ullal

Friday, July 18, 2008

அணுசக்தி ஒப்பந்தம்

இடதும் வலதும் போடுகிற கூச்சலில் இடையில் இருப்பவர்களுக்கு மண்டை தான் குழம்புது. உன்னிப்பாக படிக்க நேரம் இல்லாததால் முடிந்தவரை செய்த ஆராய்ச்சியில் இந்த பதிவு எழுதப்படுகிறது.
முதலில் இந்தியாவின் எரிசக்தி தேவைகள் அதிகரித்துள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். இது முழுவதும் இந்திய மக்கள் ஏசி அறையில் உறங்குவதால் ஏற்பட்ட தேவை இல்லை. வெளிவாட்டுக்கு துணி தைத்து, கார் தயாரிப்பதலும், iam john smith from chicago என்று போனில் பொய் சொல்வதற்கும் எரிசக்தி செலவாகும். தினம் ஒரு கார் தொழிற்சாலை ஒப்பந்தம் கையெழுத்திடும் திமுக இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தியாவும் சைனாவும் ஆயில் தேவையை குறைத்துக்கொண்டால் ஆயில் விலை குறையும், தங்களுக்கு வேண்டாத வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு அமேரிக்கா புது தொழில் நுட்பங்களுக்கு தங்கள் மக்கள்தொகையை பயன் படுத்தும். இப்படி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க நலன் நிறையவே இருப்பதால்தான் இந்தியா மீது ஒருகாலத்த்தில் பொருளாதார தடை விதித்தவர்கள் இப்பொழுது அணு உலை கொடுக்கிறார்கள்.
ஹைடு சட்டத்தின் நோக்கமே ஆசியாவில் அணு ஆயுத பரவலை தடுப்பதுதான்.செனட்டர் ஒபாமா உட்பட அமெரிக்க செனட்டர்கள் ஹய்டு சட்டத்தில் பல திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் ஒன்று, அமேரிக்கா இந்தியாவுக்கு யுரேனியம் கொடுப்பதை நிறுத்தினாலும் மற்ற நாடுகளையும் யுரேனியம் கொடுக்கக்கூடாது என்று நிர்பந்திக்கும். அப்பொழுது அணு உலையில் செய்த முதலீடு வீணாகும். (இந்திய எம்பிகளுக்கு ஒப்பந்தத்தை பார்க்க கூட உரிமை இல்லை என்பது கேவலம்.)
இந்தா யுரேனியம் வைத்துக்கொள், நீ இதை என்ன வேண்டுமானாலும் செய் என்று நிச்சயம் அமேரிக்கா சொல்லாது. அணு உலைகளை கண்காணிப்போம் என்று சொல்வது நியாயமாகவே தோன்றுகிறது. இந்தியா எவ்வளவு யுரேனியம் தோண்டி எடுக்கிறது, ஆயுதம் தயாரிக்கிறதா என்று ரிபோர்ட் கொடுக்க வேண்டும் இந்தியா அணு ஆயுதங்கள் தயாரித்தால் அமேரிக்கா எரிபொருள் கொடுப்பதை நிறுத்தும். மற்ற நாடுகளிலும் எரிபொருள் வாங்க முடியாது.
அணு உலைகளின் கசிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் , வழ்க்குகள் நிறையவே உள்ளது, அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடு வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே இது ரொம்ப கஷ்டம். ஏற்கெனவே இருக்கிற அணு உலைகளால் ஏற்கெனவே சுற்று சுழால் கேட்டுள்ளபோது புது உலைகள் எங்கு நிறுவுவார்கள்.? பாவம் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள். மொத்தத்தில் இடது சாரிகள் சொல்வது போல இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு HR 5682 என்று GOOGLE செய்யவும.

1 Comments:

At 10:52 AM, Blogger Voice on Wings said...

சூப்பர்.

 

Post a Comment

<< Home