ullal

Thursday, January 18, 2007

ஷில்பா ஷெட்டி,சத்யராஜ், கருத்து சொதந்திரம்

நம்ம ஷில்பா ஷெட்டிய லண்டனில் ஒரு ரியாலிடி டிவிநிகழ்ச்சியில சில அம்மணிகள் நாய், கருப்பு, நீ சமைச்சா சாப்பிட மாட்டேன்னு ரேசிஸ்ட்டா (தீண்டாம?) திட்டிட்டாங்களாம்.அக்கா டிவியில அழுதுட்டாங்க. நம்ம பாரத வம்சாவளி எம்பி இதை இதையெல்லாம் ஒளிபரப்பும்போது டிவி நிறுவனங்கள் கண்காணிக்கறது இல்லையான்னு அவங்க பார்லிமெட்டில் கோவமா கேட்டார். நம்ம டோனி ப்ளேர் அப்பாவியா முகத்தை வெச்சுட்டு'வாஸ்தவம் இதெல்லாம் எனக்கு புடிக்கலே. இந்த நிகழ்ச்சியை நான் பாக்கலே'ன்னு சொன்னார். (நன்றி-பிபிசி டிவி)அவரு பாவம் சதாமை தூக்குல போட்டதே அவருக்கு தெரியாது. இதையெல்லாம் போய் அவர கேட்டுகிட்டு..

இதுக்கப்பறம் நம்ம இந்தியாவுக்கு பயங்கர கோவம் வந்துருச்சு.ரோட்டுல கொடும்பாவி எல்லாம் கொளுத்தி அவங்க கோவத்த காமிச்சாங்க. நம்ம வெளியுரவு மந்திரி 'இது எங்களுக்கு ரொம்ப கவலை அளிக்குது. இந்தியாவுல நாங்க எப்பவுமே ரேசிசத்த எதிர்க்கறோம்'னு சொன்னார்.

இந்தியாவுக்குள்ள இப்படியெல்லாம் நடக்கறதே கெடையாது. ஒரிசால சில மக்கள் அனுமதியில்லாம கோயில்ல நுழைஞ்சுட்டாங்கன்னு உயர்சாதிகாரர்கள் (பத்திரிகைகள் அப்படிதான் சொல்லுது) பரிகார பூஜை பண்ணாங்களாம். அப்புறம் மஹாராஷ்ட் ராவுல அங்க இங்க வெட்டுக்கொலை,ரயிலெரிப்பு, பத்திரிகைகளில் சாதி வசவுகளுடன் கதைகள் எல்லாம் வருது.நம்ம பார்லிமென் டிலும் எப்ப இத பத்திபேசுவாங்க, மன்மோகன் சிங் 'எங்களுக்கெல்லாம் வருத்தமா இருக்கு'ன்னு பேசுவாரு?

அப்புறம் சத்யராஜ் படத்துல பிள்ளையார் கிட்ட கிண்டலா பேசினார்னு சென்சார் கட் பண்றாங்களாம். அவருக்கு எல்லா கருத்து சுதந்திரமும் இருக்கு. இதையெல்லாம் கட் பண்ணக்கூடாது. அப்படியே அரேபியா, ரோம்ல இருக்க சாமிய பத்தியும் கிண்டல் பண்ணணும்னு யோசனை சொல்றோம். அப்பாடா, நமக்கு எப்பவுமே பக்கத்து பெட் பாப்பாவ பத்திதான் கவலை.(காப்பிரைட் நன்றி முகமூடி)

அப்பறம் ஐச்வர்யாராய் ஏழுகல் வைர தோடு அரக்கு புடவை அணியப்போறாராம். அபிஷேக் பச்சன் பஞ்சகச்சம் கட்டுவாரான்னு தினமலரில் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்காங்க. சீக்கிரம் கண்டுபிடிச்சு இந்த செய்தியை சொல்ல மாட்டேங்கறாங்க. அதுக்குள்ள என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு.

ஜெய்ஹிந்த் ஜெய் இந்துயா

5 Comments:

At 8:06 AM, Blogger மாசிலா said...

தமாசாவே இருக்குது இந்த் கூத்தெல்லாம். இந்தியாவுலே ரேசிஸ்மு இல்லையாம். அப்பிடியே கையோட கை தலித்னு யாருமே கிடையாதுன்னு சொல்லி இருக்கலாம்ல?. கொஞ்ச நாள்ள சுத்தமா எல்லோரையும் ஜினோசைட் முறையில ஒழிச்சிகட்டி இருப்பாங்களே!

 
At 8:30 AM, Blogger aathirai said...

//கொஞ்ச நாள்ள சுத்தமா எல்லோரையும் ஜினோசைட்
முறையில ஒழிச்சிகட்டி இருப்பாங்களே//

சத்தம் போட்டு சொல்லாதீங்க

 
At 4:23 PM, Anonymous Anonymous said...

இந்தியாவில் நடக்கும் எதையும்
விமர்சிக்கும் உரிமைநமக்குண்டு
ஆனால் நமக்கு வெளியே யாராவது
சீண்டினாலோ நம்மை கேவலப்படுத்தினாலோ அது ஒவ்வெரரு
இந்தியனுக்கும் அவமானம்.


(நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என
நினைக்கிறேன்)

 
At 6:02 PM, Blogger aathirai said...

இந்தியால நடக்கறதுக்கெல்லாம் கொடும்பாவி
கொளுத்தினா தினமும் ப்ர்மெனன் ட்டா அணையா விளக்கு
மாதிரி எரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்.

 
At 2:20 AM, Blogger பாரதி தம்பி said...

//இந்தியால நடக்கறதுக்கெல்லாம் கொடும்பாவி
கொளுத்தினா தினமும் ப்ர்மெனன் ட்டா அணையா விளக்கு
மாதிரி எரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்//

உண்மை.
உங்கள் கட்டுரை நல்ல நக்கல் தொணியில் வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< Home