அஹிம்சைக்கு நேர்ந்த கதி
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் பள்ளிக்குழந்தைகளை குறிப்பாக பெண்களை சுட்டு தள்ளுவது பேஷனாகிவிட்டது.யாராவது ஒரு ஆள் இப்படி செய்தால், ஊடகங்கள் கொடுக்கும்விளம்பரத்தில் மேலும் சில ஆட்களுக்கு நாமும் இப்படி செய்தால்என்ன என்று தோன்றி ஒரு தொடர்கதையே நடக்கும்.
இரு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் வன்முறையே விரும்பாதஅமிஷ் பள்ளியில் போய் ஒருவன் பெண்களை சுட்டுத் தள்ளிஇருக்கிறான். இவர்கள் எந்த அளவுக்கு வன்முறையை விரும்பாதவர்கள் என்றால் கார் ஓட்டினால் விபத்துகள் நிகழும்என்று இன்னமும் குதிரை வண்டியில் பயணம் செய்பவர்கள்.இந்த குதிரை வண்டியின் பின்னால் கார் ஓட்டி ஒரு முறைநொந்து போனேன்.
இவர்கள் இந்த கமெர்சியல் உலகின் இரைச்சலை ஒதுக்கி தள்ளிவிட்டு,மின்சாரம் கூட இல்லாது வாழ்பவர்கள். ஆனாலும் நவீன உலகின் எச்சமாக வன்முறை இவர்களை தேடி போகிறது. கொஞ்ச நாட்களுக்கு சினிமாவில், வீடியோ கேமில்வன்முறை பரப்பப்படுவது பற்றி பேசுவார்கள். பின்னர், மீண்டும் கருத்து சுதந்திரத்தோடு, வன்முறை வீடியோ தயாரிக்க போய்விடுவார்கள்.
1 Comments:
அஹிம்சையை வைத்து ஒரு ஹிம்சை...
Post a Comment
<< Home