ullal

Wednesday, August 01, 2007

இன்றைய காமெடி

காமெடி -1

நாட்டின் பாதுகாப்பு துறைக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பாகசெயல்படும் ஒரு 'தாதா'வுக்காக தமிழ்நாட்டு செல்வத்தை கொள்ளை போக விடுவதா. இது தான் நாட்டு பற்றோ? - முதல்வர் மு.க.

தாத்தா இப்படி பளிச்சுன்னு உண்மைய வெளிய சொல்லலாமா? தமிழ்நாட்டு செல்வத்தை டாடா கொள்ளை அடித்தால் என்ன தாதா அடித்தால் என்ன ? T க்கு பதிலா D போடணும். இதுதான் தமிழ் தேசிய பற்றா?

கூடவே ஒரு சந்தேகம். தாதா என்பது தமிழ்ச் சொல்லா? இந்த சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.


காமெடி -2 "உயர்கல்வி படித்தவர்கள் அரசியலில் தலையிட்டால் அரசியல் செம்மைப்படும். ஆனால், அரசியல்வாதிகள் உயர்கல்வியில் தலையிட்டால் ஊழலுக்கும் ,உதவாக்கரைத் தனத்திற்குமே வழி வகுக்கும் " (விஜயகாந்த்)
உயர்கல்வியில் சினிமாக்காரர்கள் தலையிடுவதைப் பத்தி ஏதாவது கருத்து வெச்சிருக்கீங்களா தல?

2 Comments:

At 5:18 PM, Blogger வவ்வால் said...

பரிசு என்ற தூண்டில் போட்டும் தாதாவுக்கு விளக்கம் சொல்ல யாருமே வரலையே! நமக்கு அதெல்லாம் வேண்டாம், என்னையே வலையுலகின் no-1 தாதா என்று ஒத்துகிட்டா அதுவே போதும்.

தாதா என்பது தமிழ் அல்ல வட மொழி , ஹிந்தி , வங்காளம் இரண்டிலும் இருக்கு , தாதா என்பது "பெரிய மனிதர்" என்று குறிக்க மரியாதைக்கு பயன்பட்டது, தாதாபாய் நவ்ரோஜி என்ற சுதந்திர போராட்ட வீரர் நினைவிருக்கா, தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை. தாதா என்பதற்கு மற்றொரு பொருள் தயாள உள்ளம் கொண்டவர், கொடைவள்ளல் என வரும் .

டாடா என்பது கூட கொஞ்சம் போல ஸ்பெல்லிங்க மாத்தி போட்ட தாதா தான் என்று நினைக்கிறேன். நியுமரலாஜி பார்த்து இருப்பார் போல ஜாம்ஷெட்ஜி டாடா :-))

பேட்டைல பெரிய ஆள் எல்லாம் இப்போ ரவுடிங்க என்பதால் தாதா நா ரவுடினு ஆகிடுச்சு!

இப்போ சொல்லுங்க நான் வலைபதிவுலகின் தாதாவா இல்லையா?

 
At 7:48 AM, Blogger aathirai said...

அடடா, அடடா ! தாதாவுக்கு இவ்வளவு நல்ல அர்த்தம் இருக்கா?

கடைசியில் தாத்தா இந்தி பேச ஆரம்பிச்சுட்டார். :(

 

Post a Comment

<< Home