ullal

Thursday, March 22, 2007

அம்பானியிசமும் மக்கள் நன்மையும்

பொய்:அம்பானி கடைகளில் ப்ரெஷ்ஷாக காய்கறிகள் கிடைக்கும்.மற்ற கடைகளில் இப்படி கிடைக்காது.

உண்மை:மற்ற கடைகளில் ப்ரெச் காய்கறிகள் விற்பது ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை. நான் சென்ற முறை இந்தியா வந்திருந்தபோதுபெரியார் மாவட்ட குக்கிராமத்தில் மளிகைக்கடையில் freezerவைத்து காய்கறிகள் வியாபாரம் செய்வதை கண்டேன்.கடை உரிமையாளர் வெளியே போக வேண்டியிருந்ததால் நானும் ஒரு நாள் இந்த கடையில் வியாபாரம் செய்தேன்.

கொஞ்சம் ஐஸ் இருந்தால் போதும் கோழி மீன் கூட ப்ரெஷ்ஷாக விற்கலாம்.(அமெரிக்காவில் கிடைக்கும் ஐசில் வைத்த கோழியை விட இந்தியாவில்அப்பொழுதே அன்று வெட்டிய கோழி அதிக சுவை உள்ளது ).வெஜிடேரியன் வலைப்பதிவாளர்களே, உங்கள் அசைவ நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் சில ஊர்களில் குளிர்பதன கிடங்குகள் கட்டப் போவதாகஅறிவித்தார்.( செய்தாரா தெரியவில்லை.) இவ்வளவு பெரிய கோயம்பேடு மார்கெட்டில் குளிர்பதன வசதி ஏன் செய்யவில்லை? இதை செய்வதும் பெரியபிரச்சினை இல்லை.

போட்டி இல்லாத இடத்தில் மக்களுக்கு நன்மை ஏற்படாது. விவசாயிகளிடம் ரிலையன்ஸ் நேரடியாக சரக்கை மொத்தமாக வாங்கும். இதனால் விலை குறையும் என்கிறார்கள். முதலில் நல்ல சரக்கை ரிலையன்ஸ் வாங்கிச் சென்றபின் உள்ள மிச்ச மீதிகளை மற்ற கடைக்காரர்களுக்கு கொடுப்பார்கள். நாளடைவில்மற்ற கடைகள் மூடப்பட்டு ரிசையன்சில் மக்கள் காய்கறிகள் வாங்குவார்கள். அதற்கப்புறம் அம்பானி வைத்தது தான் விலை. சம்பளத்துக்கு உழைப்பவனையும் சிறு தொழில்செய்பவனின் உழைப்பையும் ஒப்பிடவே முடியாது. சிறு தொழில்காரன் தனக்காகமுழு நேரமும் உழைப்பான். (மாம் அண்ட் பாப் கடைகளுடன் நம்மால் போட்டியிட முடியாது என்று சில அமெரிக்க பெரிய நிறுவனங்கள் புலம்புகிறது.)

அம்பானிக்கு வங்கிகள் மலிவு வட்டியில் கடன் கொடுக்கும். அன்றாடம் காய்கறிவாங்கி விற்பவர்கள் தண்டல் வட்டி வாங்கி வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு பத்து சதவிகிதம் என்று நினைக்கிறேன். சிறு தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவிசெய்தால் வீட்டுக்கே ப்ரெஷ் காய்கறிகள் கொண்டு வரலாம். பெரிய கடைகள் வீட்டில் டெலிவரி செய்யுமா? லோக்கல் நாடார் கடையில் லிஸ்ட் கொடுத்தால் வீட்டுக்கேமொத்த மளிகை சாமானும் வந்துவிடும்.

இதோ இந்த அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் கடைக்கு போய் வருவதற்கு எப்படியும்இரண்டு மணி நேரம் செலவாகிறது. ஆரம்பத்தில் இது நன்றாக இருந்தாலும், வார கடைசியில் யார் க்ளாசுக்கு போவது , யார் கடைக்கு போவது என்றுவாக்குவாதமாக இருக்கும். இங்கும் சில சிறிய கடைகள் உள்ளது. இந்த கடைகளில்ஈசியாக காரை பார்க் பண்ணிவிட்டு வேகமாக வாங்கி வந்து விடலாம். பெரிய லைன் கூட இருக்காது.

வால்மார்ட்டைவிட ரிலையன்சால் இன்னும் அதிக ஆபத்து உள்ளது. வால்மார்ட் ரீடெய்ல் வியாபாரம் மட்டுமே செய்யும். வங்கி துறையில் இவர்கள் நுழையமுயற்சித்து அமெரிக்காவில் அந்த திட்டத்திற்கு ஆப்படிக்கப்பட்டது. ஆனால்இந்திய அம்பானியிசத்தில் ரிலையன்சே துணி, பெறட் ரோகெமிகல், எலெக்ற்றிகல்சாதனங்கள், டெலிகாம், சிமென்ட் etc etc தொழில்களையும் செய்வதால்மளிகைக் கடைகள் விறிவடைந்து ரிலையன்ஸ் க்ரூப்பின் மற்ற தயாரிப்புகளையும் விற்பார்கள். இவர்களுடைய போட்டி நிறுவன பொருட்களை விற்க விடாமல் செய்வார்கள்.கிட்டத்தட்ட சன் டிவி அங்கங்கே ஜெயாவை ஆப் செய்வது போல. மோனாப்பலியால்மக்களுக்கு ஒரு நன்மையும் விளையாது. அப்பொழுது அந்த பொருட்களைதயாரிக்கும் நிறுவனங்களும் பாதிக்கப்படும்.

இதனால் விவசாயிகளின் பொருட்களுக்கு அதிக விலை கிடைக்குமா அல்லது அந்த லாபத்தையும் ரிலையன்சே விழுங்கிவிடுமா என்று இப்பொழுது சொல்ல முடியவில்லை. மற்ற வியாபாரிகளை துரத்திவிட்டால் அப்புறம் ரிலையன்ஸ்சொல்லும் விலைக்கு தானெ இவர்கள் விற்க வேண்டி வரும். இல்லையென்றால்சரக்குகள் விளைச்சல் வீணாகப் போகும்.

மாதம் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள்ரிலையன்சில் அஞ்சு ரூபாய் குறைவாக காலிப்ளவர் கிடைக்குது என்றுபின்னூட்டம் போடுவதைப் பற்றி என்னத்த சொல்வது?

3 Comments:

At 6:45 PM, Blogger  said...

ஆதிரை,
உழைக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சரியான நேரத்தில் இந்த பதிவை இட்டுள்ளீர்கள், கிராமப்புறங்களில் விவசாயம் நசிந்து நகரங்கள் நோக்கி துரத்தப்பட்டு காய்கறி சந்தையில் ஆண்டுகணக்காக உழைத்து இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிடவில்லை இன்றும் அன்றாடங்காய்ச்சியாகத்தான் இருக்கிறார்கள், அந்த வாழ்க்கையும் பறிக்கப்படுகிறது என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? எதுவும் செய்வோம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள் அதன் தொடக்கமாகதான் இன்று அவர்களது அடையாள உண்ணாவிரதம் தொடங்குகிறது...

//ஐசில் வைத்த கோழியை விட இந்தியாவில்அப்பொழுதே அன்று வெட்டிய கோழி அதிக சுவை உள்ளது//

எந்தவொரு வசதியும் இல்லாமல் காய்கறிகள் அழுகிவிடும் என்ற நெருக்கடியில் நம் வியாபாரிகள் விற்கிறார்களே அதுதான் பிரஷ்சான காய்கறி மாறாக 10,15 நாள்கள் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்பதற்கு பெயர் பிரஷ்சான காயகறியா? இப்போதைய நம்முடைய காய்கறி மார்கெட்களில் போட்டியின் காரணமாக அக்கம்பக்கத்து கடைகளிலேயே பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்க முடியும், அம்பானி கடையில் அப்படி வாங்க முடியுமா?

//அம்பானிக்கு வங்கிகள் மலிவு வட்டியில் கடன் கொடுக்கும். அன்றாடம் காய்கறிவாங்கி விற்பவர்கள் தண்டல் வட்டி வாங்கி வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு பத்து சதவிகிதம் என்று நினைக்கிறேன்//

நூறு சதவீதம் உண்மை..

//மாதம் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள்ரிலையன்சில் அஞ்சு ரூபாய் குறைவாக காலிப்ளவர் கிடைக்குது என்றுபின்னூட்டம் போடுவதைப் பற்றி என்னத்த சொல்வது?//

நன்றி கெட்டதனமென்றுதான் சொல்ல வேண்டும்..

தோழமையுடன்
ஸ்டாலின்

 
At 7:33 AM, Blogger Raj said...

ayya
ellame sariya than solreenga. Aana ellame kettatha illengalae...

ippadi than reliance mobile business arambikkumpodhum sonnanga.. unmai-la nadanthathu enna? ippa ellam malivana rate-kku kedakitha illaiya?

Potti pottukittu ellarum retail market-la varumpodhu... consumer-kku labam thanungalae ayya...

Aana nejam than.. ella periya modhalaikalum ulla vanthu siru tholil meenungala ellam sappittu elam vidapovuthunga...

enna ketta.. olungana muraila vivsaigalum, siru tholil modhalaligalum tholil panna. .ithukku vera valila appu vakkalam.

 
At 7:36 AM, Blogger psk said...

sir, \you made some points. but the whole things does't happen in india since as per survey only they may get 30 percent of retails sales. why u are not comparing food world and other retail chains in india with reliance. only upper class and middle upperclass peoples will go to this .

 

Post a Comment

<< Home