ullal

Thursday, June 28, 2007

மூலிகை பயிரிடுபவர்கள் முட்டாள்களா?

நெல்லுக்கு நல்ல விலை வந்தால் விவசாயி அதை பயிரிட மாட்டானா? அவர்கள் அறிவில்லாமலா மூலிகையும்மூங்கிலும் பயிரிடுகிறார்கள் ?
இந்திய மூலிகைகளின் டாலர் மதிப்பு இராக்கில் இருக்கும் ஆயில் மதிப்பை விட அதிகமானது. அத்தனைபில்லியன்கள் மூலிகைகளில் முடங்கி கிடக்கிறது. உண்மையாக சொல்லப் போனால் இந்த மூலிகைகளைபத்திரமாக பாதுகாத்து அழிந்துவிடாமல் வைத்திருந்தவர்கள்பொருளாதாரத்தில் மிகவும் பிந்திய இந்திய பழங்குடிகள்.


பத்து டாலர் கொடுத்து மூலிகையை வாங்கிக்கொண்டு இந்திய விவசாயியை பணக்காரர் ஆக்குகின்றன பன்னாட்டு கம்பெனிகள். விவசாயிகள் பணக்காரர்கள் ஆவது சிலருக்குபிடிக்கவில்லை போலும். பணம் கிடைக்காத நெல்லைவிட்டுவிட்டு மூலிகை பயிரிடுபவன்தானே புத்திசாலி!
அவனை விட புத்திசாலி யார் என்று கேட்டால் பத்து டாலர்கொடுத்து மூலிகையை வாங்கி அதையே மருந்தாக மாற்றிமூலிகை விற்றவனுக்கே மீண்டும் முன்னூறு டாலருக்கு மருந்து விற்கிறானே அவன் இவனை விட அதி புத்திசாலி!

ஏதோ தோன்றியது சொல்லிபுட்டேன்.

3 Comments:

At 1:40 PM, Blogger வவ்வால் said...

ஆதிரை ,

மூலிகைப் பயிரிடுவது அத்தனை ஒன்றும் முட்டால் தனமான லாபம் வராதா தொழில் அல்ல அது மிகுந்த அறிவும் , பணமும் தேவைப்படும் தொழில் அது லாபகரமானது என்பதை செல்வனின் பதிவிலும் தெரிவித்துள்ளேன். உங்கள் பதிவு யாருக்கு எதிர்வினை எனத்தெரியவில்லை, எனவே உங்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்!

 
At 6:21 AM, Blogger aathirai said...

வவ்வால்,
என்னுடைய பழைய பதிவுகளை பாருங்கள். பணம் கிடைக்கிறது
என்பதற்காக் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சத்துணவு சாப்பிட்டு
பள்ளிக்கு போய் படிக்கும் (?)குழந்தைகள் இருக்கும் நாட்டில்
விளை நிலங்களை ஜத்ரோபா போன்ற தேவையற்ற பயிர்களுக்கு
பயன்படுத்துவது சரியாகுமா?

 
At 12:33 PM, Anonymous Anonymous said...

//மருந்தாக மாற்றிமூலிகை விற்றவனுக்கே மீண்டும் முன்னூறு டாலருக்கு மருந்து விற்கிறானே//

என்னாங்க!... பகல் கொள்ளையா இருக்கு.
பாவங்க விவசாயிங்க,... அவங்கள விட்டிருங்க.....

 

Post a Comment

<< Home