தமிழ்மணம் பாசிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது
தமிழ்மணத்தை கேள்வி கேட்ட குற்றத்திற்காக சில பதிவர்களை வலை திரட்டியிலிருந்து நீக்கி பாசிப்பாதையில் அடியெடுத்து வைக்கிறது.
பாசி எப்பொழுதுமே வழுக்கும் என்று அனைவருக்கும் தெரியும். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு நீங்கள் பாசிப் பாறையில் நடனமாடுகிறீர்கள். விரைவில் பாசி வழுக்கி காலை உடைத்துக் கொள்வீர்கள் என்று (பாசி எதிர்ப்பு கழகம்)பா.எ.க. எச்சரிக்கிறது.
எண்பது கோடி இந்துக்கள் பாசிக்கு எதிரானவர்கள். ஜப்பானியர்களைப்போல கடல் பாசி தின்பவர்கள் இல்லை. பாசி மாலைகளைக் கூட நாம் அணிவதில்லை.பாசிக்கு எதிரான இந்துக்கள் அனைவரும் பாசி வழியில் நடக்கும் தமிழ்மணத்திற்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.
ஜெய்ஹிந்த்!
6 Comments:
ஒ...ம...க
என்னாங்க அசிங்கமா தெரியர்து...
என்னவோ...ஒமகல சேரனும்னா எதனா பார்மாலிட்டீஸ் இருக்கா...
இல்ல அமுக மாதிரி ஒமகன்னு நாங்களே போட்டுக்க வேண்டியது தானா?
ஒமக ஒரு பின்னவீனத்துவ இயக்கமாக என் மண்டையில் மணியடிக்கிறது.
பாசிப் பாறையில் ஆடி வழுக்கி வழுக்கி விழற ஆட்டம் எனக்கு ரொம்ப பிரியம்
ஒ.ம.க வுக்கு விண்ணப்ப படிவம் எல்லாம் கிடையாது. வேறு
நல்ல பெயர் இருந்தால் கொடுங்கள்.
பொட்டிக்கடை,
கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஹாஹாஹா
டைமிங் ஜோக்.
ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.
சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.
நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.
எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.
ஜெய்ஹிந்த்!!!
யக்கா! நான் தினமும் பாசி மாலை, பாசிமணியில் செய்த காதணி அணிவதால், பாசி எதிர்ப்புக் கழகத்தை வன்மையா.. ம்ஹும், கொஞ்சம் மென்மையாவே கண்டிக்கிறேன்..
(என்ன இருந்தாலும் நம்ம ஆதிரை அக்கா தொடங்குன கழகமாச்சே... :) )
Post a Comment
<< Home