் கோக் கிடைக்காவிட்டால்அமெரிக்கா போய் குடிப்பேன் என்கிறார். அந்த அளவுக்கா மனிதர்கோக்கிற்கு அடிமையாகி விட்டார்? இதை அவர் பேச வில்லை அவர்மூலமாக கோக கோலா நிறுவனம்தான் பேசுகிறது. இவர் கேட்பதுநம்மூர் குழாயில் வரும் நீர் பாதுகப்பானதா என்பது? நம் போலிகம்யூனிச்டுகள்வெளிநாட்டு கோலாவை எதிர்க்கும் அளவு கிராமத்து நீரை பாட்டிலில் அடைத்து நகரங்களில் விற்பதைகண்டுகொள்வதில்லை. உள்ளூர் ச்பிக் உர நிறுவனத்திற்கு எதிராக எந்த கம்யூனிச்டுகளும் போராடுவது போல தெரியவில்லை.குழாய் நீரின் பாதுகாப்பைப் பற்றியும்p;யாரும் கவலைப்படுவதில்லை. நீரை நஞ்சாக்கும் திருப்பூர்சாயப் பட்டறைகளிடம் கோடி கணக்கில் நஷ்ட ஈடு கேட்டுவழக்கு தொடர வேண்டும். கெமிகல் பூச்சி உரங்களை தடைசெய்துவிட்டு இயற்கை உரங்களை ஊக்குவிக்க வேண்டும்.
2 Comments:
ஷாருக்...விளம்பரம் பெப்ஸிக்கு! கோக் அமீர் கானின் பானகம்!!
Aa. thavarai suttiyadharku nandri.
pepsi endru maatri padiyungal.
Post a Comment
<< Home