ullal

Wednesday, October 11, 2006

விஜயகாந்த் கள்ளுக்கடை,பொதுச் சேவை...

நம்ம விஜயகாந்த் ஓய்வு நேரத்தில் அறையை சுத்தம் பண்ணி பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உதவியாளர் வருகிறார்.

வி.கா. - டே, எங்கடா போனே ? பாத்ரூம் கழுவி ஒரு மாசமாச்சுன்னு அண்ணி ஒரே சத்தம் போடுது.

உதவி - பெனாயில் வாங்க போனண்ணே.

வி.கா. - முட்டாள். (உதவியாளரை ஒரு அறை விடுகிறார்.)
நான் எப்பவும் ஹார்பிக் ப்ராண்ட் தான்னு தெரியாது?

உதவி - ஹார்பிக் ஸ்டாக் இல்லையாம். இதுதான் கெடச்சுது.

வி.கா. - அது சரி. ஊருக்குள்ள என் பொது சேவையை பத்தி என்ன பேசறாங்க?

உதவி - சொன்னா அடிக்க மாட்டீங்களே ?

வி.கா. - அடிக்கல சொல்லு.

உதவி - சுனாமி அடிச்சப்ப எங்க போயிருந்தீங்கன்னு கேக்கறாங்கண்ணே.

வி.கா. - டே, அப்ப நான் கிராமத்து பொருளாதாரத்த எப்படி முன்னேத்தறதுன்னு பலமா யோசிச்சுட்டு இருந்தேன்னு சொன்னியா?

உதவி - எப்படிண்ணே கிராமத்த முன்னேத்தப் போறீங்க?

வி.க.- விருத்தாச்சலத்துல முந்திரி பீர் தயாரிக்கலாம். மச்சான் காசோட ரெடியா இருக்கான்.

உதவி - அப்புறம்?

வி.கா - கள்ளுக்கடைய தெறந்துடலாம்.

உதவி - அது தப்பில்லையா? நெறைய குடும்பம் நாசமாயிடும்னு சொல்றாங்க.

வி.கா. - ப்ராந்தி வித்த காசு ஒரு சிலரிடம் கோடி கோடியா குவியுது. கள்ளுக்கடை தொறந்தா கிராமம் முன்னேறும்னு நான்மட்டும் இல்லடா நம்ம ஆடிட்டர் குருமூர்த்திகூட சொல்றார்.

உதவி - நான் ஒரு யோசனை சொல்லட்டா?

வி.கா.- என்ன யோசனை?

உதவி - கிராமத்து காசு நம்ம கோலிவுட்டுல சிலர் கிட்டகோடி கோடியா குவியுது.

வி.கா. - அதுனால?

உதவி - கோலிலிவுட்ட மூடிட்டு, பொய்கால்குதிரை, தெருக்கூத்து போல கிராமத்து நாட்டுப்புற கலைகளை வளக்கலாம்.

வி.கா.- உன்னயெல்லாம் உதவியாளனா வெச்சிருக்கனே, என்ன சொல்லணும்டா. அடிச்சு தொவக்கறதுக்கு முன்னே நீயா ஓடிடு .

உதவியாளர் ஓடிவிட்டார்.

16 Comments:

At 8:43 AM, Blogger VSK said...

நீ பீயள்ளத் தயாரா என சவடால் விடுவது, சரி வருகிறேன் என்றால் அவரை எள்ளுவது இதுவே ஒரு சிலருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.

சமூக மாற்றங்கள் வந்துவிடக் கூடாது, வந்தால் நம் பவிசு வெளுத்துவிடும் என்பதில் மிகவும் தீவிரமாயிருப்பவர்கள் இவரே!

இல்லையெனில், வரவேற்றுப் பாராட்ட வேண்டிய ஒன்று ஏளனம் செய்யப் படுமா?

என்னமோ போங்க!

 
At 8:45 AM, Blogger குழலி / Kuzhali said...

ஹா ஹா........

 
At 9:31 AM, Blogger aathirai said...

என்ன செய்யறது எஸ்கே? இருப்பவர்களிலே இவர்தானே
நிறைய காமெடி supply பண்றார் !

//நீ பீயள்ளத் தயாரா என சவடால் விடுவது, சரி வருகிறேன் என்றால் அவரை எள்ளுவது //
நெசமா அவர் அள்ளும்போது என் பதிவை வாபஸ்
வாங்கறேன்.

 
At 9:44 AM, Blogger VSK said...

என் கருத்தை நேராகக் கொன்டு, செய்யட்டும், வாபஸ் வாங்குகிறேன் பதிவை என்று சொன்ன உங்கள் நேர்மைக்குத் த்லை வணங்குகிறேன்,
இப்படிச் சொன்னதற்கே பாராட்டலாமே!
:)

இன்னொரு தகவல்!
தரம், அந்தஸ்து பார்க்காமல் கக்கூஸ் சுத்தம் செய்யப்படும் இடம் இன்றும் எது தெரியுமா?

புட்டபர்த்தி!

தினம் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாநிலத்தாராலும் நடக்கிறது இது!

மாற்றங்கள் மனதினின்று தோன்றவேண்டும், அன்பின் மூலம்.

நன்றி.

 
At 9:56 AM, Blogger bala said...

//உதவி - கோலிலிவுட்ட மூடிட்டு, பொய்கால்குதிரை, தெருக்கூத்து போல கிராமத்து நாட்டுப்புற கலைகளை வளக்கலாம்//

ஆத்திரை அய்யா,

நீங்க சொல்றது சரியிலைங்க அய்யா..
கள்ளு வித்தா 50 லட்சம் பேரும் அவிங்க மூலமா இன்னும் 1 கோடி பேரும் பிழைக்க முடியும்னு நம்ம கேப்டன் ஆதார பூர்வமா சொல்றாரு..
கிராமத்து கலைஞர்கள் அவ்வளவு பேர் இல்லீங்க அய்யா..
இன்னும் ஒண்ணு அந்த கலைகளை யாரும் இப்பொ ரசிக்க மாட்டாங்க..

ஆனா மக்கள் கள்ளு இன்னும் விரும்பி குடிக்கறாங்கன்னு சொல்றாங்க..

நம்ம பார் டென்டர் அய்யா வேலை போகப்போவுது..பாவம்
அவரும் ஒடுக்கப்பட்டவர் ஆகி நம்ம அசுரன் கிட்ட போனா துப்பாக்கியை கையிலே கொடுத்து சட்டீஸ்கர் பக்கம் வேலைக்கு அனுப்பிவைப்பாங்க.

பாலா

 
At 10:10 AM, Blogger aathirai said...

//நீங்க சொல்றது சரியிலைங்க அய்யா..
கள்ளு வித்தா 50 லட்சம் பேரும் அவிங்க மூலமா
இன்னும் 1 கோடி பேரும் பிழைக்க முடியும்னு
நம்ம கேப்டன் ஆதார பூர்வமா சொல்றாரு..//
அய்யா இல்ல. அம்மா.

தென்ன மரத்துல எத்தனையோ பொருட்கள் செய்யலாம்.
கள்ளுதான் செய்யணுமா? என்றன்றைக்கும் உருப்படாமல்
இருக்க இது தான் நல்ல வழி.

சினிமா சூட்டிங் வாடகையை குறைக்கணும்னு
அம்மாகிட்ட இவர்தானே மனு கொடுத்தார். பொது மக்களின்
மேல அக்கறை இருந்தால் அரசுக்கு அதிக வாடகை கொடுக்கலாமே.

 
At 10:11 AM, Blogger aathirai said...

அம்மாவும் தயாரிப்பு செலவு குறைக்க உங்க சம்பளத்தை கொறைச்சுக்கோங்கன்னு நெத்தியடியா அடிச்சதா கேள்வி.

 
At 10:45 AM, Blogger bala said...

//அய்யா இல்ல. அம்மா.//

ஆத்திரை அம்மா,

மன்னிக்க வேண்டுகிறேன்.


பாலா

 
At 7:11 PM, Blogger VSK said...

ஆதிரை, மீண்டும் குற்ற நோக்கிலேயெ இவரைப் பார்க்கிறீர்கல்.

குடிப்பவரைத் தடுத்து நிறுத்த முடியாது.
முதலில் டாஸ்மார்க்கைப் பழித்து ஒரு பதிவு போட்டுவிட்டு, பின்னர் வரப்போகக் கூடிய இந்த கள்ளுக்கடையைப் பற்றி கேலி பேசுங்கள்.

இப்போதிருக்கும் எவரையும் விட இவரை ஒன்றும் குறைத்துச் சொல்ல முடியாது.

இவர்கள் அராஜகம் ஒழியவாவது இவர் வரணும்!

 
At 7:14 PM, Blogger krishjapan said...

sk சாரே, முக, உங்க செருப்பா இருப்பேன், துடப்பகட்டையா இருப்பேன்னு சொன்னப்ப, எள்ளி நகையாடியிருப்பீங்க இல்ல? அதே மாதிரிதான் இவரு கக்கூஸ் கழுவுவேன்னு சொல்றதையும் எள்ளி நகையாடனும். சினிமா வசனம் பேசிக்கிட்டிருக்கிறாரு, நீங்க என்னடான்னா வரவேற்று பாராட்டனுன்னு சொல்றீங்க...

சுனாமி நேரத்தில ஒன்னுமே செய்யாதவர் சொல்றதையும், கும்பகோணத்து பெற்றோருக்கு குடுக்கறன்னு சொல்லிட்டு, அதை மறந்துட்டு(!), அப்புறம் மாட்டிக்கிட்டவுடனே இமேஜ் போயிடுமுன்னு குடுத்தவரையும், உள்கட்சி ஜனநாயகத்த கொஞ்சமும் கடைபிடிக்காதவரையும், நேற்று கட்சியில ஆள சேத்து, இன்னிக்கி கட்சி எம்.எல்.ஏ வேட்பாளரா, ஜாதி வோட்ட நம்பி நிறுத்தரவரையும், (இன்னும் நிறைய சொல்லிக்கிட்டெ போலாம் சாரே...)நீங்க வேணுன்னா, வராது வந்த மாமணின்னு கொண்டாடுங்க, நாங்கள்லாம், குட்டையில ஊற வந்த இன்னொரு கூத்தாடி மட்டையின்னுதான் நினைப்போம்.

ஆதிரை, காமடி, கலக்கலுங்க. உங்க கைவரிசைய மத்தவங்க கிட்டயும் காமிங்க, வாய்விட்டு சிரிக்கறோம், சிக்குன்குனியா வராம தப்பிக்க முடியுதுதான்னு பார்க்கறோம்.

 
At 7:49 PM, Blogger Unknown said...

//தென்ன மரத்துல எத்தனையோ பொருட்கள் செய்யலாம்.
கள்ளுதான் செய்யணுமா? //

ஆதிரை,
கள் விசயத்தில் விவாதிக்கப்படுவது தென்னை அல்ல பனை.

 
At 9:00 PM, Blogger Pot"tea" kadai said...

எஸ்கே அண்ணாச்சி,

//இன்னொரு தகவல்!
தரம், அந்தஸ்து பார்க்காமல் கக்கூஸ் சுத்தம் செய்யப்படும் இடம் இன்றும் எது தெரியுமா?

புட்டபர்த்தி!//

நீங்க இங்க காமெடி ஏதும் பண்ணலியே?

தழை தொடங்கி பவுடர் வரை, கும்மி தொடங்கி குட்டியோடு கும்மாளம் வரை(அனைவரும் அல்ல...) எல்லாமே சுலுவா கெடச்சா எல்லாருமே டாய்லெட் என்ன வேறு எதுவேனாலும் கழுவலாம். நல்ல வேளை, சங்கர "மட" சுப்புனி மாட்டிக்கிட்டான், இல்லன்னா அவனோட மடம் தான் உலக அமைதிக்கும், ஒற்றுமைக்குமான் ஊற்றுகோல்னு சொல்லியிருப்பீங்க.

புட்டபர்த்தியில் டாய்லெட் கழுவி "பரட்டையன்"னுக்கு சேவகம் செய்பவர்கள் ஐதராபாத்திற்கு வந்து அங்குள்ள சேரியை ஒரு வாரம் சுத்தம் செய்யலாமே அது பரட்டையனுக்கு சேவகம் செய்வதை விட பல ஆயிரம் மடங்கு புண்ணியத்தை தேடித் தரும்.

கரிமேட்டு கருவாயன் விசயகாந்தன் அவர்கள் எவ்விதத்திலும் பிற அரசியல்வாதியை விட வேறுபட்டவர் இல்லை.ஆயினும் அவர் விளம்பரத்திற்காக வேண்டுமென்றால் கூட நானும் என் தொண்டர்களும் இன்று பீயள்ள போகிறோம் என்று கூறிவிட்டு ஒரு போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறிப் பறந்துவிடலாம். உண்மையில் பீயள்ளப் போவது அவரது தொண்டரடிபொடிகள் தாம். ஒரு தலைவராக மதித்து அதை அவரது தொண்டர்கள் செய்தால் கூட அது சாதனை தான். அவ்வாறு செய்யும் போது அதை பார்த்துக் கொள்ளலாம்.

 
At 7:17 AM, Blogger VSK said...

இப்போ நீங்க பண்ணுவதுதான் க்ராஸ் காமெடியா[Crass Comedy] இருக்கு பொட்'டீ'க்கடை தம்பியாப்புள்ளை!!

இது சம்பந்தமாக ஒரு நிகழ்வை, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வைச் சொன்னால் ஆபாசத்தை அள்ளித் தெளிக்கிறீர்கள்.

இதன் மூலம் எத்தனை தாய்மார்களையும், உங்கள் சகோதர சகோதரிகளையும் இழிவுபடுத்தி இருக்கிறீர்கள், ஒரு தனி மனிதன் மேல் கொண்ட வெறுப்பினால் என்று உணர்வீர்கள் என நம்புகிறேன்.

நான் சொல்வது அன்றாடம் நடப்பதைப் பற்றி.

நீங்களோ ஒரு வாரம் வந்து போனால் போதும் என்று!

புட்டபர்த்தியில் மட்டுமல்ல.

அனைத்து ஊர்களிலும் இருக்கும் சேவா சமிதிகள் இதை ஏதேனும் ஒரு வகையில் ஒரு கிராமத்தைத் தத்து எடுத்துக் கொண்டு செய்து வருகிறர்கள் என்பதை அறியவும்.

நவீனமயமாக்கப் பட்ட கக்கூஸ்கள் கட்டப்பட்டு, அவர்களுக்கு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, முதியோர் நலம் இன்னும் பல பணிகளை, பத்தாயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் சிறப்புற ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள் எண்ணற்ற இந்திய இளைஞர்கள்.
உங்கள் தனி மனிதத் தாக்குதலுக்கு இவர்களை தூற்ற வேண்டாம்.

இப்போதும் குரோம்பேட்டை, நெமிலிச்சேரி சென்று ஒரு மாதிரிக்காகவாவது என்ன நடக்கிறது என்று போய் பாருங்கள்.

பிறகு நான் சொல்வதின் பொருள் புரியும்.

புரிதல் நிகழ்தல் பூதலத்தில் புதிர்தான்!

 
At 12:11 PM, Blogger aathirai said...

//ஆயினும் அவர் விளம்பரத்திற்காக வேண்டுமென்றால் கூட
நானும் என் தொண்டர்களும் இன்று பீயள்ள போகிறோம்
என்று கூறிவிட்டு ஒரு போட்டோவிற்கு போஸ்
கொடுத்துவிட்டு காரில் ஏறிப் பறந்துவிடலாம்.
உண்மையில் பீயள்ளப் போவது அவரது தொண்டரடிபொடிகள் தாம்.//

கவலைப்படாதீர்கள்.அப்படி எல்லாம் நடக்காது.இவர்
only sound effect. அவ்வளவுதூரம் போட்டோ
எடுக்க வெல்லாம் போக மாட்டார்.

//முதலில் டாஸ்மார்க்கைப் பழித்து ஒரு பதிவு
போட்டுவிட்டு, பின்னர் வரப்போகக் கூடிய இந்த
கள்ளுக்கடையைப் பற்றி கேலி பேசுங்கள்.//

டாஸ்மாக்கிலும் கோலிவுட்டிலும் கோடிகள் கொட்டுவதன் காரணம்
market monopoly.
இதுல டாட்டா வேற மளிகை கடை தொறக்க போறாராம்.
டாட்டாவே கள்ளு இறக்கினாலும் ஆச்சரியம் இல்லை.

டாஸ்மாக்கிலாவது அரசாங்கத்துக்கு பணம் வருது.
கோலிவுட்டில் அதுவும் இல்லை.
டாஸ்மாக் பணத்திலிருந்து கோலிவுட்டுக்கு வரிச்சலுகை கொடுக்கறாங்க.
பேசாம கோலிவுட்ட டேக் ஓவர் பண்ணியிருக்கலாம்.

 
At 8:44 PM, Blogger bala said...

//கோலிவுட்ட டேக் ஓவர்//

ஆதிரை அம்மா,

Super Idea ..

அப்புறம் தினம் sun சினிமா தான் நமக்கு..

"கலைஞர் ஆட்சி வேண்டும் கலைஞர் ஆட்சி வேண்டும்" காமெடி சீரியல் தான்
தினம்.

ஒரே சிரிப்பு தான்..

பாலா

 
At 2:16 PM, Anonymous Anonymous said...

அப்புறம் அந்த கும்பகோனம் தீ விபத்துல அண்ணாத்தே குடுக்கறன்னு சொன்ன 10 லட்ச்சத்த எப்ப குடுப்பாராம்?

 

Post a Comment

<< Home