ullal

Thursday, September 07, 2006

சமணம், செல்வன் - சில பதில்கள்

/..ஏற்பதை விட கழுவேறுவதே மேல் என கழுவில் ஏறிய சமண மதத்தாரை இன்று பாரதீய ஜனதா கட்சியினர் வந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு பகுத்தறிவு இயக்கத்தினர் கொண்டுவந்து விட்டுள்ளனர்.எங்கே சொல்லி அழ இந்த கொடுமையை?//

ஆடு கோழி வெட்டினால் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி தடைபோடுபவர்களுக்கு அம்மணமாக போவது மாடர்னிசமானது எப்படி?
அமெரிக்காவிலும் சமணர்கள் கோயில் வைத்திருக்கிறார்கள். நிர்வாணசமண சாமியார்கள் யாரும் இங்கு ஊர்வலம் போவதில்லை. அப்படி போனால் கைது செய்யப்படுவார்கள்.

//.உலகெங்கும் தனிமனித சுதந்திரத்தின் காவலனாக பகுத்தறிவு இயக்கங்கள் செயல்படும்போது தமிழ்நாட்டில் //
அறைக்குள் இருக்கும்வரைதான் தனிமனித சுதந்திரம். உன் சுதந்திரத்தைஎன்மீது திணிக்கும் போது அது வன்முறை. உலகமே free country என்றுசொல்லப்படும் அமெரிக்க நாட்டில் சுதந்திரமாக ரோட்டில் துணி இல்லாமல் போக முடியுமா? சுதந்திரமாக ரோட்டில் குப்பை போட முடியுமா? உங்கள் சொந்த வீட்டுகொல்லைப்புறத்தில் உங்கள் சொந்த துணியைக்கூட காய போட முடியாது. வீட்டிற்குசன்னலுக்கு துணி போட்டு மூடாமல் இருக்க முடியாது. தனி மனித சுதந்திரத்தின் எல்லை தன் வீட்டு கொல்லப்புறம் வரை கூட இல்லை.

அந்த காலத்து சாமியார்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். இவர்களும் தனியே ஒரு இடத்தில்நிர்வாணமாக வாழ்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கட்டும். அங்கு போக விரும்புவர்கள்போகட்டும்.

எனக்கு தெரிந்த ஒரு சமணப் பெண்மணி இங்கு மகளுக்கு பிரசவ ட்யூட்டிக்கு வந்தார்.இங்கு மருமகனை லேபர் வார்டில் அனுமதிப்பர்கள் என்று கேள்விப்பட்டு 'அட கண்றாவி,நான் லேபர் வார்டுக்கே போக மாட்டேன்' என்று சொன்னார். இவர் எப்படி சமணசாமியார்களை தரிசிப்பார் என்று யோசிக்கிறேன்.
இந்த சமண சாமியார்களை விட 'ஆயிரம்' மடங்கு ஆபாசமானது அண்ணாசாலையில்மெகா சைசில் உள்ள சினிமா போஸ்டர்களும், டிவி மூலம் குழந்தைகளை சென்று தாக்கும் ஆபாசசினிமா பாடல்களும். தி.க.காரர்கள் இவற்றிற்கு எதிராக போராட்டம் செய்து இந்த வன்முறையை ஒழிக்கட்டும்.
மார்வாடிகள் பின்பற்றும் சமணத்தைப் பற்றி...இவர்களுக்கு ஐந்து உறுதிகள் முக்கியமாக சொல்லப்படுகிறது.இதில் முதலாவது வன்முறையின்மை.நேரடியாக உயிர்கொல்லாமையை இவர்கள் பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். ஐந்தாவது உறுதியாக சொல்லும் அளவுக்கு மீறிய பொருள் சேர்க்காமை மார்வாடிகளுக்குபொருந்தவே பொருந்தாது. எல்லா மதத்தவர்களை போலவே மதப்பற்று என்பதே தங்களுக்கு வேண்டியதை மட்டும் மட்டையடியாக பின்பற்றும் big farce.

8 Comments:

At 6:21 PM, Blogger கருப்பு said...

ஆடுமாடுகளைப் போல அவிழ்த்துப் போட்டுத் திரிவதைத்தான் செல்வன் என்ற பார்ப்பன அடிவருடி ஆதரித்து எழுதி இருக்கிறார். அதற்கான எனது கண்டனத்தை தனிப்பதிவாகவே எழுதி இருக்கிறேன்.

 
At 6:58 PM, Anonymous Anonymous said...

// உங்கள் சொந்த வீட்டுகொல்லைப்புறத்தில் உங்கள் சொந்த துணியைக்கூட காய போட முடியாது. வீட்டிற்குசன்னலுக்கு துணி போட்டு மூடாமல் இருக்க முடியாது. //

I'm living in US for 5 years, and washing and drying clothes at home (even outside of my home) only - everyday.

90% of the time, I dont put screens at my home.

Dont create false impressions.

 
At 7:53 PM, Blogger arunagiri said...

"ஆடு கோழி வெட்டினால் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி தடைபோடுபவர்களுக்கு அம்மணமாக போவது மாடர்னிசமானது எப்படி?"

ஆடுகோழி வெட்டல் எங்கள் பாரம்பரிய நம்பிக்கை என போராடிய பகுத்தறிவு சிசுக்கள் இப்போது அடர்ந்த மவுனம் காப்பதுபோலத்தானோ என்னவோ இதுவும். மேலும் தடை போட்டது அம்மா திமுக; பாஜக அல்ல. (பாஜக தடை போட்டால் அதுவும் தவறுதான்).

"உலகமே free country என்றுசொல்லப்படும் அமெரிக்க நாட்டில் சுதந்திரமாக ரோட்டில் துணி இல்லாமல் போக முடியுமா?"

அமெரிக்காவில் பலதாரமணம் கூடாது; இந்தியாவில்? தலாக் தலாக் எல்லாம் முடியாது. இந்தியாவில்? விவாகரத்தானால் கணவன்- அவன் எந்த மதமாயிருப்பினும் ஜீவனாம்சம் தர வேண்டும். இந்தியாவில்?

எப்பொழுதிலிருந்தையா திராவிட கழக சிசுக்களுக்கு அமெரிக்கா ஆதர்சமானது? பொது சிவில் சட்டம் என்று ஒன்று உள்ளது அமெரிக்காவில் - அது சொல்கிறது பொது இடங்களில் எது சட்ட வரம்புக்குட்பட்டது எது உட்படாதது என்பதை. இந்தியாவின் "செக்யூலரிஸம்" பொது சிவில் சட்டத்தை அடிப்படையாகக் கொள்ளாதது. அவரவர் மதம் சொல்வது போல் பொதுவில் நடக்கலாம். நீங்கள் எப்படி முஸ்லீம்களை ஒருதாரத்துடன் நிறுத்து என கட்டாயப்படுத்த முடியாதோ அதே போல தன் மத நம்பிக்கைகளின்படி நடக்கும் திகம்பர துறவிகளையும் கட்டாயப்படுத்த முடியாது (அவர்கள் இவ்வாறு நடப்பது நள்ளிரவில்தான் ஆள்நடமாட்டக் குறைவு கருதி). அவர்கள் எந்த சட்ட மீறலையும் செய்யயவில்லை. மாறாக, அவர்களை எதிர்த்து அடாவடி பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள்தான் அவர்களது உரிமையைப்பறித்து சட்டவிரோதமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். நீங்கள் நியாப்படி இதைத்தான் கண்டித்திருக்க வேண்டும்.

திகம்பர துறவியர்களை எப்படி வழிபடுவது என்ற, ஜைனமத நம்பிக்கையாளர்கள் பட வேண்டிய அந்த கவலை, உங்களுக்கு ஏன்?

 
At 5:43 AM, Blogger aathirai said...

அருணகிரி,

//அவர்களது உரிமையைப்பறித்து சட்டவிரோதமாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
நீங்கள் நியாப்படி இதைத்தான் கண்டித்திருக்க வேண்டும் //

தமிழ்நாட்டில் ரோட்டில் நிர்வாணமாக திரிவது சட்டப்படி குற்றம். சட்டத்தை
மாற்றவேண்டுமென்றால் நீங்கள் சட்டசபையை அணுகவேண்டும்.

//ஆடுகோழி வெட்டல் எங்கள் பாரம்பரிய நம்பிக்கை என போராடிய பகுத்தறிவு சிசுக்கள் //
திக காரர்கள் இந்த தடை சட்டத்தை வரவேற்றார்கள். ஆனால் மக்கள் மத்தியில்தான் இது எடுபடவில்லை.

அமெரிக்காவை இழுத்தற்கு காரணம் சிலர் தனி மனித உரிமையையும்,பொது
இட நடைமுறையையும் வேண்டுமென்றே குழப்பி எழுதுவதால்தான். தனிமனித உரிமையின் எல்லை நாலு சுவருக்குள் மட்டுமே.

முல்லாவின் தாடியும், தலாக்கும் பொதுமக்களை ரோதனை செய்தால் மாற்ற வேண்டியதுதான்.

 
At 5:43 AM, Blogger aathirai said...

//I'm living in US for 5 years, and washing and
drying clothes at home (even outside of my home)
only - everyday. //

நீங்கள் கொடுத்து வைத்தவர். நான் இருக்கும் இடத்தில் என் வீட்டிற்கு வெளியே
எனக்கு பிடித்த முட்டாய் பின்க் கலரில் பெயிண்ட் அடிக்க பக்கத்து வீட்டுக்காரர்களின்
அனுமதி வாங்க வேண்டுமாம். நிச்சயம் அனுமதி கிடைக்காது.

இதற்கும் பொது சிவில் சட்டத்திற்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. சமூக
விலங்காக வாழ்வதற்கு சக மனிதர்களிடம் செய்து கொள்ளும் விட்டுக்கொடுத்தல்.
ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்வது இதுதான்.
இது பிடிக்காவிட்டால் வேறு இடம் பார்க்க வேண்டியதுதான்.

பஸ்ஸில், ரயிலில் no smoking என்று போட்டிருக்கிறார்களே, தனி மனித உரிமையுடன்
ஏன் புகை பிடிக்கக்கூடாது என்று கேட்பீர்களோ?

 
At 6:14 AM, Blogger aathirai said...

//திகம்பர துறவியர்களை எப்படி வழிபடுவது என்ற, ஜைனமத நம்பிக்கையாளர்கள் பட வேண்டிய அந்த கவலை, உங்களுக்கு ஏன்?
//

அந்த பெண்மணியைப் பற்றி எழுதியதும் உதாரணத்துக்காகதான். இது போல
பல பெண்மணிகள் உள்ள நாட்டில் ரோட்டில் இப்படி நடமாடுவதை ஏற்க முடியுமா?

 
At 11:09 AM, Blogger arunagiri said...

"அமெரிக்காவை இழுத்தற்கு காரணம் சிலர் தனி மனித உரிமையையும்,பொது
இட நடைமுறையையும் வேண்டுமென்றே குழப்பி எழுதுவதால்தான். தனிமனித உரிமையின் எல்லை நாலு சுவருக்குள் மட்டுமே".

இது தனி மனித உரிமை என்பதை விட, அவர்கள் மதத்தை அவர்கள் பிறருக்கு ஆகக்கூடிய அளவில் குறைந்த அளவு தொல்லையுடன் கடைப்பிடிக்க நம் சட்டத்திலும் அரசியல் அமைப்பிலும் உரிமையுண்டு என்ற அடிப்படையிலேயே சொன்னேன்.

"முல்லாவின் தாடியும், தலாக்கும் பொதுமக்களை ரோதனை செய்தால் மாற்ற வேண்டியதுதான்".

மதிய வேளையில் தெருக்களில் பயங்கர ட்ராபிக் ஜாம் உருவாக்கி விட்டு அது பற்றி ஒரு கவலையுமின்றி போட்டத்து போட்டபடி நடு ரோடில் மண்டியிட்டு ஏக இறைவனைத்தொழுகின்ற வழக்கத்தை எதிர்த்து நீங்கள் எதுவும் பதிவு போட்டதாகத் தெரியவில்லை; என்றோ ஒருநாள் நள்ளிரவில் ஜன சந்தடி அடங்கியதும் தெருவில் நடக்கும் சமணத் துறவிகளைப்பற்றி எழுத வந்து விட்டீர்கள். கடைந்தெடுத்த முற்போக்குதான் போங்கள்.

 
At 12:01 PM, Blogger aathirai said...

இப்படி ஒரு டிராபிக் ஜாமை இது வரை நான் பார்த்ததில்லை.
நீங்கள் பார்த்திருந்தால் எழுதுங்களேன்.

 

Post a Comment

<< Home