ullal

Monday, September 11, 2006

(IT) ஐ.டி. யில் விபச்சாரம்

டெலிமார்க்கெடிங்க் பற்றிய பதிவில் திரு டோண்டுவும் , மற்றொருவரும்இதை விபச்சாரம் என்று சொல்லி நிறைய எதிர்வினை பதிவுகள் வந்தது. இது அதைப் போல இல்லை. the real deal.

எனக்கு வரும் டெலி மார்க்கெடிங்க் அழைப்புகளில் சரி பாதி ஆண்களும்,பெண்களும் அழைக்கிறார்கள். இப்படி ஒரு ஐடியா இவர்களுக்கு எப்படி வந்தது என்று வியந்துக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே இப்படி ஒரு சிந்தனை நம் ஊரில் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிந்தது.

இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக வரக்கூடிய ஒரு பிரபலஐ.டி. கம்பெனியில் என் கணவர் வேலை செய்கிறார். இவர்களுடைய தில்லி கிளையின் ஒரு பார்ட்டி போட்டோவை காண நேர்ந்தது. இவர்களுடைய அமெரிக்க கஸ்டமர், அவருக்கு இரண்டு புறமும் அறைகுறை உடையுடன் இரண்டு பெண்கள். ஜாலியாக அவர்கள்மீது கை போட்டுக்கொண்டு காட்சி தருகிறார். (அமெரிக்க மனைவிக்குபோட்டாவா கிடைக்க போகிறது?) இவர்கள் தொழில் முறையில் இப்படி கம்பெனி கொடுப்பவர்களாம். இந்த வேலைக்கு ஐ.டி நிறுவனமே இந்த பெண்களுக்கு பணம் கொடுக்கிறது. இதற்கு பெயர் என்ன?

இந்தியாவில் ஐடி நிறுவன வலைப்பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுவரை யாரும் இது பற்றி பதிவு செய்யவில்லை. எல்லா நிறுவனங்களிலும் இது வழக்கமா, அல்லது இது தில்லி ஸ்பெஷலா ?

28 Comments:

At 8:38 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

என் அனுபவத்தில் இதுபோல கேள்விப் பட்டதில்லை. அதிகபட்சமாக சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உண்டு.

வரும் வெளிநாட்டவரின் நாட்டத்தைப் பொறுத்து நம் வரவேற்பு(!!) அமையலாம். வியாபாரத்திற்காக எதையும் செய்வார்கள் நம்மவர்கள் என்பதை மறுக்க இயலாது.

 
At 8:42 AM, Blogger aathirai said...

சிறில்,
நான் பார்த்தவரை அதிகபட்சம் மகாபலிபுரத்திற்கு போக கார் கொடுப்பார்கள்.
இப்பொழுது இந்தியா முன்னேறிவிட்டது போலிருக்கு.

 
At 9:03 AM, Blogger dondu(#11168674346665545885) said...

"டெலிமார்க்கெடிங்க் பற்றிய பதிவில் திரு டோண்டுவும் , மற்றொருவரும் இதை..."
டோண்டு மாமாவே பாந்தமாகத்தானே இருந்தது! :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

பை தி வே நீங்கள் சங்கராச்சாரியார் கைது போது ஒரு கற்பனை உரையாடல் கொடுத்திருந்தீர்கள். ப்ளாக்மெயிலரின் பட்டுப் புடவை விவரத்தை ஒரு மாமி கேட்க, இன்னொரு மாமி அதை மெனக்கெட்டு விவரித்த கற்பனையை நான் மிகவும் ரசித்தேன். அப்பதிவை இப்போது கண்டுபிடிக்க முடியவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 9:17 AM, Blogger Thekkikattan|தெகா said...

:-) 8%GDP.

நான் ஒரு முறை 82 வயது மதிக்கத்தக்க அமெரிக்கத் தாத்தாவை (அவரு தாத்தாவா?) இந்தியா அழைத்துச் சென்றேன். ஆனால், அவர் நினைத்து வந்த இந்தியா, தாய்லாந்த் இந்தியா... ஆனால் எனக்கு அந்தப் பக்க இந்தியா எனக்குத் தெரியாததால் மிகவும் வருத்தமுற்றார்.

பிறகு இதனைப் பற்றி ஒரு பதிவு போடுகிறேன்...

 
At 9:31 AM, Blogger குமரன் (Kumaran) said...

ஆதிரை. நான் எட்டு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்த இந்திய மென்பொருள் நிறுவனத்தில் இப்படி எல்லாம் நடந்ததில்லை. எத்தனையோ வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வந்திருக்கிறார்கள். வார இறுதியில் ஊர் சுற்றிக் காட்டியிருக்கிறோம். ஆனால் நீங்கள் சொல்வது போல் நடந்ததில்லை. நடந்ததாகவும் கேள்விப் பட்டதில்லை.

நீங்கள் சொல்லும் வழக்கம் ஏதோ ஓரிரு நிறுவனங்களில் நடப்பதாக இருக்கலாம். அதனால் எல்லா மென்பொருள் நிறுவனங்களும் அப்படித் தான் என்று சொல்ல முடியாது. இல்லையா?

 
At 11:06 AM, Blogger aathirai said...

//பை தி வே நீங்கள் சங்கராச்சாரியார் கைது போது ஒரு கற்பனை உரையாடல் கொடுத்திருந்தீர்கள். ப்ளாக்மெயிலரின் பட்டுப் புடவை விவரத்தை ஒரு மாமி கேட்க, இன்னொரு மாமி அதை மெனக்கெட்டு விவரித்த கற்பனையை நான் மிகவும் ரசித்தேன். அப்பதிவை இப்போது கண்டுபிடிக்க முடியவில்லையே?//

athai romba naal munbe delete panni vitten.

 
At 11:07 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

அம்மணி,

டெலிமார்க்கெடிங்க் பற்றிய பதிவில் திரு டோண்டுவும் , மற்றொருவரும்இதை விபச்சாரம்

நீங்கள் முதலில் இந்த விஷயத்தை டோண்டு அவர்களின் பதிவில் நேரடியாகப் படித்துத் தெரிந்துகொண்டீர்களா, அல்லது இது பற்றி அரைகுறையாகப் புரிந்துகொண்ட வலைப்பதிவு ஞானிகளின் பதிவில் டோண்டு, மற்றும் அந்த மற்றொருவர் கொடுத்திருந்த பதில்களைப் படித்துத் தெரிந்து கொண்டீர்களா, அல்லது மற்றவர்கள் எழுதியதை மட்டும் படித்துவிட்டு சொல்லுகிறீர்களா என்று தெரியவில்லை.

அந்த "மற்றொருவர்" நானாக இருக்கலாம் என்பதால் இந்த பதிலை இடுகிறேன்.

மதிப்பிற்குரிய டோண்டு அவர்களும், நானும் டெலிமார்க்கெட்டிங் செய்யும் பெண்கள் விபச்சாரிகள் என்று சொல்லவேயில்லை. முட்டாள்தனமாய் புரிந்துகொண்டோ, அல்லது கீழான கொள்கைகளின் பாதிப்பாலோ அப்படி அது திரிக்கப்பட்டது.

டெலிமார்க்கெட்டிங்கில் பெண்களை பயன்படுத்தும் யுக்தியைத்தான் ஒருவகை விபச்சாரம் என்று நாங்கள் கூறியிருந்தோம்.

இந்த யுக்திக்கும், ஆனந்தவிகடகுங்குமகுமுதராணி பத்திரிக்கையில் எப்போதும் அட்டைப்படங்களில் பெண்களைப்போடுவதும், உள்ளே கல்லூரி மாணவிகளின் படங்களைப்போடுகிற யுக்திக்கும், பெண்களை காமப்பொருளாய் பயன்படுத்துகிற, அறிமுகப்படுத்துகிற யுக்திகளுக்கும் வித்யாஸம் இல்லை. இதுவே என் கருத்து.

மற்றவர்களின் கருத்தை உள்வாங்கும் முன் அது எந்த அளவு உண்மையானது என்பதை தெரிந்துகொள்ளும் அவா உங்களுக்கு உண்டு என்று நான் கருதுவதால் இதை பின்னூட்டுகிறேன்.

 
At 11:07 AM, Blogger aathirai said...

//என் கணவர் //
ஆமாம், உங்கள் பாலினம் பெண்?

அப்படியும்,
//விபச்சாரம்//
இந்த வார்த்தையை சுய பிரக்ஞையுடனே தான் பயன் படுத்தினீர்களா?

வேறு எந்த வார்த்தையும் இங்கு பெருந்தும் என்று தோன்றவில்லை.

 
At 11:09 AM, Blogger aathirai said...

//ஆதிரை. நான் எட்டு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்த இந்திய மென்பொருள் நிறுவனத்தில் இப்படி எல்லாம் நடந்ததில்லை. எத்தனையோ வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வந்திருக்கிறார்கள். வார இறுதியில் ஊர் சுற்றிக் காட்டியிருக்கிறோம். ஆனால் நீங்கள் சொல்வது போல் நடந்ததில்லை. நடந்ததாகவும் கேள்விப் பட்டதில்லை. //

நானும் சென்னையில் பார்த்ததில்லை. இது உண்மையிலேயே
அதிர்ச்சியாகவே இருந்தது.

 
At 11:30 AM, Blogger aathirai said...

ம்யூஸ்,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. டெலிமார்க்கெடிங்கில் பெண்கள்
அதிகம் இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இங்கு
அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதியும் இருக்கிறது.
மற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை. ஏராளமாக ஆண்களும்
இந்த வேலையை செய்கிறார்கள்.

டீச்சர் வேலையை போல சில வேலைகள் பெண்களுக்கு பிடித்து போகிறது.
இங்கு குழந்தைகள் காப்பகத்தில் ஆண்கள் வேலை செய்கிறார்கள். இந்தியாவில்
இந்த வேலைக்கு ஆண்கள் போகவே மாட்டார்கள். ஒரு துறையில்
பெண்கள் அதிகமாக இருப்பதற்கு இப்படி நிறைய காரணங்கள் இருக்கலாம்.

 
At 11:43 AM, Blogger கால்கரி சிவா said...

ஆதிரை,

இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இது ஆண்டாண்டு காலமாக சாப்ட்வேர் கம்பெனிகள் தோன்றுவதற்கு முன்னேமேயே கார்பரேட் விபசாரம் உண்டு. இதில் வெள்ளைக்காரர்கள் மட்டுமில்லை நம்மூர்காரர்களும் கில்லாடிகள்தான். இந்தியாவில் இந்த மாதிரி கார்பரேட் விபசாரிகள் அதிகம் இருப்பது நம் தலைநகர் டெல்லியில் தான்.

நம்மூர்காரர்கள் கமுக்கமாக் செயவார்கள் . வெள்ளை காரர்கள் ஆர்பாட்டம் செய்வார்கள்.

என்னுடைய அனுபவத்தில் சபலிஸ்ட் நெ-1 ஜப்பானியர்கள் அடுத்து யார் என்று சொன்னால் என் மீது பாய ஒரு கூட்டம் தயாரக இருக்கும் அதனால் சொல்லவில்லை

 
At 11:59 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

ஆதிரை,

இங்கு
அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதியும் இருக்கிறது.


இருக்கலாம் என்று தோன்றுகின்றது. நேற்றுத்தான் ஒரு டெலிமார்க்கெட்டிங் பெண்மணியிடமிருந்து ஒரு கால் வந்தது. பக்கத்தில் வந்த ஒரு தமிழ் நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு மீண்டும் அந்தப் பெண்மணியுடன் பேச ஆரம்பித்தேன். அந்த பெண்ணும் தமிழ் பெண்தான். ஐஸிஐஸி பேங்கிற்காக டெலிமார்க்கெட்டிங் செய்கிறார். அவரிடம் விளக்கம் கேட்க எண்ணி இந்த தொழிலில் யாரேனும் ஆண்கள் உங்களோடு வேலை செய்கிறார்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்.

இந்த வேலை கிடைப்பதற்கு என்ன குவாலிஃபிக்கேஷன் தேவை என்று கேட்டதற்கு, பத்தாம் வகுப்பே போதும் ஸார், கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ்தான் முக்கியம். மற்றபடி படிப்பிற்கு இதற்கும் ஸம்பந்தமில்லை என்றார்.

வீட்டிலிருந்துகொண்டே செய்யலாமா என்றதற்கு இல்லை ஸார் இங்கே அலுவலகத்தில் வந்துதான் வேலை செய்கிறேன் என்றார்.

என்னவகை சம்பளம் என்று கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால் ஒரு மாதத்திற்கு 50 ஆட்கள் பிடிக்கவேண்டியது அவரது டார்கெட் என்றார். இந்த 50 பேரை பிடிக்கத்தான் பாவம் இவர்கள் நாயாய் உழைக்கிறார்கள். இவர்களிடம் பேசுபவர்கள் பெரும்பாலும் எரிந்து விழுவதைத்தான் நான் காண்கிறேன்.

அவர்களுக்குப் பழகிப்போயிருக்கும். பார்க்கும் எனக்குத்தான் வருத்தமாயிருக்கிறது.

தாங்கள் டெல்லியில் இருக்கிறீர்களா?

 
At 12:14 PM, Blogger கால்கரி சிவா said...

வணக்கத்துடன், சாரி அந்த சொல்லை பாலியல் தொழிலாளர்கள் அல்லது Escorts என வைத்துக் கொள்ளலாம்.

என் அனுபவத்தில் பஹ்ரைன் என்ற அரபு நாட்டில் ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் கூச்சமின்றி கேட்டார்கள் "சார் உங்களுக்கு ஆண் அல்லது பெண் Escorts வேண்டுமா?" என்று

அரேபியர்கள் என்பது மிக சரி. பிஸினஸ் கிடைக்க அரேபிய பெண்ணுக்கு பாரிஸ் நகரில் ஆண் Escorts களை ஏற்பாடு செய்த நண்பரையும் அறிவேன்

 
At 12:14 PM, Blogger கால்கரி சிவா said...

வணக்கத்துடன், சாரி அந்த சொல்லை பாலியல் தொழிலாளர்கள் அல்லது Escorts என வைத்துக் கொள்ளலாம்.

என் அனுபவத்தில் பஹ்ரைன் என்ற அரபு நாட்டில் ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் கூச்சமின்றி கேட்டார்கள் "சார் உங்களுக்கு ஆண் அல்லது பெண் Escorts வேண்டுமா?" என்று

அரேபியர்கள் என்பது மிக சரி. பிஸினஸ் கிடைக்க அரேபிய பெண்ணுக்கு பாரிஸ் நகரில் ஆண் Escorts களை ஏற்பாடு செய்த நண்பரையும் அறிவேன்

 
At 6:13 PM, Blogger கருப்பு said...

நல்ல பதிவு ஆதிரை.

டெலிமார்க்கெட்டிங்கை விபச்சாரம் என்று சொன்ன பாப்பார இழி ஜென்மங்கள் இங்கும் வந்து கும்மியடிப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!

 
At 4:14 AM, Anonymous Anonymous said...

ஆதிரை,

நான் 14 வருடங்களாக நீங்க சொல்லும் டாப் 5 கம்பெனிகளில், 3ல் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன்....மென்பொருள் துறையில் இது இல்லை....வடக்கத்திய கலாசாரம் இது..இப்போ வடக்கத்திய மென்பொருள் துறையில் கால் பதித்து உள்ளது போல....

இன்றைய சுழலில் முதல் 4 கம்பெனிகளில் இது இல்லை என்பதை என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்

 
At 5:15 AM, Blogger யாத்ரீகன் said...

இப்படியும் நடக்குமா.. நான் பார்த்த கேள்விப்பட்ட வரையிலும் க்ளையன்ட் முடிந்த வரை தூரம் மெயின்டெயினே செய்வார்கள்...

கேட்க கேவலாமாய் உள்ளது...

 
At 5:18 AM, Anonymous Anonymous said...

இதுக்கு ஒரே முடிவா பொண்ணுங்க வேலைக்கு வரக்கூடாதுனு சட்டம் போட சொல்வோமா?.....

 
At 6:33 AM, Blogger aathirai said...

ம்யூஸ்,
இந்தியாவிலும் நிறைய ஆண்கள் டெலிமார்கெடிங்க்
செய்துகொண்டுதானிருக்கிறார்கள்.

ஒரு பெண் எம்.பி.ஏ படித்து மார்க்கெடிங்க் மேனேஜராக
வேலை செய்தாலும் இந்த லாஜிக் செல்லுமா?

பத்திரிகைகளை பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரி.இணைய
பத்திரிகைகளில் கூட இந்திய பத்திரிகைகளை browse செய்யும்போது வரும் விளம்பரங்களை பார்த்தாலே
தெரிகிறது.

 
At 6:37 AM, Blogger aathirai said...

//இதுக்கு ஒரே முடிவா பொண்ணுங்க வேலைக்கு வரக்கூடாதுனு சட்டம் போட சொல்வோமா?..... //
விரிவாக எழுதுங்கள். மொட்டையாக எழுதினால் குழப்புகிறது.

 
At 7:11 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ஆதிரை,
நான் வேலை செய்த நிறுவனங்களிலும் இதுவரை இப்படி எதுவும் கேள்விப்பட்டதில்லை. சென்னை மற்றும் தென்னிந்தியாவிற்கு இந்தக் கலாச்சாரம்(?!) வரவில்லை என்றே நினைக்கிறேன். வராமலே இருக்கட்டும்..

ம்யூஸ்,
ஒரே ஒரு ஐசிஐசிஐ நிறுவனப் பெண்ணிடம் பேசிவிட்டு நீங்கள் உங்கள் கருத்துக்கு வலிமை சேர்ப்பது போல் மீண்டும் மீண்டும் பேசுவது மிகவும் சிரிப்பாகத் தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து வீட்டிலிருந்து டெலிமார்க்கெட்டிங் செய்பவர்களைப் பற்றி நாணயம் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் படித்த நினைவு. கல்லூரி மாணவிகள் பார்ட் டைமாக இப்படி ஒரு நாளைக்கு நான்கு தொலைபேசி அழைப்பு என்ற ரீதியில் கூட டெலிமார்க்கெட்டிங் செய்வதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஏனோ நீங்கள் பத்திரிக்கைகளின் அட்டையில் வரும் பெண்களையும் தொலைபேசி அழைப்புகளையும் ஒப்பிடுவது சரியாகத் தோன்றவில்லை..

பெண்களுக்கு வசதியான இந்த மாதிரி வேலைகளுக்கு விபச்சாரச் சாயம் பூசாமல் இருந்தால், இப்படிப்பட்ட பகுதி நேர வேலைகள் இந்தியாவிலும் பெருகும். படிக்கும் காலத்திலேயே பணத்தின் அருமையை அறிந்து கொள்ளவும், நடைமுறை அறிவைப் பெறவும் நமது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 
At 7:41 AM, Blogger கால்கரி சிவா said...

//கயமையை வெளிப்படையாக சுட்ட, உங்களை போன்றோரே தயங்கும் காரணம் தான் எனக்கு புரிய மாட்டேங்குது.
//

வணக்கத்துடன், தயக்கம் எல்லாம் ஒன்றுமில்லை ஒரு பில்டப் தான்.

இந்த தொழில் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்துள்ளது என்பது உண்மை

ஆந்திராவின் பெத்தாபுடம் பற்றிய கேள்வி ஞானமுண்டு விவரங்களை தனிப்பதிவாக இட்டால் நன்றாக இருக்கும்.


//நான் 14 வருடங்களாக நீங்க சொல்லும் டாப் 5 கம்பெனிகளில், 3ல் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன்....மென்பொருள் துறையில் இது இல்லை....வடக்கத்திய கலாசாரம் இது..இப்போ வடக்கத்திய மென்பொருள் துறையில் கால் பதித்து உள்ளது போல....
//

அனானிமஸ், உண்மை ஆரம்ப காலத்திலி மென்பொருள் கணிணி சமாச்சாரங்கள் ஒரு விஞ்ஞான துறையாகவும் அதில் வேலை பார்பவர்கள் விஞ்ஞானிகளாகவும் இருந்தனர். அப்போது புதிய படைப்புகள்/யோசனைகள்/திறமை ஆகியவை மட்டும் பாரட்ட்பட்டன.

எப்போது அது லாபம் தரும் தொழிலாக மாறியதோ அப்போதே கயமைகள் ஆரம்பித்துவிட்டன.

வியாபாரத்திற்கும் லாபத்திற்கும் எதையும் செய்ய துணிவதில் அதிக பட்சமாக இருப்பவர்கள் வடக்கத்தியரே.

ஆனால் பணம், மது, மாது போன்றவைகளை காட்டி வியாபாரம் செய்வது ஒன்றும் புதிதில்லை. இதில் வடக்கத்தியர்கள் கெட்டிக்காரர்கள்

 
At 7:46 AM, Blogger கால்கரி சிவா said...

//நான் வேலை செய்த நிறுவனங்களிலும் இதுவரை இப்படி எதுவும் கேள்விப்பட்டதில்லை. சென்னை மற்றும் தென்னிந்தியாவிற்கு இந்தக் கலாச்சாரம்(?!) வரவில்லை என்றே நினைக்கிறேன். வராமலே இருக்கட்டும்..
//

பொன்ஸ், உங்களை போல் டெக்னிகல் துறையில் உள்ளவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

கோடிக்கணக்கான டாலர்களின் ஆர்டர்களை கம்பெனி முதலாளிகள் முடிவு செய்யும் போதும் இதற்கு வாய்ப்பில்லை.

ஆனால் இந்த மிடில் மானேஜ்மெண்ட் இருக்கிறார்களே அவர்களுக்குள்தான் இந்த பரிமாற்றங்கள் நடக்கின்றன.

முக்கியமாக அரசாங்க அதிகாரிகள்...மிகப்பெரிய கம்பெனிகளில் வேலைபார்ர்கும் சபலிஸ்ட் மானேஜர்கள் தான் இந்த கருப்பு ஆடுகள். இவர்களால்தான் Ethics என்ற டிபார்ட்மெண்ட்டின் வேலை அதிகமாகிறது

 
At 7:47 AM, Blogger ஜடாயு said...

ஆதிரை,

இது போன்ற விஷயங்கள் பெங்களூரிலும் நடக்கின்றன, ஆனால் I.T அல்லாத மற்றவகை பிஸினஸ்களில் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி படித்திருக்கிறேன். வெளிநாட்டு கம்பெனிக்கு ஏஜென்ஸி பிடிப்பது போன்ற விஷயங்களில் போட்டி அதிகம்.

நல்ல வேளை, இப்படியெல்லாம் செய்து பிஸினஸ் பிடிக்கும் நிலையில் இந்திய ஐ.டி. துறை இல்லை என்பது

இந்தத் தொழிலுக்கு escort services என்று பெயரே இருக்கிறது. நல்ல காசு வரும் தொழில் என்றும் டைம்ஸ் செய்தி சொன்னதாக நினைவு.

 
At 7:57 AM, Blogger nayanan said...

இதை விபச்சாரம் என்று சொல்வது அதிகம்.
ஆனால், நம்மவர்கள் சிலரிடம் ஒரு குணம் உண்டு.

அதிகாரம் உள்ளவர்களிடம் சற்று சரளமாகத்
தன்னைக் காட்டிக் கொள்ளும் மனஓட்டம்
உண்டு.

இதில் ஆடவர் மகளிர் என்ற வேறுபாடு கிடையாது.

பெரிய அதிகாரியோடு, அல்லது வெள்ளைக்கார வாடிக்கையாளரோடு
மனமகிழ் நிகழ்வுகளில் பங்கேற்கும் போது,
சிலர் காட்டுகின்ற "இயல்பின் திரிபு" என்று
சொல்லலாம்.

புகையே பிடிக்க மாட்டார் ஒருவர்; ஆனால்
வாடிக்கையாளர் பிடித்தால் அன்று மட்டும்
பிடித்து "yeah-i too" என்று காட்டிக்
கொள்வார்கள்.

அசைவம் உண்ணமாட்டார்கள். ஆனால்
அப்பொழுது மட்டும்! அதேபோல, தண்ணி!

இதிலும் ஆடவர் மகளிர் வேறுபாடு கிடையாது.

வாடிக்கையாளர் குறிப்பாக வெள்ளைக்காரராக இருந்து விட்டால்,
அவரிடம் தாங்களும் அவர்களைப் போல
சரளமானவர்கள் என்று காட்டிக் கொள்ள
நிகழ்த்தும் "வெறுவிளையாடல்கள்" வகையைச் சேர்ந்தவை இவை.

"கான மயிலாட...." இரகம்.

-நாக.இளங்கோவன்

 
At 9:42 AM, Blogger aathirai said...

நாக இளங்கோவன்,
நீங்கள் நிறுவனத்தில் பணி புரிபவர்களை இதில் போட்டு
குழப்பாதீர்கள். இது professionalகளை பணத்துக்கு hire
செய்வது பற்றியது.

 
At 2:57 AM, Blogger கார்த்திக் பிரபு said...

inum niraya kodumaigal nadakkum it companies la..'dj' nu sollittu pasangalum ponnugalum unarccipoorvamaa aaduvanga(unmaiyil adhu dance illai summma kudhipaaragl)..

treat nnu sollitu innum niraya koothadippaanga...nama ooruku kettu pochupa

 
At 7:40 AM, Anonymous Anonymous said...

அட போங்கப்பா, இந்த இந்திய கலாச்சாரம்னு யாராவது பேசினா சிரிப்புதான்யா வருது.. (hypocrite).

 

Post a Comment

<< Home