ullal

Thursday, May 24, 2007

குருவாயூரும் கோல்மாலும்

எத்தனை முறை ஷொன்னாலும் இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு ஷிலதெல்லாம் புரியாது. உங்கள் ஊனக் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை எல்லாம் ஏன் புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்? பெரியவர்கள் எல்லாம் காரண காரியத்தோடுதான் ஆகம விதிகளை எழுதியிருப்பார்கள். அது உங்களுக்கு புரியாவிட்டால் யார் என்ன செய்ய முடியும்? எல்லாம் அவன் விதித்தபடியே நடக்கிறது.

நாங்கள் என்ன தினமும் குருவாயூர் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை சோதனை போட்டு மதச் சான்றிதழ் சரி பார்த்தா உள்ளே விடுகிறோம்? அழகாக ஒரு பலகை வைத்திருக்கிறோம். இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று. பக்தர்கள் ஏன் அதை புரிந்து நடந்துக்கொள்ள கூடாது? தினமும் வரும் பக்தர்களில் பிறமதக்காரர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அதற்கெல்லாம் தீட்டு கழிக்கிறோமா? இல்லையே? அவர்கள் பிற மதத்தவர்கள் என்று எங்களுக்குதான் தெரியாதே! இதனால் சாமி தீட்டு தாங்காமல்எழுந்து ஓடியா விட்டது?

ஆனால் இந்த பிரபலங்கள் விஷயம் அப்படி இல்லை. பிரபலமானகிருத்துவர்கள் இங்கு வரும்பொழுது வேற்று மதக்காரர்கள் இங்கு வருவது 'எல்லாருக்கும்' தெரிந்துவிடுகிறது. நாங்களும் ஆகம விதிகளின்படிநடப்பதாக ஒரு நாடகம் நடத்த வேண்டியிருக்கிறது.
இந்து கோயில்களில் பிற மதத்தவர்கள் வந்தால் பாதுகாப்பு பிரச்சினை என்று எங்கள் சிறை புகழ் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சங்கராச்சாரி சாமிகள் சொல்லியிருப்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இது போன்ற விஷயங்களை பார்த்துக்கொள்ள தானே நாங்கள் இருக்கிறோம். பிறகு நீங்கள் ஏன் வீணாக மூளையை குழப்பிக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்?

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அதனால் மற்றவர்கள்உங்கள் வீட்டிலேயே குருவாயூரப்பனை வணங்குங்கள். ஆனால் இந்துக்களே!நீங்களும் இப்படி செய்த்விடாதீர்கள். அவசியம் கோவிலுக்கு வந்து தட்டில் ஐம்பது நூறு பறக்காமல் போடுங்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணா!

0 Comments:

Post a Comment

<< Home